MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை வாய்ப்பு! 1267 காலிப்பணியிடங்கள்! சம்பளத்தை கேட்டா ஷாக் ஆயீடுவிங்க!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை வாய்ப்பு! 1267 காலிப்பணியிடங்கள்! சம்பளத்தை கேட்டா ஷாக் ஆயீடுவிங்க!

பேங்க் ஆப் பரோடாவில் 1267 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சில்லறை, MSME, ஐடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன. 

2 Min read
Author : vinoth kumar
| Updated : Jan 17 2025, 04:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Bank of Baroda

Bank of Baroda

குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது பேங்க் ஆப் பரோடா வங்கி. இந்தியாவிலேயே பாரத் ஸ்டேட் வங்கிக்கு பின்னர் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். 9,693 கிளைகளுடன் 74,227க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் 1,267 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி, சம்பளம் உள்ளிட்ட விவரங்கள் என்ன என்பதை பார்பபோம்.

28
Bank of Baroda Recruitment

Bank of Baroda Recruitment

காலிப்பணியிடங்கள் விபரம்:

சில்லறை பொறுப்புகளில் 450 பணியிடங்கள், MSME வங்கிகளில் 341 பணியிடங்கள், கிராமப்புற வேளாண் வங்கி கிளைகளில் 200 பணியிடங்கள்,  தகவல் தொழிநுட்பத்தில் 177 பணியிடங்கள், கார்ப்பரேட் நிறுவன கடன் பிரிவில் 30 பணியிடங்கள், நிறுவன தரவு மேலாண்மை அலுவலகத்தில் 25 பணியிடங்கள், வசதி மேலாண்மை பிரிவில் 22 பணியிடங்கள், நிதித்துறையில் 13 பணியிடங்கள், தகவல் பாதுகாப்பு பிரிவில் 9 பணியிடங்கள் உள்ளன.

38
Educational Qualification

Educational Qualification

கல்வித் தகுதி: 

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / B.Sc / BE / B.Tech / CA / CMA / M.Sc / MBA / MCA / PG Diploma / PhD தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பணியை பொறுத்து கல்வித் தகுதியானது மாறுபடும். 

48
Bank Jobs

Bank Jobs

வயது வரம்பு: 

குறைந்தபட்ச 24 வயது அதிகபட்ச 42 வயது

வயது தளர்வு: 

எஸ்.சி/எஸ்.டி(SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகள் ஓபிசி(OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகள் பொதுப்பிரிவு(GEN) மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள்
 

58
Monthly salary

Monthly salary

மாத சம்பளம் விவரம்:

ஜூனியர் மேனேஜர் - ரூ. 48,480 முதல் ரூ.85,920 வரை, மிடில் லெவல் பணியிடங்களுக்கு - ரூ. 85,920 முதல் ரூ.1,05,280 வரை, சீனியர் மேனேஜர் - ரூ. 1,20,940 முதல் ரூ.1,35,020 வரையும் சம்பளம் வழங்கப்படும்.

68
Application fee

Application fee

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதார்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம்  ரூ 600 ஆகும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ரூ.600 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி மற்றும் பெண்களுக்கு ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதுமானது. 

78
Bank of Baroda Recruitment 2025

Bank of Baroda Recruitment 2025

தேர்வு செய்யப்படும் முறை:

அந்தந்த வேலைக்கான கல்வி வரம்புகள் பேங்க் ஆப் பரோடாவின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக 150 கேள்விகள் 225 மதிப்பெண்களுக்கு கொடுக்கப்படும். இதற்கான கால அளவு 150 நிமிடங்கள். ஆங்கில மொழி புரிதலுக்காக தேர்வும் நடைபெறும்.

88
Last day to apply

Last day to apply

விண்ணப்பிக்கும் இணையதளம்: 

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.bankofbaroda.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 

விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாளாகும். எனவே தகுதியுள்ளவர்கள் தாமதிக்காமல் உடனே அப்ளை செய்யவும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Govt Job: ரயில்வேயில் 400 புதிய வேலைகள்! எழுத்துத் தேர்வு எப்போ தெரியுமா?
Recommended image2
Job Vacancy: டிகிரி வேண்டாம், 10 ஆம் வகுப்பே போதும்! ரூ.57,000 சம்பளத்துடன் மத்திய அரசு பணி காத்திருக்கு.! Apply Now
Recommended image3
Job Alert: 10th முடித்தவர்களுக்கு அட்டகாச வாய்ப்பு.! கப்பல் கட்டும் தளத்தில் உதவித்தொகையுடன் பயிற்சி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved