திருமணத்துக்கு பின் அடித்த ஜாக்பாட்; ரெட்ரோ நாயகனுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்!
திருமணத்துக்கு பின்னர் சினிமாவில் பிசியாக நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு, தற்போது பிரம்மாண்ட பட வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளதாம்.

Keerthy Suresh - Suriya alliance again? Suriya 46 Update! தென்னிந்திய திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் அண்மையில், பாலிவுட்டிலும் எண்ட்ரி கொடுத்தார். கடந்த ஆண்டு அட்லீ தயாரிப்பில் வெளியான பேபி ஜான் படம் மூலம் இந்தியில் ஹீரோயினாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். அப்படம் படுதோல்வி அடைந்தது. இதனால் பாலிவுட்டுக்கு டாடா காட்டிவிட்டு மீண்டும் தென்னிந்திய படங்களில் கவனம், செலுத்த முடிவெடுத்து உள்ளாராம் கீர்த்தி சுரேஷ்.
Suriya - Keerthy Suresh
சூர்யாவுடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தற்போது ஜாக்பாட் வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி வாத்தி, லக்கி பாஸ்கர் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் தான் ஹீரோயினாக நடிக்க உள்ளாராம் கீர்த்தி சுரேஷ். அதுவும் இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். சூர்யாவின் 46-வது படமாக இது உருவாக உள்ளது. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... பாய் கட் ஹேர் ஸ்டைலில் இணையத்தை கலக்கும் கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்!
Suriya 46 Heroine Keerthy Suresh
சூர்யா - கீர்த்தி சுரேஷ் கூட்டணியில் 2வது படம்
நடிகர் சூர்யாவும், நடிகை கீர்த்தி சுரேஷும் இதற்கு முன்னர் விக்னேஷ் சிவன் இயக்கிய ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். அப்படம் தோல்வி அடைந்தது. அதன் பின்னர் சுமார் 7 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சூர்யாவுடன் கூட்டணி அமைத்துள்ள கீர்த்தி சுரேஷ், இப்படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
keerthy suresh Husband Antony
திருமணத்துக்கு பின் கீர்த்தி சுரேஷுக்கு அடித்த ஜாக்பாட்
நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் ஆனது. இவர் தன்னுடைய பள்ளி பருவ காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை தான் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பெரியளவில் படங்களில் நடிக்காமல் இருந்ததால், நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவை விட்டு விலக உள்ளதாக செய்திகள் பரவ தொடங்கின. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது சூர்யா 46 படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகி உள்ளார் கீர்த்தி. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... வட போச்சே; பேபி ஜானுக்காக கீர்த்தி சுரேஷ் நிராகரித்த 700 கோடி வசூல் படம்; எது தெரியுமா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.