MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஒரே ராகத்தில் இளையராஜா அடித்த ‘சிக்ஸர்கள்’! இசைஞானி நிகழ்த்திய இசை மாயாஜாலம் இதுதான்!

ஒரே ராகத்தில் இளையராஜா அடித்த ‘சிக்ஸர்கள்’! இசைஞானி நிகழ்த்திய இசை மாயாஜாலம் இதுதான்!

இசைஞானி இளையராஜா, மோகனம், கீரவாணி, நடபைரவி போன்ற ராகங்களை சாமானியர்களும் ரசிக்கும் வகையில் பாடல்களாக மாற்றியதை இக்கட்டுரை விவரிக்கிறது. ஒரே ராகத்தில் பல உணர்வுகளை வெளிப்படுத்தி அவர் நிகழ்த்திய இசை மாயாஜாலத்தை இது விளக்குகிறது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Feb 11 2026, 07:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இசை அரசரின் நடத்திய அரசாங்கம்
Image Credit : Asianet News

இசை அரசரின் நடத்திய அரசாங்கம்

திரையிசை உலகில் ராகங்களையும் மக்களையும் இணைக்கும் ஒரு மகா மந்திரவாதியாகத் திகழ்பவர் இசைஞானி இளையராஜா. ஒரு ராகத்தை அதன் தூய்மை குறையாமல், அதே சமயம் சாமானியனும் கொண்டாடும் வகையில் மாற்றுவது ராஜாவின் தனித்துவமான பாணி. குறிப்பாக மோகனம், கீரவாணி, நடபைரவி ஆகிய ராகங்களில் அவர் நிகழ்த்திய சாதனைகள் ஒரு நீண்ட இசை வரலாறாகும்.

25
மோகனப் புன்னகையில் ஒரு ராஜாங்கம்
Image Credit : Asianet News

மோகனப் புன்னகையில் ஒரு ராஜாங்கம்

வெறும் ஐந்து ஸ்வரங்களை (ஸ ரி க ப த ஸ) மட்டுமே கொண்ட 'ஔடவ' ராகமான மோகனம், கேட்பவருக்கு உடனடி மகிழ்ச்சியைத் தரக்கூடியது என்றால் அது மிகையல்ல. இந்த ராகத்தில் இளையராஜா அடித்த சிக்ஸர்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகம். 'கண்மணியே காதல் என்பது' போன்ற பாடல்களில் மெல்லிசையாய் வருடியவர், 'அக்னி நட்சத்திரம்' படத்தின் 'நின்னுகோரி வர்ணம்' பாடலில் அதே மோகனத்தை நவீன தாளக்கட்டுகளோடு மோதவிட்டு இளைஞர்களை ஆட வைத்தார். செவ்வியல் இசை ரசிகர்களுக்கு 'பூவில் வண்டு கூடும்' ஒரு வரப்பிரசாதம் என்றால், கிராமிய ரசிகர்களுக்கு 'வந்ததே குங்குமம்' ஒரு கொண்டாட்டம். வேறு வேறு மாதிரி தெரிந்தாலும் இந்த எல்லா பாடல்களும் ஒரே ராகம்.

Related Articles

Related image1
பிரிந்து சென்ற மனைவிக்காக... டி.ராஜேந்தர் ஃபீல் பண்ணி எழுதிய பாட்டு - கிளாசிக் ஹிட்டான கதை தெரியுமா?
Related image2
"காற்றில் எந்தன் கீதம்..." - வாலி, வைரமுத்துவுக்கு நடுவே கங்கை அமரன் படைத்த மௌனப் புரட்சி!
35
கீரவாணியில் ஒரு சுவை விருந்து
Image Credit : Asianet News

கீரவாணியில் ஒரு சுவை விருந்து

கீரவாணி ராகத்தை இளையராஜா கையாண்ட விதம், ஒரு தேர்ந்த சமையல்காரர் ஒரே மாவைக் கொண்டு விதவிதமான பதார்த்தங்களை உருவாக்குவதற்கு ஒப்பானது. ஒரே விதமான மாவில்  பல்வேறு தோசைகள் செய்வதை போல அது இருக்கும். 'சின்ன மணிக் குயிலே' போன்ற மெல்லிசைப் பாடல்களிலும் சரி, 'நிலா அது வானத்து மேலே' போன்ற அதிரடி ஹிட்களிலும் சரி, கீரவாணியின் ஆன்மா துல்லியமாக தெரியும். குறிப்பாக 'ஜானி' படத்தில் வரும் 'காற்றில் எந்தன் கீதம்' பாடல், ஒரு மழை காலத்து ஏகாந்தத்தை இந்த ராகத்தின் வழியாகக் கடத்தியிருக்கும் விதமே ஒரு இசை மாயாஜாலம்தான். இசைபற்றி தெரியாதவர்களுக்கே ஒரே பாட்டில் பாடம் நடத்திய பெரும் இவருக்கு உண்டு. சின்ன மணிக்குயில் பாட்டு உருகியவர்களே, நிலா அது வானத்து மேலே பாட்டுக்கும் குத்தாட்டம் போட்டு இருப்பார்கள். அவர்களையே காற்றில் எந்தன் கீதத்தில் மெய்மறக்க செய்திருப்பார் இசை சக்கரவர்த்தி.

45
நடபைரவியின் வசீகரப் பயணம்
Image Credit : Asianet News

நடபைரவியின் வசீகரப் பயணம்

இளையராஜா மேற்கத்திய இசையை கையாண்ட விதமே பிரமிப்பாக இருக்கும். துள்ளல் இசையை ராகத்துக்குள் அடக்கிய ஆளுமை இளையராஜா மட்டுமே என்றால் அது மிகையல்ல. மேற்கத்திய இசையில் 'மைனர் ஸ்கேல்' என்று போற்றப்படும் நடபைரவி, ராஜாவின் கையில் இரவு நேரத்து வசீகர ராகமாக மாறியது. 'என் இனிய பொன் நிலாவே' மற்றும் 'பனி விழும் இரவு' போன்ற பாடல்கள் இன்றும் தேன் சொட்டும் மெட்டுகளாக இருப்பதற்குக் காரணம், அந்த ராகத்தின் நுணுக்கங்களை அவர் பயன்படுத்திய விதம் தான். தமிழ் வார்த்தைகளை மேற்கத்திய இசைக்குள் கொண்டுவந்து அதனை அப்படியே ரசிக்க வைத்திருப்பார் இசைஞாசனி.  'நாடோடித் தென்றல்' படத்தில் வரும் 'மணியே மணிக்குயிலே' பாடல், இந்த ராகத்தின் வேகத்தையும் அழகையும் ஒரு காட்டாற்றைப் போலத் திரையில் பாய விட்டிருக்கும்.

55
இசை மாயாஜாலம் ரசிகர்களைத் தாலாட்டிக்கொண்டே இருக்கும்
Image Credit : AFP

இசை மாயாஜாலம் ரசிகர்களைத் தாலாட்டிக்கொண்டே இருக்கும்

மனநிலையை சந்தோஷமாக வைத்திருக்க இசையும் பாடல்களும் உதவும் என்பதை கிராமத்து பாரம மக்களுக்கு சொல்லி கொடுத்ததுடன் அதனை அப்படியே அள்ளிக்கொடுத்த பெருமை இசைஞானி இளயராஜாவையே சேரும்.  இசையைஇளையராஜா ஒரு ராகத்தை அணுகும்போது அதன் இலக்கணத்தை மீறாமல், ஆனால் கற்பனைச் சிறகுகளை விரித்து எல்லைகளைக் கடப்பவர். ஒரே ராகத்தில் இத்தனை நூறு பாடல்களைக் கொடுத்தும், ஒவ்வொன்றும் ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டு நிற்பதே ராஜாவின் மாபெரும் வெற்றி. இந்த இசை மாயாஜாலம் காலங்கள் கடந்தும் ரசிகர்களைத் தாலாட்டிக்கொண்டே இருக்கும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
இசை
இளையராஜா
இளையராஜா
சினிமா
திரைப்படம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மாயாஜாலம் செய்த 'வான் நிலா' பாட்டு! எழுதியதும் மெட்டுப் போட்டதும் யார் தெரியுமா?! காதலர்களின் இதயத் துடிப்பாய் மாறிய ஒரு பாடலின் கதை.!
Recommended image2
சூப்பர் ஸ்டார் படங்களின் ஆஸ்தான தயாரிப்பாளர் காலமானார்.! தலைவரின் 'பணக்காரன்' முதல் 'பாட்ஷா' வரை தந்த ஜாம்பவான் மறைவு.!
Recommended image3
Ayyanar Thunai: உயிருக்கே ஆபத்து! கூரையை பிரித்து வீட்டிற்குள் குதித்த சோழன் - சிக்கப் போவது யார்?
Related Stories
Recommended image1
பிரிந்து சென்ற மனைவிக்காக... டி.ராஜேந்தர் ஃபீல் பண்ணி எழுதிய பாட்டு - கிளாசிக் ஹிட்டான கதை தெரியுமா?
Recommended image2
"காற்றில் எந்தன் கீதம்..." - வாலி, வைரமுத்துவுக்கு நடுவே கங்கை அமரன் படைத்த மௌனப் புரட்சி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved