MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • 50,000 பேரை வேலையில் இருந்து தூக்கும் கார் நிறுவனம்.. இதுதான் காரணம்!

50,000 பேரை வேலையில் இருந்து தூக்கும் கார் நிறுவனம்.. இதுதான் காரணம்!

ஜெர்மனியின் முன்னணி கார் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், 2030-க்குள் 50,000 பேரை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Mar 12 2026, 07:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்
Image Credit : Google

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்

அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் உலக சந்தைகளைப் பாதித்துள்ளது. பல நாடுகள் அமெரிக்காவின் வரிகளை எதிர்கொள்கின்றன. இந்தச் சூழலில், முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், 2030ம் ஆண்டுக்குள் ஜெர்மனியில் 50,000 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் லாபம் குறைந்தது

கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிறுவனத்தின் லாபம் குறைந்துள்ளது. சீன எலெக்ட்ரிக் வாகன (EV) உற்பத்தியாளர்களின் போட்டி, உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பு, அமெரிக்க வரிகளின் தாக்கம் என பல சவால்களை ஃபோக்ஸ்வேகன் எதிர்கொள்கிறது. இவை அனைத்தும் நிறுவனத்தின் வருவாயைப் பாதித்துள்ளன.

24
50,000 வேலைகள் குறைக்கப்படும்
Image Credit : Google

50,000 வேலைகள் குறைக்கப்படும்

ஃபோக்ஸ்வேகன் குழுமம் 2030-க்குள் ஜெர்மனியில் சுமார் 50,000 வேலைகளைக் குறைக்கும் என்று நிறுவனத்தின் சிஇஓ ஆலிவர் ப்ளூம், பங்குதாரர்களுக்கான ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இந்த ஆட்குறைப்பு ஃபோக்ஸ்வேகன் பிராண்டில் மட்டுமல்லாமல், அதன் பிரீமியம் பிராண்டுகளான ஆடி, போர்ஷே மற்றும் மென்பொருள் நிறுவனமான கேரியாட் (Cariad) ஆகியவற்றையும் பாதிக்கும் என சிஇஓ ப்ளூம் கூறியுள்ளார்.

சவால்கள் என்னென்ன?

ஆண்டுக்கு 15 பில்லியன் யூரோக்களை சேமிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, 2024 இறுதிக்குள் தொழிலாளர் சங்கங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் வெளிநாட்டு கார் தயாரிப்பாளர்களுக்கு வரி விதிப்பதற்கு முன்பே, ஃபோக்ஸ்வேகன் பல சிக்கல்களைச் சந்தித்தது. ஐரோப்பாவில் தேவை குறைவு, எலெக்ட்ரிக் வாகனங்களில் அதிக முதலீடு, சீனாவில் விற்பனை சரிவு போன்றவை முக்கிய சவால்களாக இருந்தன.

Related Articles

Related image1
உயிருக்கு கியாரண்டி.. பாதுகாப்பில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் 5 கார்கள்.. டாடா பன்ச் டூ ஸ்கோடா!
Related image2
இந்தியாவின் புதிய நம்பிக்கைக்கு டாடா நிறுவனம் பரிசாக கொடுத்த கார் எது தெரியுமா.?
34
விற்பனை பின்தங்கியுள்ளது
Image Credit : Google

விற்பனை பின்தங்கியுள்ளது

உலகின் மிகப்பெரிய கார் சந்தையான சீனாவில், ஃபோக்ஸ்வேகன் ஒரு காலத்தில் கிங். ஆனால் இப்போது BYD, Geely போன்ற உள்ளூர் பிராண்டுகளின் போட்டியால், அதன் விற்பனை பின்தங்கியுள்ளது. உள்நாட்டு விலைப்போட்டியில் இருந்து தப்பிக்க, சீன கார் பிராண்டுகள் ஐரோப்பிய சந்தையைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளன. இது ஃபோக்ஸ்வேகன் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் என சிஇஓ ப்ளூம் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார். 'செலவுகளைக் குறைப்பதில் நாங்கள் வேகமாக செயல்பட வேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

44
விற்பனை வளர்ச்சி கணிப்பு
Image Credit : Getty

விற்பனை வளர்ச்சி கணிப்பு

2025-ல் ஃபோக்ஸ்வேகன் 8.9 பில்லியன் யூரோ ($10.4 பில்லியன்) செயல்பாட்டு லாபம் ஈட்டியது. இது கடந்த ஆண்டை விட 53% அதிகம் என்றாலும், ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பான 9.4 பில்லியன் யூரோவை விடக் குறைவு. நிறுவனத்தின் 2026-ம் ஆண்டுக்கான விற்பனை வளர்ச்சி கணிப்பும் 0% முதல் 3% வரை மட்டுமே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஆட்டோ
கார் செய்தி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Govt Jobs: 10வது பாஸ் பண்ணியிருக்கீங்களா? ரூ.50,000 வரை சம்பளத்தில் 10 சூப்பர் அரசு வேலைகள்!
Recommended image2
Job Alert: இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! உங்க ஊரிலேயே அரசு வேலை.! மாதம் ரூ.40,000 வரை சம்பளம்.!
Recommended image3
Govt Jobs: ரூ. 1.12 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை.! விளையாட்டுத்துறையில் சாதிக்க பொன்னான வாய்ப்பு.!
Related Stories
Recommended image1
உயிருக்கு கியாரண்டி.. பாதுகாப்பில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் 5 கார்கள்.. டாடா பன்ச் டூ ஸ்கோடா!
Recommended image2
இந்தியாவின் புதிய நம்பிக்கைக்கு டாடா நிறுவனம் பரிசாக கொடுத்த கார் எது தெரியுமா.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved