MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • காலையிலேயே வந்த குட்நியூஸ்! சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்தது!

காலையிலேயே வந்த குட்நியூஸ்! சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்தது!

டிசம்பர் 1ம் தேதி முதல், வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.10.50 குறைத்துள்ளன. இதனால் அதன் புதிய விலை ரூ.1,739.50 ஆக உள்ளது. இருப்பினும், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

1 Min read
Author : vinoth kumar
Published : Dec 01 2025, 07:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
எண்ணெய் நிறுவனங்கள்
Image Credit : our own

எண்ணெய் நிறுவனங்கள்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா விலைக்கு ஏற்றார் போல இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

25
மாதந்தோறும் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம்
Image Credit : Google

மாதந்தோறும் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம்

அதன்படி பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைத்து வருகிறது. ஆனால், கிட்டத்தட்ட பல மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது. அதே நேரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

Related Articles

Related image1
ஈகோ நம்மை அழிவின் பாதைக்கு இழுத்து செல்லும்! எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொதித்த பூங்குன்றன்?
Related image2
மாதத்தின் முதல் நாளே பொதுமக்களுக்கு அதிர்ச்சி! தமிழகம் முழுவதும் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை?
35
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை
Image Credit : Google

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை

ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து வருகின்றன. கடந்த அக்டோபர் மாதம் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை ரூ.16 உயர்ந்த நிலையில் நவம்பர் மாதம் ரூ.4.50 காசுகள் குறைந்து ரூ.1,750ஆக விற்பனை செய்யப்பட்டது.

45
டிசம்பர் 1ம் சிலிண்டர் விலை குறைந்தது
Image Credit : Google

டிசம்பர் 1ம் சிலிண்டர் விலை குறைந்தது

இந்நிலையில், டிசம்பர் 1ம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக குறைத்து பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதாவது 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை நேற்று ரூ.1,750க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.10.50 காசுகள் ரூ.1,739 ரூபாய் 50 காசுக்கு விற்பனையாகிறது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

55
வீட்டு உபயோக சிலிண்டர் விலை
Image Credit : Google

வீட்டு உபயோக சிலிண்டர் விலை

அதேநேரத்தில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையின் நிலவரத்தை பார்ப்போம். அதாவது வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ரூ.868.50க்கு விற்பனையாகிறது. கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வணிகம்
தமிழ்நாடு
சென்னை

Latest Videos
Recommended Stories
Recommended image1
SBI வாடிக்கையாளர்களாக நீங்கள்! அப்படினா! இந்த செய்தி உங்களுக்கு தான்! இன்று முதல் அமலாகிறது!
Recommended image2
ரூ.2 லட்சம் முதலீடு போதும்.! மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம்.! Small Business Ideas in Tamil
Recommended image3
பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. ரயில் டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி.. எப்படி பெறுவது? முழு விவரம்!
Related Stories
Recommended image1
ஈகோ நம்மை அழிவின் பாதைக்கு இழுத்து செல்லும்! எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொதித்த பூங்குன்றன்?
Recommended image2
மாதத்தின் முதல் நாளே பொதுமக்களுக்கு அதிர்ச்சி! தமிழகம் முழுவதும் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved