- Home
- Business
- UPI update: கவனம், மிக கவனம்.! 5 முறை மேல் தவறு செய்தால் பணம் திரும்ப வராது! ஜாக்கிரதை.!
UPI update: கவனம், மிக கவனம்.! 5 முறை மேல் தவறு செய்தால் பணம் திரும்ப வராது! ஜாக்கிரதை.!
யு.பி.ஐ மூலம் தவறுதலாக பணம் அனுப்பினால், அதை ரத்து செய்ய முடியாது. பணத்தை திரும்பப் பெற, சம்பந்தப்பட்ட நபரைத் தொடர்புகொள்வது, பேமென்ட் ஆப், வங்கி மற்றும் NPCI-ல் புகார் அளிப்பது போன்ற வழிமுறைகளை இந்த கட்டுரை விளக்குகிறது.

சிறிய தவறு, பெரிய நஷ்டமாக மாறலாம்
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் யு.பி.ஐ, GPay, PhonePe, Paytm போன்ற ஆன்லைன் பேமென்ட் ஆப்கள் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டன. சில்லறை பணம் வைத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லாமல், சில விநாடிகளில் பணம் அனுப்பவும் பெறவும் முடிகிறது. ஆனால் இந்த வசதியோடு சேர்ந்து ஒரு பெரிய அபாயமும் இருக்கிறது – ஒரு சிறிய தவறு, பெரிய நஷ்டமாக மாறலாம்.
பணம் அனுப்பும் போது நிதானம் தேவை
பல நேரங்களில் அவசரம், கவனக் குறைவு அல்லது தவறான மொபைல் எண்ணை உள்ளிடுதல் காரணமாக, நமக்கு தெரியாத ஒருவருக்கு பணம் சென்று விடுகிறது. யு.பி.ஐ பரிவர்த்தனையில் பணம் ஒருமுறை டெபிட் ஆகிவிட்டால், அதை “Cancel” அல்லது “Undo” செய்ய முடியாது. இதுதான் பலரையும் பதற்றத்தில் ஆழ்த்துகிறது.
முதலில் இதைதான் செய்ய வேண்டும்
அப்படி தவறுதலாக பணம் அனுப்பிவிட்டால், முதலில் செய்ய வேண்டியது அந்த நபரை தொடர்புகொள்வது. அவர் புரிந்துகொண்டு பணத்தை திருப்பி அனுப்பினால் பிரச்சினை அங்கேயே முடிந்துவிடும். ஆனால் அவர் மறுத்தால், உடனடியாக நீங்கள் பயன்படுத்திய பேமென்ட் ஆப்பில் “Report a Problem” அல்லது “Raise a Complaint” என்ற ஆப்ஷனை பயன்படுத்த வேண்டும்.
புகார் அளிக்க வேண்டும்
அதன் பின்னர், உங்கள் வங்கிக்கு முழு விவரங்களுடன் புகார் அளிக்க வேண்டும். இதிலும் தீர்வு கிடைக்கவில்லை என்றால், NPCI (National Payments Corporation of India) அமைப்பின் Dispute Redressal Mechanism வழியாக புகார் அளிக்கலாம். இதற்காக 1800-120-1740 என்ற டோல்-ஃப்ரீ எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
5 முறை மட்டுமே பணம் திரும்ப கிடைக்கும்
இங்கே மிக முக்கியமான ஒரு விஷயம் உள்ளது. NPCI விதிமுறைகளின்படி, ஒரு மாதத்திற்கு 10 முறை மட்டுமே தவறுதலாக அனுப்பிய பணத்தை திரும்பப் பெற முயற்சிக்க முடியும். அதே நபருக்கு மீண்டும் மீண்டும் தவறாக பணம் அனுப்பினால், அதிகபட்சம் 5 முறை மட்டுமே பணம் திரும்ப கிடைக்கும். 5 முறை கடந்துவிட்டால், பணம் திரும்ப வரும் வாய்ப்பு இல்லை.
இரண்டு முறை சரிபார்ப்பது அவசியம்
அதனால் தான், யு.பி.ஐ பேமென்ட் செய்யும் முன் பெயர், மொபைல் எண், தொகை ஆகியவற்றை இரண்டு முறை சரிபார்ப்பது அவசியம். ஒரு நிமிட கவனம், உங்கள் பணத்தை பாதுகாக்கும். கவனம் மக்களே,கவனக் குறைவு செலவானதாக மாறக்கூடாது!
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

