Job Alert: Experiance வேண்டாம்! டிகிரி முடித்துள்ளவர்களை வேலைக்கு அழைக்கும் காக்னிசண்ட்.!
முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசண்ட், 2024, 2025ல் பட்டம் முடித்த பட்டதாரிகளுக்காக அனலிஸ்ட் டிரெய்னி பணிகளுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. IT, Multicloud, மற்றும் Digital Workplace Services என மூன்று பிரிவுகளில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பட்டதாரிகளை அழைக்கிறது காக்னிசண்ட்
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான காக்னிசண்ட் (Cognizant) நிறுவனம், அனுபவம் இல்லாத பட்டதாரிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 3 Analyst Trainee பிரிவுகளில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் பட்டம் முடித்த Freshers இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 31, 2025 ஆகும்.
டிகிரி இருந்தாலே போதும்
முதலாவது பணியாக Analyst Trainee – IT & Integrated Smart Operations பதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு BCA, B.Sc (Computer Science, IT, Mathematics, Physics, Chemistry, Statistics, Electronics உள்ளிட்ட Allied Streams) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை குறைந்தபட்சம் 60% மதிப்பெண் மற்றும் அரியர்ஸ் இல்லாமல் இருக்க வேண்டும்.
50 சதவீத மதிப்பெண் தேவை
இரண்டாவது பணியாக Analyst Trainee – Multicloud பதவி உள்ளது. இதற்கு BCA, B.Sc, BA, BBA, B.Com, BVoc, BMS போன்ற எந்த ஒரு டிகிரியும் 50% மதிப்பெண்ணுடன் முடித்திருந்தால் போதும். அதேபோல் மூன்றாவது பணியான Analyst Trainee – Digital Workplace Services பதவிக்கும் இதே தகுதிகள் பொருந்தும்.
எந்த ஷிப்ட்டிலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்
இந்த பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும், டீம் வொர்க், அனலிட்டிக்கல் திறன், பிரச்சனை தீர்க்கும் திறன், கிரிட்டிக்கல் திங்கிங் போன்ற மென்மையான திறன்கள் அவசியம். நைட் ஷிப்ட் உட்பட எந்த ஷிப்ட்டிலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். நைட் ஷிப்ட் பணிக்கு கூடுதல் அலவன்ஸ் வழங்கப்படும்.
இது ஒரு சிறந்த ஐடி வாய்ப்பு!
இந்த பணிகள் PAN India அடிப்படையிலானவை. சென்னை, கோவை, பெங்களூர், ஹைதராபாத், புனே உள்ளிட்ட பல நகரங்களில் பணியிடம் இருக்கலாம். சம்பளம் திறமை மற்றும் செயல்திறன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். விண்ணப்பிக்கும் போது ரெஸ்யூம் (2 பக்கம்), பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், கல்வி சான்றிதழ்கள், பான் கார்டு, வாக்காளர் அட்டை அல்லது பாஸ்போர்ட் அவசியம். கடந்த 6 மாதங்களில் காக்னிசண்ட் நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். தகுதியுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும் – இது ஒரு சிறந்த ஐடி வாய்ப்பு!

