ஆயுள் காப்பீடு யாருக்கெல்லாம் அவசியம்? தெரிந்துகொள்ள வேண்டியவை!
குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபருக்கு அசம்பாவிதம் ஏற்பட்டால், ஆயுள் காப்பீடு மூலம் கிடைக்கும் இழப்பீடு குடும்பத்தைக் காப்பாற்றும். டேர்ம் பிளான் திட்டத்தில் குறைவான பிரீமியத்தில் அதிக கவரேஜ் கிடைக்கும்.

ஆயுள் காப்பீடு இதெல்லாம் தெரிஞ்சுக்கனும்
பெரும்பாலும் நண்பர்கள் ஏஜெண்டுகள் என்பதற்காகவே பலரும் ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்து வரும் நிலை உள்ளது. பணிக்கு செல்வோர் அலுவலகத்தில் கட்டாயமாக சேர்ப்பதாலும், வரி விலக்குக்காகவும் பலிசி எடுக்கின்றனர். ஆயுள் காப்பீடு யாரெல்லாம் எடுக்க வேண்டும் என்பது குறித்தும் பாலிசி எடுக்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்தும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
தெரிந்த பாலிசி தெரியாத தகவல்
சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் தம்பதி, ஜாயிண்ட் அக்கவுண்ட் எடுப்பது போல, இருவரும் சேர்ந்தே ஜாயிண்ட் பாலிசி எடுத்துக்கொள்ளலாம். குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபருக்கு அசம்பாவிதம் ஏற்பட்டால், ஆயுள் காப்பீடு மூலம் கிடைக்கும் இழப்பீடு குடும்பத்தைக் காப்பாற்றும் என்பது ஆயுள் காப்பீட்டின் முக்கியமான நோக்கமாகும். அதேபோல் குடும்ப தலைவிக்கும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் குறைவான பிரீமியத்தில் அதிக கவரேஜ் அளிப்பது டேர்ம் பிளான் திட்டமாகும். கணவர் பாலிசி எடுத்திருக்கும்பட்சத்தில், மனைவிக்கு அதில் பாதித் தொகைக்கு டேர்ம் பாலிசி தரப் படுகிறது.குடும்பத் தலைவிக்குத் தனி பாலிசி எடுப்பது சிரமமாக, அதிக பிரீமியம் செலவை ஏற்படுத்துவதாக இருந்தால், கணவன் - மனைவி இருவருக்கும் கவரேஜ் அளிக்கும் ஜாயின்ட் பாலிசி எடுத்துக்கொள்ளலாம். ஜாயிண்ட் பாலிசி எடுத்து வருங்காலத்திற்காக சேமிக்கலாம்
நிறுவனங்கள் வழங்கும் பாலிசிகள் போதுமானதா?
நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு வழங்கும் ஆயுள்காப்பிடு போதுமானதாக இருக்காது என்கின்றனர் சந்தை நிபுணர்கள். ஏராளமான நிறுவனங்கள் பணியாளர்களுக்கு வழங்கும் குழு ஆயுள் காப்பீடு பாலிசியில் கவரேஜ் தொகை குறைவாக இருக்கும் என்பதால் அதன் மூலம் கிடைக்கும் இழப்பீட்டுத் தொகை ஆண்டு சம்பளத்தைப் போல் ஒன்று அல்லது இரண்டு மடங்கு மட்டும் இருக்கும். இந்த பாலிசியின் முழுக் கட்டுப்பாடும் நிறுவனத்தைச் சார்ந்ததாக இருக்கும். அடுத்த ஆண்டு முதல் பணியாளர்களுக்கு நாம் குரூப் ஆயுள் பாலிசி எடுக்க வேண்டாம் என நிறுவனம் முடிவு செய்தால், பணியாளர்களால் ஒன்றும் செய்ய முடியாது; இதேபோல், கவரேஜ் தொகையைக் குறைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.இந்த குரூப் பாலிசியின் ஆயுள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் வரை மட்டுமே செல்லுபடியாகும். இதனால் தனியே ஓர் ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. அதுவும் குறைவான பிரீமியத்தில் அதிக கவரேஜ் அளிக்கும் டேர்ம் பிளானாக எடுப்பது நல்லது. ஆண்டுச் சம்பளத்தைப் போல சுமார் 10 முதல் 15 மடங்குக்கு கவரேஜ் தொகை இருக்க வேண்டியது கட்டாயமாகும்.
ஆயுள் காப்பீடு கட்டாயம்
எப்போதும் விபத்து ஏற்படும் என்ற நிலை தற்போது இருப்பதால், எல்லா வயதினரும் காப்பீடு எடுத்துக்கொள்வது அவசியம். அதனால் ஒருவர் பணிக்கு சென்றோ அல்லது வியாபாரம் செய்தோ வருமானம் ஈட்ட ஆரம்பித்ததும் ஆயுள் காப்பீட்டு எடுத்துக்கொள்வது மிக அவசியமாகும்.
காப்பீடு எந்த வயதில் எடுக்க வேண்டும்?
பொதுவாக, ஆயுள் காப்பீடு பாலிசிகளை 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் எடுக்கலாம். வயதாக ஆக, பிரீமியம் அதிகரிக்கும்.ஆயுள் காப்பீட்டு பிரீமியம் ஒருவரின் வயது மற்றும் அவருக்கு இருக்கும் நோய்ப் பாதிப்புகளின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. எனவே, ஒருவர் சம்பாதிக்கத் தொடங்கியதும் ஆயுள் காப்பீடு பாலிசியை எவ்வளவு விரைவாக எடுக்கிறாரோ, அந்த அளவுக்கு பிரீமியம் குறைவாக இருக்கும். வயதாகி நோய்ப் பாதிப்பு அதிகரிக்கும்போது பிரீமியம் மிகவும் அதிகமாக இருக்கலாம். சில நேரங்களில் பாலிசி மறுக்கக்கூடபடலாம். எனவே, இளம் வயதிலேயே ஆயுள் காப்பீடு பாலிசியை எடுப்பது எப்போதும் நல்லதாகும்.
உடல்நலன் பிரச்சினை - கண்டிப்பாக சொல்லவும்
பாலிசிதாரர்களுக்கு நோய்ப் பாதிப்பு இருக்கும்போது அல்லது குடும்பத்தின் ரத்த உறுப்பினர் களுக்கு நோய் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் பிரீமியம் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு பாலிசி வழங்கப்படும். நிரீழிவு, ரத்த அழுத்தம், இருதய பாதிப்பு இருக்கும் பாலிசி எடுப்பவர் மற்றும் அவரின் உடன் பிறந்தோர், பெற்றோர் ஆகி யோருக்கு இந்தப் பாதிப்புகள் இருக்கும்பட்சத்தில் பிரீமியம் அதிகரிக்கப்படும். கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை அளவு, மிக அதிக ரத்த அழுத்தம் இருக்கும்பட்சத்தில், மாரடைப்பு எப்போது வேண்டு மானாலும் வரக்கூடிய சூழலில் இருப்பவர்களுக்கு பாலிசி மறுக்கப்படும் சூழல் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
சம்பளம் வருதா பாலிசி எடுங்கள்
அடித்தட்டு மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினர் குறிப்பாக, மாதச் சம்பளம் வாங்குபவர்கள் கட்டாயம் ஆயுள் காப்பீடு எடுப்பது கட்டாயம். அவர்களின் சம்பளம் அல்லது வருமானத்தை நம்பிதான் ஒட்டுமொத்தக் குடும்பமே இருக்கும் என்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் ஆகியவை சிக்கலுக்கு உள்ளாகக் கூடாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
வரி சலுக்காக பாலிசி எடுக்க வேண்டாம்
பணக்காரர்கள் குறைவான பிரீமியத்தில் அதிக கவரேஜ் அளிக்கும் டேர்ம் பிளானை எடுத்துவிட்டு, மீதித் தொகையை நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் தரும் நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம். காப்பீட்டு பாலிசிக்கு பிரீமியத்துக்கு கிடைக்கும் வருமான வரி விலக்கு என்பது கூடுதல் சலுகைதானே தவிர, அதற்காக அதிக தொகைக்கு ஆயுள் காப்பீடு பாலிசிகளை எடுத்து பிரீமியம் கட்டி வருவது என்பது புத்திசாலித்தனமாக இருக்காது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

