MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • Job Alert: பொதுத்துறை வங்கியில் வேலை.! தமிழ்நாட்டில் மட்டும் 153 காலி பணியிடங்கள்.! 2,700 பேருக்கு அப்ரெண்டீஸ் பயிற்சி.! அட்டகாசமான வாய்ப்பு.!

Job Alert: பொதுத்துறை வங்கியில் வேலை.! தமிழ்நாட்டில் மட்டும் 153 காலி பணியிடங்கள்.! 2,700 பேருக்கு அப்ரெண்டீஸ் பயிற்சி.! அட்டகாசமான வாய்ப்பு.!

பேங்க் ஆப் பரோடா வங்கி 2025-ஆம் ஆண்டுக்கான 2700 அப்ரெண்டீஸ் பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. தமிழ்நாட்டில் 153 காலியிடங்கள் உட்பட, பட்டதாரிகள் இந்த வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம். 

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Nov 12 2025, 06:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
பெரிய அளவில் வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.!
Image Credit : social media

பெரிய அளவில் வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா (Bank of Baroda), 2025ஆம் ஆண்டுக்கான அப்ரெண்டீஸ் (Apprentice) பயிற்சி பணியிடங்களுக்கு பெரிய அளவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாட்டின் பல மாநிலங்களிலும் இந்த பணியிடங்கள் உள்ளன. அதில் தமிழ்நாட்டில் மட்டும் 153 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கியின் பின்னணி

பேங்க் ஆப் பரோடா என்பது இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியாகும். குஜராத் மாநிலம் வதோதராவில் தலைமையிடம்கொண்ட இந்த வங்கிக்கு, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகள் உள்ளன. வங்கி துறையில் சிறந்த வளர்ச்சியும், உறுதியான சேவையும் வழங்கி வரும் இந்த நிறுவனம், இளைஞர்களுக்கு வங்கி துறையில் அனுபவம் பெறும் சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

23
பணியிட விவரம்
Image Credit : Getty

பணியிட விவரம்

பதவி பெயர்: அப்ரெண்டீஸ் (Apprentice)

மொத்த பணியிடங்கள்: 2700

தமிழ்நாட்டில் உள்ள காலியிடங்கள்: 153

மற்ற மாநிலங்களில்: கர்நாடகா – 440, குஜராத் – 400, மகாராஷ்டிரா – 297, உத்தரபிரதேசம் – 307, தெலுங்கானா – 154, ராஜஸ்தான் – 215

Related Articles

Related image1
Job Alert: ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை.! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?
Related image2
Job Vacancy: டிகிரி முடித்துள்ளீர்களா? வங்கியில் மேனேஜர் ஆக சூப்பர் சான்ஸ்.! விண்ணப்பிக்க மறந்துடாதீங்க.!
33
கல்வித் தகுதி
Image Credit : Google

கல்வித் தகுதி

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டம் (Degree) பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி தெரிந்திருப்பது அவசியம்.

வயது வரம்பு

குறைந்தபட்சம்: 20 வயது

அதிகபட்சம்: 28 வயது (01.11.2025 தேதியின்படி) அரசு விதிகளின்படி வயது தளர்வு அளிக்கப்படும்:

SC/ST – 5 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

மாற்றுத்திறனாளிகள் – 10 ஆண்டுகள்

ஊதியம்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ₹15,000/- வரை பயிற்சி ஊக்கத்தொகை (Stipend) வழங்கப்படும். இது ஒப்பந்த அடிப்படையிலான பயிற்சி வேலை ஆகும்.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  • ஆன்லைன் எழுத்துத் தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு
  • உள்ளூர் மொழி தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பம் முழுவதும் ஆன்லைன் மூலம் மட்டுமே செய்ய வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

பொதுப்பிரிவு / OBC / EWS – ₹800

SC / ST / மாற்றுத்திறனாளிகள் – விலக்கு (No Fee)

விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 1 பிப்ரவரி 2025

முக்கிய இணைப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும் மற்றும் விண்ணப்பிக்கவும்:  Bank of Baroda – Official Careers Page

சிறப்பு அம்சங்கள்:

  1. பட்டதாரிகளுக்கு வங்கி துறையில் அனுபவம் பெறும் சிறந்த வாய்ப்பு.
  2. தமிழ்நாடு, தென்னிந்திய மாநிலங்களில் அதிக காலியிடங்கள்.
  3. சாதாரண பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
  4. வேலை அனுபவத்துடன் வங்கி துறையில் நிலையான தொழில் வாய்ப்பு உருவாக்கும் வாய்ப்பு.

வங்கி துறையில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு இது ஒரு சூப்பர் சான்ஸ்! தகுதியுள்ளவர்கள் தாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கடைசி நாள்: 1 பிப்ரவரி 2025 

விண்ணப்பம்: Bank of Baroda அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக மட்டுமே

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வேலைவாய்ப்பு
வேலை வாய்ப்பு முகாம்
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு

Latest Videos
Recommended Stories
Recommended image1
மாணவர்களுக்கு ஜாக்பாட்! இனி 'ரீ-வேல்வேஷன்' தேவையே இருக்காது.. சிபிஎஸ்இ கொண்டு வந்த அந்த மெகா திட்டம்!
Recommended image2
ஐஐடி-யில் சேரும் மாணவிகள்.. 7 வருஷத்துல இப்படி ஒரு மாற்றமா? ஆனா இதுல ஒரு பெரிய 'ட்விஸ்ட்' இருக்கு!
Recommended image3
உஷார் மாணவர்களே! நீட் விண்ணப்பத்தில் இந்த ஒரு தப்பு செஞ்சா கூட சீட் கிடைக்காது - என்டிஏ எச்சரிக்கை!
Related Stories
Recommended image1
Job Alert: ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை.! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?
Recommended image2
Job Vacancy: டிகிரி முடித்துள்ளீர்களா? வங்கியில் மேனேஜர் ஆக சூப்பர் சான்ஸ்.! விண்ணப்பிக்க மறந்துடாதீங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved