6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!
Dhurandhar 6 Movies Record Break : பாக்ஸ் ஆபீஸில் 6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கி புதிய வரலாறு படைத்துள்ளது 'துரந்தர்'. அந்த டாப் 6 படங்களின் பட்டியல் மற்றும் வசூல் விவரங்களை பார்க்கலாம்.

துரந்தர்
'துரந்தர்' திரைப்படம் வெளியான 12 நாட்களில் ரூ.510.12 கோடி வசூல் செய்துள்ளது. வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பிகே
ஆமிர் கான் மற்றும் அனுஷ்கா சர்மா முக்கிய வேடங்களில் நடித்த 'பிகே' திரைப்படம், இந்தியாவில் ரூ.473.33 கோடி வசூலித்தது.
பஜ்ரங்கி பைஜான்
சல்மான் கான் மற்றும் கரீனா கபூர் முக்கிய வேடங்களில் நடித்த 'பஜ்ரங்கி பைஜான்' திரைப்படம் ரூ.444.92 கோடி வசூல் செய்தது.
சஞ்சு
சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட 'சஞ்சு' படத்தில், ரன்பீர் கபூர் நடித்திருந்தார். இப்படம் ரூ.439.14 கோடி வசூல் செய்தது.
டைகர் ஜிந்தா ஹை
'டைகர் ஜிந்தா ஹை' திரைப்படம் இந்தியாவில் ரூ.434.82 கோடி வசூல் செய்தது.
சுல்தான்
சல்மான் கான் மற்றும் அனுஷ்கா சர்மா நடித்த 'சுல்தான்' திரைப்படம் இந்தியாவில் ரூ.417.29 கோடி வசூல் செய்தது.
சையாரா
அனீத் பட்டா மற்றும் அஹான் பாண்டே அறிமுகமான 'சையாரா' திரைப்படம், இந்தியாவில் மொத்தம் ரூ.409.18 கோடி வசூலித்தது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.