MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • காசு மேல காசு.. வெறும் 5 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் வட்டி தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்.. முழு விவரம்!

காசு மேல காசு.. வெறும் 5 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் வட்டி தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்.. முழு விவரம்!

Post Office Time Deposit: இந்த திட்டத்தில் தனிநபர் கணக்கு மட்டுமின்றி, மூன்று நபர்கள் வரை சேர்ந்து 'Joint Account' தொடங்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் தங்கள் பெயரிலேயே கணக்கைத் தொடங்க முடியும்.

2 Min read
Author : Rayar r
Published : Apr 19 2026, 05:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டம்
Image Credit : iSTOCK

போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டம்

இன்றைய காலக்கட்டத்தில் சேமிப்பு என்பது மிகவும் அவசியமாகிறது. நாம் சம்பாதிக்கும் பணத்தை சிறுக சிறுக சேமித்தால் நாளை அது பெரும் முதலீடாக மாறும். ஆனால் எந்த திட்டத்தில் பணத்தை சேமிக்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அந்த வகையில் சேமிக்கு ஏற்ற மிகவும் சிறப்பான திட்டம் போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டம் (Post Office Time Deposit - POTD) ஆகும். போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டம், பேங்க் FD மாதிரியான ஒரு திட்டம்தான்.

நிலையான வட்டி கிடைக்கும்

ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பணத்தை முதலீடு செய்தால் அதுக்கு ஒரு நிலையான வட்டி கிடைக்கும். நடுத்தர குடும்பங்கள், சீனியர் சிட்டிசன்கள், பாதுகாப்பான முதலீட்டை விரும்புறவங்களுக்கு இது ரொம்பவே உதவியா இருக்கும். இந்த திட்டத்தில் நீங்கள் 1 வருஷத்தில் இருந்து 5 வருஷம் வரைக்கும் முதலீடு பண்ணலாம். இப்போதைக்கு, சுமார் 6.90% முதல் 7.50% வரை வட்டி கொடுக்குறாங்க. உங்கள் தேவைக்கு ஏத்த மாதிரி கால அளவை நீங்க தேர்ந்தெடுக்கலாம்.

23
நீண்ட காலத்துக்கு ஒரு நிலையான வருமானம்
Image Credit : iSTOCK

நீண்ட காலத்துக்கு ஒரு நிலையான வருமானம்

நீங்கள் 7,00,000 ரூபாயை 5 வருஷத்துக்கு 7.50% வட்டியில முதலீடு செய்றீங்கன்னு வச்சுக்கலாம். மெச்சூரிட்டி உங்களுக்கு மொத்தம் ₹10,14,964 கிடைக்கும். அதாவது, வட்டி மட்டுமே சுமார் ₹3,14,964 உங்கள் கைக்கு வரும். இது முழுக்க முழுக்க ரிஸ்க் இல்லாத வருமானம். இந்த திட்டத்துல உறுதியான வருமானம் கிடைக்கும் (நஷ்ட பயம் இல்லை). இதுக்கு மார்க்கெட் மாற்றங்களோட எந்த சம்பந்தமும் இல்லை. அரசாங்கத்தோட உத்தரவாதம் இருக்கு. நீண்ட காலத்துக்கு ஒரு நிலையான வருமானத்தை நீங்க பெறலாம்.

Related Articles

Related image1
ஒரே ஒரு முதலீடு.. வேலைக்கே போக வேண்டாம்.. மாசம் 9,000 சொளையா வரும்.. போஸ்ட் ஆபீஸின் 'மேஜிக்' திட்டம்!
Related image2
Post Office Scheme: மாசம் ₹2000 சேமித்தால் போதும், ₹1.43 லட்சம்.. போஸ்ட் ஆபீஸின் சூப்பர் திட்டம்!
33
 வட்டி காலாண்டுக்கு ஒருமுறை
Image Credit : iSTOCK

வட்டி காலாண்டுக்கு ஒருமுறை

இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ₹1000 முதலீடு செய்யலாம். அதுக்கப்புறம் ₹1000-ன் மடங்குகளா முதலீடு பண்ணலாம். அதிகபட்ச முதலீட்டுக்கு எந்த லிமிட்டும் இல்லை. பக்கத்துல இருக்குற போஸ்ட் ஆபீஸ்ல ஈஸியா அக்கவுன்ட் திறக்கலாம். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாமினிகளை சேர்த்துக்கலாம். 6 மாசத்துக்கு அப்புறம் தேவைப்பட்டா பணத்தை எடுத்துக்கலாம் (வட்டியில சில மாற்றம் இருக்கலாம்). 5 வருஷ TD முதலீட்டுக்கு, செக்‌ஷன் 80C-யின் கீழ் ₹1.5 லட்சம் வரைக்கும் வரி விலக்கு உண்டு. ஆனா, வட்டிக்கு வரி கட்டணும். வட்டி காலாண்டுக்கு ஒருமுறை கணக்கிடப்படும்.

ஜாய்ண்ட் அக்கவுண்ட்டும் தொடங்கலாம்

இந்த திட்டத்தில் தனிநபர் கணக்கு மட்டுமின்றி, மூன்று நபர்கள் வரை சேர்ந்து 'Joint Account' தொடங்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் தங்கள் பெயரிலேயே கணக்கைத் தொடங்க முடியும். 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குப் பெற்றோர் அல்லது பாதுகாவலர் கணக்கை நிர்வகிக்கலாம். தனிநபர் கணக்கை ஜாயிண்ட் கணக்காகவும், ஜாயிண்ட் கணக்கைத் தனிநபர் கணக்காகவும் மாற்றிக்கொள்ளும் வசதியும் உண்டு.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தபால் அலுவலகத் திட்டம்
அஞ்சல் அலுவலகம்
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மாதம் ரூ.9,250 வருமானம்.. ரிஸ்க் இல்லாமல் பணம் வரும் அரசு திட்டம்.. உங்களுக்கு தெரியுமா?
Recommended image2
வாடகை உயர்வில் ஆசியாவிலேயே பெங்களூரு முதலிடம்.. சென்னை எந்த இடம்? முழு விவரம் உள்ளே!
Recommended image3
இந்தியா vs வெளிநாடுகள்.. எங்கே வருமான வரி அதிகம்? சம்பளம் எவ்வளவு கைக்கு வரும்.. முழு விவரம் இதோ!
Related Stories
Recommended image1
ஒரே ஒரு முதலீடு.. வேலைக்கே போக வேண்டாம்.. மாசம் 9,000 சொளையா வரும்.. போஸ்ட் ஆபீஸின் 'மேஜிக்' திட்டம்!
Recommended image2
Post Office Scheme: மாசம் ₹2000 சேமித்தால் போதும், ₹1.43 லட்சம்.. போஸ்ட் ஆபீஸின் சூப்பர் திட்டம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved