MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • ரொம்ப கம்மியான வட்டியில் குழுக்கடன் ரூ.25 லட்சம்.! மகளிர் சுய உதவிக்குழுவிற்கு கொண்டாட்டம்- உடனே விண்ணப்பிங்க

ரொம்ப கம்மியான வட்டியில் குழுக்கடன் ரூ.25 லட்சம்.! மகளிர் சுய உதவிக்குழுவிற்கு கொண்டாட்டம்- உடனே விண்ணப்பிங்க

தமிழக அரசு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ₹25 லட்சம் வரை குழுக்கடன் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. 7% வட்டியில் 3 ஆண்டுகள் திருப்பிச் செலுத்தும் வகையில் இந்தக் கடன் வழங்கப்படுகிறது. 

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Aug 06 2025, 10:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழக அரசின் குழுக்கடன் திட்டம்
Image Credit : SCH

தமிழக அரசின் குழுக்கடன் திட்டம்

ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதிலும் மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு நிதி உதவி திட்டங்களும் நடைமுறையில் உள்ளது. எனவே மகளிர் சுய உதவிக்குழு மூலம் பெண்கள் தங்களை முன்னேற்றிக்கொள்ள கடன் உதவி வழங்கப்படுகிறது.

இதன் படி சரியான முறையில் வாங்கிய கடனை திரும்ப செலுத்துபவர்களுக்கு மீண்டும் கடன் உதவி, மானிய உதவி, கடன் தள்ளுபடி திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் தனி நபர் கடன் உதவி திட்டம், குழு கடன் திட்டம் போன்றவை செயல்படுத்தப்படுகிறது. தற்போது 25 லட்சம் ரூபாய் கடன் வழங்கிடும் வகையில் குழு கடன் திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

25
குறைவான வட்டியில் 25 லட்சம் கடன்
Image Credit : google

குறைவான வட்டியில் 25 லட்சம் கடன்

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் - (TABCEDCO) 25 லட்சம் ரூபாய் வரை குழுக்கடன் திட்டத்தை செயல்படுத்துகிறது. 

இந்த கடன் உதவியானது சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள மகளிர் மற்றும் ஆடவர் குழுவாக சிறு தொழில் மற்றும் வணிகம் செய்வதற்கு குழுக்கடன் வழங்கப்படுகிறது. இதில் குழு உறுப்பினர்கள் ஒருவருக்கு அதிகப்பட்சமாக ரூ. 1,25 லட்சம் வழங்கப்படுகிறது.

Related Articles

Related image1
ஸ்விக்கி, சொமோட்டோ 50 ஆயிரம் ஊழியர்களுக்கு 5 லட்சத்திற்கு காப்பீடு.! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Related image2
மாதம் 1.25 லட்சம் வரை சம்பளம்.! தேர்வே இல்லை TN Rights திட்டத்தில் வேலை வாய்ப்பு - விண்ணப்பிக்க லிங்க் இதோ
35
கடனுக்கான வட்டி விகிதம்- திரும்ப செலுத்த காலம்
Image Credit : our own

கடனுக்கான வட்டி விகிதம்- திரும்ப செலுத்த காலம்

குழுக்கடன் திட்டத்தில் ஆண்டு வட்டி விகிதம் 7 சதவீதம் எனவும், கடனை திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் மட்டும் இடம்பெற வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. கடன் உதவி பெற குழு துவங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

45
குழு கடன் திட்டம் உதவி பெற தகுதிகள்
Image Credit : TNDIPR

குழு கடன் திட்டம் உதவி பெற தகுதிகள்

பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள்.

வயது: 18-60 வரை

குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகங்கள்.

www.tabcedco.tn.gov.in.

கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்கள்.

மாவட்ட / மத்திய / நகர கூட்டுறவு வங்கிகள் / கூட்டுறவு கடன் சங்கங்கள்.

ஆகிய இடங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

55
தேவைப்படும் ஆவணங்கள்
Image Credit : our own

தேவைப்படும் ஆவணங்கள்

சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ். குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தமிழ் செய்திகள்
பெண் அதிகாரம்
மகளிர் உரிமைத் தொகை

Latest Videos
Recommended Stories
Recommended image1
மாணவர்களுக்கு ஜாக்பாட்! இனி 'ரீ-வேல்வேஷன்' தேவையே இருக்காது.. சிபிஎஸ்இ கொண்டு வந்த அந்த மெகா திட்டம்!
Recommended image2
ஐஐடி-யில் சேரும் மாணவிகள்.. 7 வருஷத்துல இப்படி ஒரு மாற்றமா? ஆனா இதுல ஒரு பெரிய 'ட்விஸ்ட்' இருக்கு!
Recommended image3
உஷார் மாணவர்களே! நீட் விண்ணப்பத்தில் இந்த ஒரு தப்பு செஞ்சா கூட சீட் கிடைக்காது - என்டிஏ எச்சரிக்கை!
Related Stories
Recommended image1
ஸ்விக்கி, சொமோட்டோ 50 ஆயிரம் ஊழியர்களுக்கு 5 லட்சத்திற்கு காப்பீடு.! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Recommended image2
மாதம் 1.25 லட்சம் வரை சம்பளம்.! தேர்வே இல்லை TN Rights திட்டத்தில் வேலை வாய்ப்பு - விண்ணப்பிக்க லிங்க் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved