MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • டிசம்பர் 1 முதல் மாறும் முக்கிய விதிகள்.. மக்களே நோட் பண்ணுங்க..!

டிசம்பர் 1 முதல் மாறும் முக்கிய விதிகள்.. மக்களே நோட் பண்ணுங்க..!

டிசம்பர் 1 முதல் பல முக்கிய விதிமுறைகள் மாறுகின்றன. இந்த மாற்றங்கள் பொதுமக்களின் நிதிநிலையை நேரடியாகப் பாதிக்கும். அவற்றை தெரிந்து கொள்வது அவசியம்.

1 Min read
Author : Raghupati R
Published : Nov 30 2025, 10:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
டிசம்பர் 1 விதிமாற்றம்
Image Credit : our own

டிசம்பர் 1 விதிமாற்றம்

டிசம்பர் மாதம் நாளை தொடங்க உள்ளது. நவம்பர் 30 க்குப் பிறகு பல முக்கிய விதிமுறைகள் உள்ளன. இந்த மாற்றங்கள் நேரடியாக பொதுமக்களின் செலவுகளுக்கும், வரவுகளுக்கும் தாக்கம் ஏற்படுத்தும் என்பதால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஓய்வூதியம், உயிர்ப்புச் சான்று, எல்பிஜி விலை உள்ளிட்ட பல துறைகளில் விதிமுறைகள் மாறவுள்ளதால், டிசம்பர் 1 முதல் எந்த மாற்றங்கள் அமலுக்கு வரும் வரப்போகின்றன என்பதை கீழே சுருக்கமாக பார்ப்போம்.

24
யுபிஎஸ் திட்டம்
Image Credit : our own

யுபிஎஸ் திட்டம்

மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (யுபிஎஸ்) குறித்து ஒரு முக்கிய காலக்கெடு முடிவடைகிறது. இதில், தேசிய ஓய்வூதிய திட்டமான NPS-இலிருந்து UPS திட்டத்திற்கு மாற விரும்பும் மத்திய அரசு ஊழியர்கள், நவம்பர் 30க்குள் தங்கள் விருப்பத்தை பதிவு செய்ய வேண்டும். இதற்கான காலக்கெடு ஒரு முறை நீட்டிக்கப்பட்டிருந்தாலும், டிசம்பர் 1 க்குப் பிறகு மீண்டும் விண்ணப்பம் திறக்கப்படாது என்று அரசு தெளிவாகத் தெரிவித்துள்ளது. இன்னும் விண்ணப்பிக்காத ஊழியர்கள் உடனடியாக இந்த வாய்ப்பைப் பெற வேண்டும்.

Related Articles

Related image1
Business: லட்சங்களில் வருமானம் தரும் டாப் 10 தொழில்கள்.! குறைந்த முதலீடு கொட்டும் வருமானம்.!
Related image2
Telecom War: அடித்து ஆடும் ஜியோ.! ஏர்டெல்லை பின்னுக்கு தள்ளும் பிஸ்னஸ் ராஜதந்திரம் இதுதான்.!
34
ஓய்வூதியர் அறிவிப்பு
Image Credit : Asianet News

ஓய்வூதியர் அறிவிப்பு

கோடிக்கணக்கான ஓய்வூதியர்களுக்குவாழ்க்கைச் சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயமாகும். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30 தான் இதற்கான இறுதி தேதி. இந்தத் தேதிக்குள் உயிர்ப்புச் சான்று சமர்ப்பிக்காதவர்கள் டிசம்பர் மாதத்தில் ஓய்வூதியம் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது. அதனால், முதியோர் மற்றும் ஓய்வுபெற்றோர் தங்களின் உயிர்ப்புச் சான்றை நேரடியாகவோ, ஆன்லைன் முறையிலோ, ஜீவன் பிரமான் வழியாகவோ விரைவாக சமர்ப்பிக்கவும் வேண்டும்.

44
எல்பிஜி சிலிண்டர் விலை
Image Credit : our own

எல்பிஜி சிலிண்டர் விலை

எல்பிஜி சிலிண்டர் விலையும் டிசம்பர் 1 முதல் மாதாந்திர பரிசீலனைக்கு உட்படுகிறது. சர்வதேச சந்தை நிலவரம், கச்சா எண்ணெய் விலை மற்றும் ரூபாய்–டாலர் மாற்றங்களின் அடிப்படையில் விலைகள் உயர்ந்தோ குறைந்தோ இருக்கலாம். தற்போது எல்பிஜி விலையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லாத நிலையில் இருந்தாலும், உலக சந்தை அதிர்வுகளால் இந்த முறை சிறிய அளவில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓய்வூதியம்
எரிவாயு உருளை
விலைவாசி

Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்த வாரம் 4 நாட்களுக்கு வங்கி விடுமுறை.. பேங்க் செல்வதற்கு முன்.. தேதிகளை நோட் பண்ணுங்க
Recommended image2
எக்ஸ்பிரஸ்வே டோல் குறைப்பு.. இனி முழு கட்டணம் இல்லை.. மத்திய அரசு அறிவிப்பு
Recommended image3
SBI வாடிக்கையாளர்களாக நீங்கள்! அப்படினா! இந்த செய்தி உங்களுக்கு தான்! இன்று முதல் அமலாகிறது!
Related Stories
Recommended image1
Business: லட்சங்களில் வருமானம் தரும் டாப் 10 தொழில்கள்.! குறைந்த முதலீடு கொட்டும் வருமானம்.!
Recommended image2
Telecom War: அடித்து ஆடும் ஜியோ.! ஏர்டெல்லை பின்னுக்கு தள்ளும் பிஸ்னஸ் ராஜதந்திரம் இதுதான்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved