MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரூ.2000 நோட்டு இன்னும் செல்லும்.. ஆர்பிஐ புதிய தகவல்.. எப்போது வரை டெப்பாசிட் செய்யலாம்?

ரூ.2000 நோட்டு இன்னும் செல்லும்.. ஆர்பிஐ புதிய தகவல்.. எப்போது வரை டெப்பாசிட் செய்யலாம்?

ரிசர்வ் வங்கி சமீபத்திய தரவுகளின்படி, ரூ.5,817 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள் இன்னும் மக்கள் புழக்கத்தில் உள்ளன. ஆர்பிஐ அலுவலகங்கள் அல்லது இந்திய அஞ்சல் மூலம் டெபாசிட் செய்யலாம் என்றும் ஆர்பிஐ தெளிவுபடுத்தியுள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Nov 04 2025, 08:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ரூ.2000 ரூபாய் நோட்டு
Image Credit : our own

ரூ.2000 ரூபாய் நோட்டு

நம் நாட்டில் ரூ.2000 ரூபாய் நோட்டுகள் குறித்து மீண்டும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. ரிசர்வ் வங்கி இந்தியா (ஆர்பிஐ) கூறியதன்படி, ரூ.2000 நோட்டுகள் முழுவதும் சிஸ்டமிலிருந்து மறைந்துவிட்டன என்ற எண்ணத்தில் இருந்த பொதுமக்களுக்கு இது பெரியஅப்டேட். ஆர்பிஐ வெளியிட்ட சமீபத்திய தரவின்படி, இன்று ரூ.5,817 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள் மக்கள் கையிலோ அல்லது சந்தையில் சுழற்சியிலோ உள்ளன. இது, இன்னும் சில பேர் நோட்டுகளை வங்கியில் சமர்ப்பிக்காமல் வைத்திருக்கிறார்கள்.

24
ஆர்பிஐ அறிவிப்பு
Image Credit : Axis bank

ஆர்பிஐ அறிவிப்பு

ரூ.2000 நோட்டுகளின் சுற்றிவருகை 2023 மே 19 அன்று நிறுத்தப்படும் என்று ஆர்பிஐ அறிவித்தபோது, ​​அதன் மொத்த மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடி. இதுவரை 98.37% நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போது மிகக் குறைந்த அளவு நோட்டுகளே சிஸ்டத்தில் இருப்பதால், இந்த நோட்டுகளுக்கான பரிவர்த்தனைகள் மிகவும் அரிதாகிவிட்டன. இதுவரை பலர் இந்த நோட்டுகள் செல்லாது என்று நினைத்தாலும், ஆர்பிஐ மீண்டும் விளக்கமளித்துள்ளது.

Related Articles

Related image1
வீடு வாங்குபவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. ஆர்பிஐ சொன்ன குட் நியூஸ்.!
Related image2
உஷார்.. PhonePe, Paytm பயனர்கள் கவனத்திற்கு.. ஆர்பிஐ கொடுத்த முக்கிய அப்டேட்
34
ரூ.2000 நோட்டுகள்
Image Credit : Istock

ரூ.2000 நோட்டுகள்

ரூ.2000 நோட்டுகள் இன்னும் சட்டபூர்வமானவை. அதாவது, பரிவர்த்தனைகளில் பயன்படுத்தலாம். ஆனால் புதிதாக அச்சடிப்பு இல்லை. வங்கிகள் இப்போது இந்த நோட்டுகளை மீண்டும் வழங்க மாட்டார்கள். மே 19, 2023 முதல் ஆர்பிஐ-யின் 19 பிராந்திய அலுவலகங்களில் டெப்பாசிட்/எக்சேஞ்ச் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், 2023 அக்டோபர் 9 முதல் இந்திய அஞ்சல் சேவையின் மூலம் ஆர்பிஐ-க்கு நோட்டுகளை அனுப்பி, உங்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யும் வசதி தொடங்கப்பட்டது.

44
வங்கிக் கணக்கு
Image Credit : World Economic Forum

வங்கிக் கணக்கு

சில நோட்டுகள் கிராமப்புறங்களில் அல்லது ரொக்கப் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படும் வியாபாரிகளிடமும் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதேசமயம், சிலர் நினைவுச் சின்னமாகவும் சேகரிப்பதற்காகவும் வைத்திருக்கலாம். ரிசர்வ் வங்கி தொடர்ந்து அப்டேட்களை வழங்குகிறது. இன்று உங்கள் கையில் ரூ.2000 நோட்டு இருந்தால், அருகிலுள்ள ஆர்பிஐ அலுவலகம் அல்லது இந்திய அஞ்சல் மூலம் உங்கள் வங்கிக் கணக்கில் நிம்மதியாக டெப்பாசிட் செய்யலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய ரிசர்வ் வங்கி
வங்கி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?
Recommended image2
Gold Rate Today (December 06): இதுதான் இன்றைய தங்கம் விலை.! விலை உயர என்ன காரணம் தெரியுமா?
Recommended image3
வீடு, கார், தனிநபர் கடன்களில் இஎம்ஐ குறையுது.. ரிசர்வ் வங்கியின் பரிசு.. எவ்வளவு குறையும்?
Related Stories
Recommended image1
வீடு வாங்குபவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. ஆர்பிஐ சொன்ன குட் நியூஸ்.!
Recommended image2
உஷார்.. PhonePe, Paytm பயனர்கள் கவனத்திற்கு.. ஆர்பிஐ கொடுத்த முக்கிய அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved