MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • தர்மபுரி மாவட்ட அங்கன்வாடி மையங்களில் வேலைவாய்ப்பு: 135 காலிப்பணியிடங்கள்! முழு விவரங்களுக்கு…

தர்மபுரி மாவட்ட அங்கன்வாடி மையங்களில் வேலைவாய்ப்பு: 135 காலிப்பணியிடங்கள்! முழு விவரங்களுக்கு…

தமிழ்நாடு அரசு, சத்துணவுத் திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள 135 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். தேர்வு கிடையாது.

2 Min read
Author : Suresh Manthiram
| Updated : May 02 2025, 11:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தர்மபுரி மாவட்டத்தில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் காலியாக உள்ள 135 சமையல் உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்த விண்ணப்பதாரர்கள் தகுதி பெறுகின்றனர். தகுதியான விண்ணப்பதாரர்கள் எவ்வித எழுத்துத் தேர்வும் இன்றி, நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

27

விண்ணப்பதாரர்களுக்கான தகுதிகள்:

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது தோல்வி அடைந்திருக்கலாம். மேலும், தமிழில் சரளமாக பேசும் திறன் இன்றியமையாதது.

சம்பளம்: இப்பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியம் ₹3,000 முதல் ₹9,000 வரை வழங்கப்படும்.

Related Articles

Related image1
அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம்! தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு!
Related image2
திருநெல்வேலி அங்கன்வாடி மையங்களில் வேலைவாய்ப்பு: 119 சமையல் உதவியாளர் பணியிடங்கள்! முழுவிவரம்….
37

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது:

பொது மற்றும் தாழ்த்தப்பட்ட (SC) பிரிவினர்: 21 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

பழங்குடியினர்: 18 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர்: 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

47

விண்ணப்பக் கட்டணம்: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.

தேர்வு முறை:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் தகுதியின் அடிப்படையில், தகுதியானவர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பம் சமர்ப்பிக்கத் துவங்கும் நாள்: 11.04.2025
  • விண்ணப்பம் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 30.04.2025, மாலை 5.45 மணி வரை
57

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப் படிவத்தினை https://dharmapuri.nic.in/ எனும் இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் வாயிலாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, உரிய ஆவணங்களின் நகல்களுடன், தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அல்லது நகராட்சி அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் மட்டுமே நேரடையாகச் சமர்ப்பிக்க வேண்டும். தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

67

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களின் நகல்கள்:

  • பள்ளி மாற்றுச் சான்றிதழ்
  • SSLC மதிப்பெண் சான்றிதழ்
  • குடும்ப அட்டை
  • இருப்பிடச் சான்று
  • ஆதார் அட்டை
  • சாதிச் சான்றிதழ்
  • விதவை அல்லது கணவனால் கைவிடப்பட்டவர் என்பதற்கான சான்றிதழ் (பொருந்தினால்)
  • மாற்றுத்திறனாளி அடையாள அட்டை (பொருந்தினால்)

குறிப்பு: விண்ணப்பிக்கும் முன்னர், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தகுதிகளும் தங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

77

இதையும்படிங்க:

  • அங்கன்வாடிவேலைவாய்ப்பு: சொந்தஊரிலேவேலை ! விண்ணபிப்பதுஎப்படி? முழுவிவரம்
  • சென்னைஅங்கன்வாடிவேலைவாய்ப்பு 2025: 308 பணியிடங்களுக்குஉடனேவிண்ணப்பிக்கவும்…
  • கள்ளக்குறிச்சியில்அங்கன்வாடிவேலைவாய்ப்பு! 10th, 12th முடித்தவர்களுக்குசூப்பர்சான்ஸ்!
  • தூத்துக்குடியில்அங்கன்வாடிவேலைவாய்ப்புகள்: சொந்தஊரிலேவேலை! உடனேவிண்ணப்பிக்கவும்…

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு
ஆட்சேர்ப்பு
அரசு வேலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Govt Job: ரயில்வேயில் 400 புதிய வேலைகள்! எழுத்துத் தேர்வு எப்போ தெரியுமா?
Recommended image2
Job Vacancy: டிகிரி வேண்டாம், 10 ஆம் வகுப்பே போதும்! ரூ.57,000 சம்பளத்துடன் மத்திய அரசு பணி காத்திருக்கு.! Apply Now
Recommended image3
Job Alert: 10th முடித்தவர்களுக்கு அட்டகாச வாய்ப்பு.! கப்பல் கட்டும் தளத்தில் உதவித்தொகையுடன் பயிற்சி!
Related Stories
Recommended image1
அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம்! தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு!
Recommended image2
திருநெல்வேலி அங்கன்வாடி மையங்களில் வேலைவாய்ப்பு: 119 சமையல் உதவியாளர் பணியிடங்கள்! முழுவிவரம்….
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved