MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்! இந்திய ரயில்வே வழங்கும் 5 சலுகைகள்! மறக்காம நோட் பண்ணிக்கோங்க!

மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்! இந்திய ரயில்வே வழங்கும் 5 சலுகைகள்! மறக்காம நோட் பண்ணிக்கோங்க!

இந்தியன் ரயில்வே மூத்த முடிமக்களுக்கு 5 சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த சலுகை என்னென்ன ? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Aug 17 2025, 09:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Indian Railways Special Offer For Senior Citizens
Image Credit : AI

Indian Railways Special Offer For Senior Citizens

இந்தியாவில் தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும், களைப்பின்றியும் பயணம் செய்ய முடியும் என்பதால் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாகும். 

நாட்டில் தினமும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்தியன் ரயில்வே பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அதுவும் மூத்த குடிமக்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கி வருகிறது. அது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

24
லோயர் பெர்த் வசதி
Image Credit : iSTOCK

லோயர் பெர்த் வசதி

60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ரயிலில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் சிரமம் ஏற்படாதவாறு லோயர் பெர்த் எனப்படும் கீழ் இருக்கைகள் வழங்கப்படுகின்றன. 

இந்த வசதி ரயில்களின் ஸ்லீப்பர், ஏசி 3 டயர் மற்றும் ஏசி 2 டயர் பெட்டிகளில் கிடைக்கிறது. ரயில் புறப்பட்ட பிறகும் கீழ் இருக்கைகள் காலியாக இருந்தால், அது மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் மூத்த குடிமக்கள் இனிமேல் சீட் மாற்றித் தரும்பரி யாரிடமும் கேட்க வேண்டியதில்லை.

Related Articles

Related image1
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.! வெறும் 45 பைசாவில் ரூ.10 லட்சம் வரை காப்பீடு..! ரயில்வே துறையின் அதிரடி பயண காப்பீடு திட்டம்.!
Related image2
மூத்த குடிமக்களுக்கு 40-50% ரயில்வே கட்டண சலுகை.. விரைவில் நல்ல செய்தி.?
34
சிறப்பு டிக்கெட் கவுண்ட்டர்கள்
Image Credit : Gemini AI

சிறப்பு டிக்கெட் கவுண்ட்டர்கள்

முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி பயணிகளுக்காக ரயில் நிலையங்களில் தனி டிக்கெட் முன்பதிவு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. மூத்த குடிமக்கள் நீண்ட வரிசையில் நிற்பதைத் தடுக்கிறது. இந்த வசதியின் மூலம் அவர்கள் விரைவாக டிக்கெட்டுகளைப் பெற முடிகிறது.

சக்கர நாற்காலி வசதி

இந்தியாவில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் மூத்த குடிமக்களுக்கு இலவச சக்கர நாற்காலிகள் வழங்கப்படுகின்றன. நடக்க சிரமப்படும் முதியவர்களுக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும். சக்கர நாற்காலிகளுடன், உதவிக்கு போர்ட்டர்களும் உள்ளனர். இந்த சலுகை மூத்த குடிமக்கள் ரயிலில் சிரமமின்றி ஏற உதவுகிறது.

44
உள்ளூர் ரயில்களில் சிறப்பு இருக்கைகள்
Image Credit : stockPhoto

உள்ளூர் ரயில்களில் சிறப்பு இருக்கைகள்

மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற நகரங்களின் புறநகர் உள்ளூர் ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் பயணத்தின்போது அவர்கள் இனிமேல் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.

பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்கள்

நாட்டின் பெரிய ரயில் நிலையங்களில் பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்கள் (கோல்ஃப் வண்டிகள்) இலவசமாகக் கிடைக்கின்றன. ரயில் நிலைய பிளாட்பாரங்களில் இருந்து நுழைவு வாயிலுக்கு பேட்டரி கார்கள் மூலம் அழைத்து செல்லப்படுவதால் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிகம் நடக்க வேண்டிய அவசியமில்லை.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தொடர்வண்டிப் போக்குவரத்து
இந்திய இரயில்வே
மூத்த குடிமக்கள்
தொடர்வண்டி விதிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்த வாரம் 4 நாட்களுக்கு வங்கி விடுமுறை.. பேங்க் செல்வதற்கு முன்.. தேதிகளை நோட் பண்ணுங்க
Recommended image2
எக்ஸ்பிரஸ்வே டோல் குறைப்பு.. இனி முழு கட்டணம் இல்லை.. மத்திய அரசு அறிவிப்பு
Recommended image3
SBI வாடிக்கையாளர்களாக நீங்கள்! அப்படினா! இந்த செய்தி உங்களுக்கு தான்! இன்று முதல் அமலாகிறது!
Related Stories
Recommended image1
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.! வெறும் 45 பைசாவில் ரூ.10 லட்சம் வரை காப்பீடு..! ரயில்வே துறையின் அதிரடி பயண காப்பீடு திட்டம்.!
Recommended image2
மூத்த குடிமக்களுக்கு 40-50% ரயில்வே கட்டண சலுகை.. விரைவில் நல்ல செய்தி.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved