ஆன்லைனில் ஏமாந்த ஜி.வி. பிரகாஷ்? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அந்த மர்ம நபர்! நடந்தது என்ன?
GV Prakash Online Fraud Controversy : அடையாளம் தெரியாத மர்ம நபரை ஜிவி பிரகாஷ் ஏமாந்த சம்பவம் நடந்துள்ளது. அப்படி என்ன நடந்தது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

GV Prakash Online Fraud Controversy
நடிகரும் பிரபல இசையமைப்பாளராக இருந்து வரும் ஜிவி பிரகாஷ் தற்போது மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். பல படங்களுக்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்க வேண்டும் என்று பல இயக்குனர்கள் போட்டி போட்டு அவரை புக் செய்கின்றார்கள். அவர் பல நபர்களுக்கு உதவி கரம் புரிந்து வருகின்றார்.
பொய்யாக போடப்பட்ட tag:
எக்ஸ் பக்கத்தில் ஜிவி பிரகாஷ்யை குறி வைத்து மாம் லிட்டில் கிங் என்னும் ட்விட்டர் அக்கவுண்டில் இருந்தே என் அம்மா தவறவிட்டார்கள் எனக்கு ஒரு தங்கச்சி மட்டும் தான் அப்பா இல்லை என்றும் என் அம்மா தற்போது இறந்து விட்டார் அவரை அடக்கம் செய்வதில் கூட பணம் இல்லை என்று எனக்கு பண உதவி செய்யுமாறு ஜிவி பிரகாஷ் உதவி புரியுமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஒரு பொய்யான டாகை உருவாக்கியுள்ளாதாக கூறப்படுகிறது.
பொய்யான போட்டோ:
தனது அம்மா இவர்தான் என்றும் அவரது ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது அந்த போட்டோ 2002 ஆம் ஆண்டு ஆன்லைனில் வெளியிட்ட ஒரு போட்டோவாம். அது கூட பொய் என்று இணையதளத்தின் மூலம் குறிப்பிடப்படுகிறது ஜி வி பிரகாஷ் வலை வீசி ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
பண உதவி:
ஜிவி பிரகாஷ் அவரது Gpay நம்பரை வாங்கி 20,000 ரூபாயை Gpay செய்து பண உதவி செய்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் ஏமாற்றி விட்டு சென்றார் கூறப்படுகிறது. இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி தற்போது ஜிவி பிரகாசுக்கு பல ஆறுதல்களும் அவரது நல்ல குணமும் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது அவர் நல்லது தான் செய்தார் என்றும் ரசிகர்கள் ஜிவி பிரகாஷ் யை புகழ்ந்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.