MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்! ரூ.55 செலுத்தினால் மாதம் ரூ.3,000 கிடைக்கும்! 'சூப்பர்' திட்டம்!

மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்! ரூ.55 செலுத்தினால் மாதம் ரூ.3,000 கிடைக்கும்! 'சூப்பர்' திட்டம்!

ரூ.55 செலுத்தினால் மாதம் ரூ.3,000 பென்சன் வழங்கும் பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா திட்டம் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Aug 05 2025, 07:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Senior Citizens Pension Scheme
Image Credit : our own

Senior Citizens Pension Scheme

ஒருவர் வேலையில் இருந்து தனது 60 வயதில் ஓய்வு பெறும்போது, அதன்பிறகு அவருக்கு நிதி ஆதாரமாக இருப்பது ஓய்வூதியமாகும். பெரும்பாலானோருக்கு இந்த ஓய்வூதிய தொகை குறைவாக இருப்பதாலும், 60 வயதுக்கு மேல் வேறு வருமானம் கிடைக்காததாலும் அன்றாட செலவுக்கு அல்லாடுகின்றனர். இனி ஓய்வுக்கு பிறகு மூத்த குடிமக்கள் வருமானத்துக்கு அல்லல் பட வேண்டிய நிலை இருக்காது. ஏனெனில் இவர்களுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசு பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா (Pradhan Mantri Shram Yogi Maandhan Yojana - PMSYM) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

24
பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா திட்டம்
Image Credit : Asianet News

பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா திட்டம்

பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியப் பாதுகாப்பு வழங்கும் ஒரு மத்திய அரசுத் திட்டமாகும். 60 வயதுக்குப் பிறகு அவர்களுக்கு மாதந்தோறும் நிலையான வருமானத்தை உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். தெருவோர வியாபாரிகள், ரிக்‌ஷா ஓட்டுநர்கள், கட்டடத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், பீடி தொழிலாளர்கள் மற்றும் பிற அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆகியோர் இந்த திட்டத்தில் இணையலாம்.

Related Articles

Related image1
மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்! அதிக வட்டியை அள்ளிக்கொடுக்கும் எஸ்பிஐ FD திட்டம்!
Related image2
அனைத்து ரயில் நிலையங்களிலும் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு டிக்கெட் - கொண்டாட்டத்தில் மூத்த குடிமக்கள்
34
ரூ.55 செலுத்தினால் ரூ.3,000‍ கிடைக்கும்
Image Credit : Asianet News

ரூ.55 செலுத்தினால் ரூ.3,000‍ கிடைக்கும்

இந்தத் திட்டத்தில் சேருவதற்கு 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தகுதியுடையவர்கள். 18 வயதில் மாதம் ரூ.55, 29 வயதில் மாதம் ரூ.100, 40 வயதில் மாதம் ரூ.200 என செலுத்த வேண்டும். பயனாளிகள் செலுத்தும் அதே தொகையை மத்திய அரசும் செலுத்தும். இது 50:50 பங்களிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தில் தகுதி பெற மாத வருமானம் ரூ.15,000 அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO), தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS), அல்லது அரசு ஊழியர் காப்பீட்டுக் கழகம் (ESIC) போன்ற பிற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் உறுப்பினராக இருக்கக் கூடாது.

44
எப்படி விண்ணப்பிப்பது?
Image Credit : Asianet News

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த திட்டத்தில் சேர பொது சேவை மையத்திற்கு (Common Service Centre - CSC) சென்று உங்கள் ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு பாஸ்புக்கை எடுத்துச் சென்று விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் வாயிலாக https://maandhan.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆதார் எண், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் மொபைல் எண் ஆகியவை அவசியமாகும்.

மத்திய அரசு திட்டத்தின் பயன்கள்

இந்த திட்டத்தின் பயனாக 60 வயதுக்குப் பிறகு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் கிடைக்கும். திட்டத்தில் சேர்ந்தவர் இறந்தால், அவரது வாழ்க்கைத் துணைக்கு ஓய்வூதியத் தொகையில் 50% (ரூ.1,500) குடும்ப ஓய்வூதியமாக கிடைக்கும். பயனாளிகள் செலுத்தும் அதே தொகையை மத்திய அரசு செலுத்துவதால் இந்த திட்டத்தின் மூலம் குறைந்த முதலீட்டில் அதிக பலன் பெறலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஓய்வூதியத் திட்டம்
ஓய்வூதியம்
மத்திய அரசு
மூத்த குடிமக்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. ரயில் டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி.. எப்படி பெறுவது? முழு விவரம்!
Recommended image2
IRCTC : ஸ்லீப்பர் டிக்கெட்டில் ஏசி கோச்சில் பயணம் செய்ய வேண்டுமா? புக்கிங் போது இந்த ஒரு ஆப்ஷனை மட்டும் கிளிக் செய்யுங்க.!
Recommended image3
வேலைக்கே செல்லாமல் மாதம் ரூ.20000 வருமானம் வேண்டுமா? ஓய்வுக்குப் பின் ஜாலியாக வாழ சூப்பர் திட்டம்.!
Related Stories
Recommended image1
மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்! அதிக வட்டியை அள்ளிக்கொடுக்கும் எஸ்பிஐ FD திட்டம்!
Recommended image2
அனைத்து ரயில் நிலையங்களிலும் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு டிக்கெட் - கொண்டாட்டத்தில் மூத்த குடிமக்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved