MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அப்பாடா... புரட்சி தளபதிக்கு ஒருவழியா நிச்சயதார்த்தம் நடந்தாச்சு

அப்பாடா... புரட்சி தளபதிக்கு ஒருவழியா நிச்சயதார்த்தம் நடந்தாச்சு

நடிகர் விஷால் தனது 48வது பிறந்தநாளில் நடிகை சாய் தன்ஷிகாவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். 15 ஆண்டுகால நட்பு காதலாக மலர்ந்து திருமணத்தில் முடிய உள்ளது. 

2 Min read
Author : Ajmal Khan
Published : Aug 29 2025, 01:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

நடிகர் விஷால் கிருஷ்ண ரெட்டி தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமானவர், நடிகர் சங்கக் கட்டிடம் கட்டும் பணியை முடித்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வேன் என உறுதியாக இருந்தார். இதனையடுத்து சுமார் கட்டுமான பணி 9 ஆண்டுகள் இழுத்தடிந்தது. 

தற்போது கட்டிடத்தில் 95 % பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் விஷாலின் திருமணம் பற்றி பேசத் தொடங்கினார். முன்னதாக பல நடிகைகளோடு இணைத்து பேசப்பட்டு வந்தது. குறிப்பாக வரலட்சுமி சரத்குமார், அபினயா, லட்சுமி மேனன் போன்றோருடன் வதந்திகள் வந்தன, ஆனால் அவை உண்மையாக இல்லை.

24
Image Credit : vishal instagram

2019ஆம் ஆண்டில் தெலுங்கு நடிகை அனிஷா அல்லா ரெட்டியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், திடீரென ரத்து செய்யப்பட்டது.இந்த நிலையில் தமிழ் திரைப்பட நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்ய இருப்பதாக கடந்த மே மாதம் தன்ஷிகாவின் யோகி டா படத்தின் டிரெய்லர் லாஞ்ச் நிகழ்ச்சியில், விஷால் மற்றும் தன்ஷிகா தங்கள் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதனையடுத்து இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

Related Articles

Related image1
திருமண தேதி.. ரஜினிக்கு பாராட்டு விழா.. பிறந்தநாளில் அப்டேட்டுகளை அள்ளிக்கொடுத்த விஷால்
Related image2
அதிர்ச்சி...மாதம்பட்டி ரங்கராஜ் என்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார்.! போலீசில் கதறும் ஜாய் கிரிசில்டா
34
Image Credit : x/ vishal

இன்று தனது 48வது பிறந்தநாளன்று நடிகை சாய் தன்ஷிகாவுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இந்த நிகழ்ச்சி சென்னை அண்ணா நகரில் உள்ள விஷாலின் இல்லத்தில், பெற்றோர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது.

இது அவர்களின் 15 ஆண்டுகள் நீடித்த நட்பிலிருந்து உருவான காதல் உறவின் அடுத்த படியாகும். பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். இது விஷாலின் பிறந்தநாள் என்பதால், சிறப்பான தினமாக அமைந்தது.

44
Image Credit : x/ vishal

இது தொடர்பாக நடிகர் விஷால் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலிருந்தும் எனது  பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களையும் ஆசிர்வாதங்களையும் தெரிவித்த உங்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

 இன்று நடந்த எனது நிச்சயதார்த்தம் தொடர்பான நல்ல செய்தியை எங்கள் குடும்பங்களுக்கு மத்தியில் சாய் தன்ஷிகாவுடன் உடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக கூறியுள்ளார். இந்த நேரத்தில்  ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் உணர்கிறேன். எப்போதும் போல உங்கள் ஆசீர்வாதங்களையும் நல்ல உணர்வுகளையும் எதிர்பார்க்கிறேன் என கூறியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
விஷால் (நடிகர்)
தமிழ்நாடு
சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
எதிர்நீச்சல் 2: ஆதி குணசேகரனின் ஆட்டம் க்ளோஸ்? ஜனனியின் மாஸ் ரீ-என்ட்ரி! நிலைகுலைந்து போன ஏ.ஜி!
Recommended image2
"பாரதி கண்ணம்மா" புகழ், ரோஷினிக்கு ரகசிய திருமணம்.! மணமகன் யார் தெரியுமா?
Recommended image3
மாயாஜாலம் செய்த 'வான் நிலா' பாட்டு! எழுதியதும் மெட்டுப் போட்டதும் யார் தெரியுமா?! காதலர்களின் இதயத் துடிப்பாய் மாறிய ஒரு பாடலின் கதை.!
Related Stories
Recommended image1
திருமண தேதி.. ரஜினிக்கு பாராட்டு விழா.. பிறந்தநாளில் அப்டேட்டுகளை அள்ளிக்கொடுத்த விஷால்
Recommended image2
அதிர்ச்சி...மாதம்பட்டி ரங்கராஜ் என்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார்.! போலீசில் கதறும் ஜாய் கிரிசில்டா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved