- Home
- Cinema
- மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி பயில்வான் சொன்னதெல்லாம் உண்மையா?? அழகான ஆன்ட்டிகள் தான் டார்கெட்டா?
மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி பயில்வான் சொன்னதெல்லாம் உண்மையா?? அழகான ஆன்ட்டிகள் தான் டார்கெட்டா?
மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் கொடுத்தால் மாதம்பட்டி மீது பயில்வான் சொன்ன குற்றச்சாட்டுகள் உண்மையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Madampatty Rangaraj Controversy
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் மெஹந்தி சர்க்கஸ், பெண்குயின் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் தனது சமையல் கலையின் மூலம் வெளியுலகுக்கு தெரிந்தார். அவரது சமையல் பிடித்துப் போய் முன்னணி திரை பிரபலங்கள், அரசியல் பிரபங்களின் வீட்டு விஷேங்களில் அவருக்கு ஆர்டர்கள் குவிந்தன. இதனால் மாதம்பட்டி ரங்கராஜை தூக்கிய விஜய் டிவி அவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக்கியது.
மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம்
மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஸ்ருதி என்பவருடன் திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருபக்கம் குடும்ப வாழ்க்கை, மறுபக்கம் புகழ் வெளிச்சம் என்ற நன்றாக சென்றிருந்த மாதம்பட்டியின் வாழ்க்கையில் சமீப காலமாக பெரும் புயல் வீசி வருகிறது. அவர் தன்னுடைய ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை 2வது திருமணம் செய்தது பட்டிதொட்டியெங்கும் பேசுபொருளானது. அது மட்டுமின்றி தான் 6 மாதமாக கர்ப்பமாக இருப்பதாக ஜாய் கிரிசில்டா சொன்னது மாதம்படியின் நடத்தை மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
மாதம்பட்டி ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார்
இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். சென்னையில் கோயிலில் வைத்து தன்னை திருமணம் செய்த அவர் சேர்ந்து வாழ மறுப்பதாக சென்னை காவல் ஆணையகரத்தில் அளிக்கும் புகாரில் தெரிவித்துள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அண்மை காலமாக வெளியாகி வந்தன. இந்நிலையில் தான் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டாவின் புகார் வெளிவந்துள்ளது.
பயில்வான் ரங்கநாதன் பரபரப்பு குற்றச்சாட்டு
மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது திருமணம் பற்றி பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து பகீர் தகவல்களை தெரிவித்து வந்தார். அதாவது கணவனை விட்டு பிரிந்த நடிகைகள் தான் மாதம்பட்டியின் டார்கெட். அந்த நடிகைகளுடன் அவர் டேட்டிங் செல்வார். ஏற்கனவே மூன்று நடிகைகளுடன் அவர் லிவ்விங் டூகெதராக வாழ்ந்தார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார்.
திருமணம் செல்லாது
மேலும் மாதம்பட்டியும், ஜாய் கிரிசில்டாவும் கோவிலில் வைத்து மாலையை மாற்றிக்கொண்டார்கள். இது சட்டப்படி திருமணம் அல்ல. ஏனெனில் ரிஜிஸ்டர் ஆபீஸில் பதிவு செய்தால் தான் முறைப்படி திருமணம் செல்லுபடியாகும். இந்து அறநிலையத்துறை இந்த திருமணத்தை ஒத்துக் கொள்ளாது என்று கூறிய பயில்வான் ரங்கநாதன், ஜாய் கிரிசில்டா கர்ப்பாமானதால் மட்டுமே இவர்களின் திருமணம் வெளியுலகுக்கு தெரியவந்தது என்று கூறினார். பயில்வான் ரங்கநாதன் சொன்னபடி மாதம்பட்டி ரங்கராஜின் வாழ்க்கையில் அடுத்தடுத்து சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆகவே பயில்வான் ரங்கநாதன் சொன்னது எல்லாம் உண்மையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

