- Home
- Business
- நகரம் முதல் கிராமம் வரை.. சிலிண்டர் புக்கிங் செய்பவர்களுக்கு குட்நியூஸ்! மத்திய அரசு முக்கிய தகவல்
நகரம் முதல் கிராமம் வரை.. சிலிண்டர் புக்கிங் செய்பவர்களுக்கு குட்நியூஸ்! மத்திய அரசு முக்கிய தகவல்
சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக, எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால வரம்பில் மாற்றம் செய்யப்பட்டது. இரண்டு சிலிண்டர் இணைப்பு வைத்திருப்பவர்கள் 45 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே முன்பதிவு செய்யும் நடைமுறை அமல்.

போர் பதற்றம்
அமெரிக்கா, இஸ்ரேல்- ஈரான் இடையேயான போர் காரணமாக உலக நாடுகள் பல்வேறு பொருளாதார சிக்கல்களை சந்தித்து வருகின்றன. குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை வழியாக வளைகுடா நாடுகளில் இருந்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு ஓட்டல்கள் மூடப்பட்டன.
சிலிண்டர்கள் தட்டுப்பாடு
வணிக கேஸ் சிலிண்டர்கள் மட்டுமின்றி வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக, எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால வரம்பில் மாற்றம் செய்யப்பட்டது. இரண்டு சிலிண்டர் இணைப்பு வைத்திருப்பவர்கள் 45 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே முன்பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வந்தது. இந்த பொதுமக்கள் சிலிண்டர் கிடைக்காமல் தினமும் நீண்ட வரிசையில் காத்திருந்ததை பார்க்க முடிந்தது. மற்றொருபுறம் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது.
எல்பிஜி உற்பத்தி அதிகரிப்பு
இந்நிலையில் கேஸ் சிலிண்டர் புக்கிங் மற்றும் விநியோகம் குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. டெல்லியில் உயர்மட்டக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலாளர் சுஜாதா ஷர்மாவும் பங்கேற்றார். இதனையடுத்து அவர் கூறுகையில்: வெளிநாடுகளில் நெருக்கடி நிலவி வரும் நிலையில் மக்களின் பொருளாதாரத்தைப் பாதிக்காத வகையில், உள்நாட்டு எல்பிஜி உற்பத்தியை அரசாங்கம் கணிசமாக உயர்த்தியுள்ளது.
பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்
குறிப்பாக எரிவாயு முன்பதிவு செய்வதற்கான காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே நகரம் முதல் கிராமம் வரை இனி சிலிண்டர் முன்பதிவுக்கு அச்சப்பட வேண்டாம். நாட்டில் இருக்கும் எந்தவொரு எரிவாயு முகமையிலும் கையிருப்புக்கு பற்றாக்குறை இல்லை. விநியோகம் முற்றிலும் சீராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
உரிய நருக்கு நேரடியாக விநியோகிக்கப்படும்
எரிவாயு கள்ளச்சந்தை மற்றும் தவறான பயன்பாட்டைத் தடுப்பதற்காக, அரசாங்கம் தற்போது விநியோக அங்கீகாரக் குறியீடு (DAC) முறையைக் கடுமையாக அமல்படுத்தி வருகிறது. இதன் மூலம் உரிய நருக்கு நேரடியாக விநியோகிக்கப்படும். கடல் வழியாக வரும் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் முழுமையாகத் தயாராக உள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

