MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை.! நகையா? கோல்டு பிஸ்கட்டா? இந்த நேரத்தில் எது வாங்குவது சிறந்தது?

ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை.! நகையா? கோல்டு பிஸ்கட்டா? இந்த நேரத்தில் எது வாங்குவது சிறந்தது?

Gold Jewelry vs Gold Biscuit : தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தங்கம் வாங்கலாமா, நகையாக வாங்குவதா அல்லது பிஸ்கட்டாக வாங்குவதா என்று பலருக்கும் ஒரே குழப்பம். எது பெஸ்ட் என்று இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

1 Min read
Author : Ramprasath S
Published : Mar 21 2026, 05:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Gold Jewels vs Gold Biscuit
Image Credit : Getty

Gold Jewels vs Gold Biscuit

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகிறது. இதனால், தங்கம் வாங்கலாமா வேண்டாமா, அப்படியே வாங்கினாலும் நகையா அல்லது பிஸ்கட்டா என பலருக்கும் குழப்பம் இருக்கும். தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடு என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், சரியான முடிவு எடுக்கவில்லை என்றால் லாபத்திற்குப் பதிலாக நஷ்டம் வரலாம்.

24
செய்கூலி சேதாரம் இல்லை
Image Credit : Getty

செய்கூலி சேதாரம் இல்லை

இந்தியர்களுக்கு தங்க நகைகள் என்றால் இஷ்டம். திருமணம், விசேஷம் என்றால் நகை இல்லாமல் ஒரு நிகழ்ச்சியும் நடக்காது. ஆனால், முதலீட்டுக் கண்ணோட்டத்தில் பார்த்தால், நகைகள் வாங்குவது அவ்வளவு சிறந்ததல்ல. ஏனென்றால், அதற்கு செய்கூலி, சேதாரம் என 10% முதல் 20% வரை தனியாக செலவாகும். ஆனால், விற்கும்போது இந்தப் பணம் திரும்ப வராது. அதனால், முதலீட்டுக்காக மட்டும் நகை வாங்குவது நல்ல யோசனை இல்லை.

Related Articles

Related image1
Gold Rate: பதட்டமே வேண்டாம்! அடுத்த 9 மாதங்களுக்கு தங்கம் விலையில் மாற்றமில்லை! அடித்து சொல்லும் நிபுணர்கள்!
Related image2
தொடர்ந்து சரியும் தங்கம் விலை.! ரூ.80,000-க்கு கீழ் குறையுமா? நிபுணர்கள் கூறுவது என்ன.?
34
கோல்டு பிஸ்கட் பெஸ்ட் ஆப்ஷன்
Image Credit : Getty

கோல்டு பிஸ்கட் பெஸ்ட் ஆப்ஷன்

கோல்டு பிஸ்கட் அல்லது கோல்டு பார் முழுக்க முழுக்க முதலீட்டுக்காகவே வடிவமைக்கப்பட்டது. இதில் செய்கூலி ரொம்பவே குறைவு. அதனால், நீங்கள் போடும் பணம் கிட்டத்தட்ட முழுமையாக தங்கத்தில்தான் இருக்கும். தங்கம் விலை ஏறினால், லாபம் நேரடியாக உங்களுக்கு வரும். விற்பதும் மிகவும் சுலபம். ஆனால், இதை பேங்க் லாக்கரில் வைத்துப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். இது சற்று சிரமமாக இருந்தாலும், முதலீட்டுக்கு இதுதான் பெஸ்ட் ஆப்ஷன்.

44
தேவையைப் பொறுத்து முடிவெடுங்கள்c
Image Credit : Getty

தேவையைப் பொறுத்து முடிவெடுங்கள்c

நீங்கள் எதற்காகத் தங்கம் வாங்க நினைக்கிறீர்கள் என்று முதலில் தெளிவாக முடிவு செய்யுங்கள். போட்டு அழகு பார்க்க, ஃபங்ஷனுக்கு என்றால் நகைகள் வாங்கலாம். ஆனால், முதலீடுதான் உங்கள் நோக்கம் என்றால் கோல்டு பிஸ்கட் அல்லது பார் வாங்குவதுதான் புத்திசாலித்தனம். இப்போது டிஜிட்டல் கோல்டு, கோல்டு பாண்ட்ஸ் எனப் புதிய ஆப்ஷன்களும் உள்ளன. அதனால், உங்கள் தேவை, பட்ஜெட்டைப் பொறுத்து சரியாக ப்ளான் செய்து வாங்கினால், எதிர்காலத்தில் நல்ல லாபம் பார்க்கலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வணிகம்
தங்கம்
தங்க விலை
இன்றைய தங்கம் விலை
முதலீடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
LIC Jeevan Pragati: தினமும் ரூ.200 போதும்... 20 வருஷத்தில் ரூ.28 லட்சம் ரிட்டர்ன்ஸ்! LIC சூப்பர் திட்டம்!
Recommended image2
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை எப்போது? தங்கம் வாங்க நல்ல நேரம் இதுதான்!
Recommended image3
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்க்கும் அறிவிப்பு எப்போது.? வெளியான முக்கிய அப்டேட்
Related Stories
Recommended image1
Gold Rate: பதட்டமே வேண்டாம்! அடுத்த 9 மாதங்களுக்கு தங்கம் விலையில் மாற்றமில்லை! அடித்து சொல்லும் நிபுணர்கள்!
Recommended image2
தொடர்ந்து சரியும் தங்கம் விலை.! ரூ.80,000-க்கு கீழ் குறையுமா? நிபுணர்கள் கூறுவது என்ன.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved