இவர்கள் டோல் கட்டணம் செலுத்த தேவையில்லை.. இலவசமா போகலாம்.. முழு லிஸ்ட் உள்ளே
இந்தியாவில் உள்ள நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் செலுத்த வேண்டாம் எனும் விதி சிலருக்கு பொருந்துகிறது. அது யாருக்கெல்லாம் பொருந்தும் என்பதை வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்வது அவசியம் ஆகும். இதனால் காசை மிச்சப்படுத்தலாம்.

டோல் கட்டண விலக்கு
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் தினமும் கோடிக்கணக்கான வாகனங்கள் பயணம் செய்கின்றன. அந்த வழியில் பல கட்டணச் சாவடிகளும் வருகின்றன. நாடு முழுவதும் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட டோல் பிளாசாக்கள் உள்ளன. வழக்கமாக அனைத்து வாகனங்களும் கட்டணம் செலுத்தியே செல்ல வேண்டும். ஆனால் சில குறிப்பிட்ட நபர்களுக்கும், சில வாகனங்களுக்கும் அரசு சிறப்பு விலக்கு வழங்கி வருகிறது.
டோல் பிளாசா
உங்கள் வீடு ஒரு டோல் பிளாசாவிற்கு அருகிலா? குறிப்பாக, 20 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருந்தால், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) டோல் விலக்கு வழங்குகிறது. இதற்கான முக்கிய நிபந்தனை, உங்கள் முகவரி அப்பகுதிக்குள் இருப்பதை நிரூபிக்கும் அதிகாரப்பூர்வ ஆவணங்களை காட்ட வேண்டும். 2024 செப்டம்பர் 24 முதல் அமலுக்கு வந்தது ‘Turn-the-Distance-the-Toll’ கொள்கையின் கீழ், GNSS கண்காணிப்பு அமைப்பு பொருத்தப்பட்ட வாகனங்கள் 20 கி.மீ வரை பயணிக்கும் போது டோல் கட்டணத்திலிருந்து விடுபடுகின்றன.
டோல் பிளாசா விதிகள்
இவ்விலக்கு பொதுமக்கள் மட்டுமல்லாது, அரசு வாகனங்களுக்கும் வழங்கப்படுகிறது. மத்திய மாநில மற்றும் அரசு துறைகள், போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் போன்றவை டோல் கட்டணத்தில் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளன. மேலும், இராணுவம், கடற்படை, வான்படை சார்ந்த வாகனங்களுக்கும் விலக்கு உண்டு. பேரழிவு நேரங்களில் பணிபுரியும் NDRF மீட்பு வாகனங்களும் இந்த சலுகையைப் பெறுகின்றன. அதிகம் பயணிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளும் டோல் கட்டணத்திலிருந்து முழுமையாக விலக்கப்பட்டுள்ளன.
20 கி.மீ டோல் சலுகை
இதனால் அவர்களுக்கு Fastag அவசியமில்லை. இதேபோல் சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளும் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மொத்தத்தில், உங்கள் வீட்டு டோல் பிளாசாவிற்கு எவ்வளவு அருகில் உள்ளது என்பது மிக முக்கியமான விஷயம். 20 கிலோமீட்டருக்குள் இருந்தால் உரிய விண்ணப்பத்துடன் இந்த இலவச பயணச் சலுகையைப் பெறலாம். டோல் விதிகளில் அரசு மேற்கொண்டிருக்கும் இந்த மாற்றம், நெடுஞ்சாலை அருகில் வாழும் மக்களுக்கு பெரும் நிவாரணமாக உள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

