- Home
- Cinema
- தமிழ் சினிமாவிற்கு கிடைத்த இளம் தலைமுறை இயக்குனர்கள்! 2026-ல் இயக்குனர்களாக உதயமாகும் கென் மற்றும் ஜேசன் சஞ்சய்!
தமிழ் சினிமாவிற்கு கிடைத்த இளம் தலைமுறை இயக்குனர்கள்! 2026-ல் இயக்குனர்களாக உதயமாகும் கென் மற்றும் ஜேசன் சஞ்சய்!
New Generation Directors in Tamil Cinema 2026:தமிழ் சினிமாவில் நட்சத்திரங்களின் வாரிசுகள் கேமராவுக்கு முன்னால் நிற்பதை விட, பின்னால் நின்று கதைகளை இயக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 2026-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு ஒரு மைல்கல்லாக அமையப் போகிறது.

New Generation Directors in Tamil Cinema 2026 கென் கருணாஸ் ஜேசன் சஞ்சய் இயக்குனர் அறிமுகம்
அரசியல் கட்சித் தலைவரும், நடிகருமான கருணாஸின் மகனான கென் தற்போது நடிகரையும் தாண்டி இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். ஆம், வெறும் 60 நாட்களில் ஒரு படத்தை இயக்கி அதில் நடிக்கவும் செய்துள்ளார். அந்தப் படம் வரும் 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. பொதுவாக தமிழ் சினிமாவைப் பொறுத்த வரையில் வாரிசு நட்சத்திரங்களின் பிரபலங்கள் பெரும்பாலும் சினிமாவில் நடிகர் அல்லது நடிகையாக வலம் வருவார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் அதில் அவர்களுக்கு ஆர்வம் இருக்கிறதோ இல்லையோ சினிமாவில் ஒரு இயக்குநராக வேண்டும் என்று ஆவலோடு இப்போது இயக்குநர்களாக அவதாரம் எடுத்துள்ளனர்.
Ken Karunas First Movie Direction
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் கென் கருணாஸ். தனது அப்பாவான கருணாஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தவர் தான் கென் கருணாஸ். தன் அப்பாவின் படத்திற்கு மட்டுமே நடித்துக் கொண்டிருந்த கென் கருணாஸ் வெற்றிமாறன் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான அசுரன் திரைப்படத்தில் தனுஷிற்கு இளைய மகனாக கென் கருனாஸ் நடித்திருந்தார். கென்னின் நடிப்பு அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்தது. திரைப்படத்தில் படிப்புதான் மிகச்சிறந்தது என்று இவருக்கு எழுதப்பட்ட வசனம் மிக அளவில் வெற்றியை தந்தது. "நிலம் இருந்தா புடிங்கிடுவானுங்க, பணம் இருந்தா எடுத்துகுடுவானுங்க படைப்பு ஒன்னு தான் கூட வரும் சிதம்பரம்"அவர் படத்தில் படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கும்.
இசையமைப்பாளர்:
சல்லியர்கள் இன்னும் திரைப்படத்தை இயக்குனர் கிட்டு இந்த திரைப்படத்தை உருவாக்கினார். இந்த படத்திற்கு கென் கருணாஸ் இசை அமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். அதன் பின்னர், தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி அனுபவம் பெற்றார். நடிப்பு, இசையமைப்பாளர், உதவி இயக்குனர் எனும் திறமைகளில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார் கென் கருணாஸ்.
இயக்குனராகும் கென் கருணாஸ்:
தற்போது இயக்குநராக கென் கருணாஸ் அறிமுகமாகிறார். பர்வாதா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்கு தலைப்பு வைக்கப்படவில்லை. ஆனால் தற்காலிகமாக புரொடக்ஷன் நம்பர் 1 என அழைக்கப்படுகிறது. இந்த நிறுவனத்துடன் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது.
இப்படத்தை இயக்குவதோடு நடிக்கவும் செய்துள்ளார். கென் கருணாஸ். கென் இயக்கும் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் தான் இசையமைப்பாளர். இப்படத்தில் மலையாள நடிகரான சுராஜ் வெஞ்சரமூடு முக்கிய கதாபாத்திரத்திலும் ஸ்ரீதேவி, அப்பல்லா, அனிஷ்மா என மொத்தம் மூன்று கதாநாயகிகளும் நடிக்க இருக்கின்றனர்.
Thalapathy Vijay Son Jason Sanjay Lyca Movie
இதே போன்று தளபதி விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இப்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். கடனாவில் மூவி டேரக்ஷன் படிப்பு படித்துவிட்டு இந்தியா திரும்பிய ஜேசன் இப்போது சிக்மா என்ற படத்தை இயக்கி வருகிறார். ஜோசன் சஞ்சய் முதல் முதலில் தனது அப்பாவின் படமான போக்கிரி படத்தில் வசந்த முல்லை என்னும் பாடலின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் அந்த படத்தின் முகமே இவர்தான் விஜயின் மகன் என்று மிகவும் பிரபலமானார். அதன் பிறகு 2009 ல் வெளியான வேட்டைக்காரன் படத்தில் "நான் அடிச்சா தாங்க மாட்ட" பாடலின் மூலம் தமிழ் சினிமாவிற்கு மீண்டும் அறிமுகமாகினார் பாட்டிற்கு மட்டுமே வந்து போனார் ஜோசன் சஞ்சய்.
Jason Sanjay Debut Director Movie 2026
அந்தப் படம் வெளியீட்டு விழாவில் பேட்டியில் விஜய்யிடம் ஜோசன் சஞ்சய் சினிமாவிற்கு நடிக்க வருவாரா என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்க என் மகனுக்கு நடிக்க ஆசை தான் ஆனால் நான் தற்போதைக்கு படிப்பு மட்டுமே முக்கியம் என்று அவர் அவரது தலையில் கொட்டி படிக்க வைத்துள்ளேன் என்று படிக்க படிப்பின் முக்கியத்துவத்தை கூறினார் விஜய். அதன் பிறகு ஜோசன் சஞ்சய் வெளிநாட்டுகளில் சென்று படித்தார். வெளிநாட்டில் சினிமாவுக்கு உட்பட்ட ஒரு படிப்பை அவர் படித்ததாகவும் கூறப்படுகிறது. படிக்கும் பொழுதே அவர் சிறு சிறு படங்களை எடுத்ததாகவும் அதில் அவர் நடித்தும் அவரது திறமையை அவ்வபோது இணையதளத்தில் பதிவிட்டு வந்தார் அந்த பதிவு மிகவும் பிரபலமாகி வந்தது.
தனது தாத்தா துறையை தேர்ந்தெடுத்த பேரன்:
ஜோசன் சஞ்சய் இந்த நடிப்புத் திறமையை கண்டு அவர் கண்டிப்பாக ஹீரோவாக தான் வருவார் என்றும் அவரது ஆசை என்றும் கூறிவந்த நிலையில் தற்போது அவர் தன் தாத்தாவிடம் சென்று நான் ஒரு படம் தயாரிக்கப் போகிறேன் என்று கூற அவர் சரி என்று சொன்னதாகவும் தற்போது தன் தாத்தா வழியை தேர்ந்தெடுத்துள்ளார் ஜோசன்சஞ்சய். இவர் இரவாகவும் நடிப்பாரா என்று ரசிகர் மத்தியில் கேள்வி எழுப்புகிறார்கள் ஆனால் இவரின் பதில் தற்போதைக்கு ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவிற்கு புதிய இயக்குனராக உருவெடுத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.