MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • சிகரெட் விலை உச்சம்.. ஒரு சிகரெட்டுக்கு ரூ.8.50 உயர்வு.. அடேங்கப்பா! ஒரு பாக்கெட் இவ்வளவா?

சிகரெட் விலை உச்சம்.. ஒரு சிகரெட்டுக்கு ரூ.8.50 உயர்வு.. அடேங்கப்பா! ஒரு பாக்கெட் இவ்வளவா?

சிகரெட் புகை என்பது அதனை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமின்றி அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கும் பெரும் கேடு விளைவிப்பதாகும். ஆகவே சிகரெட் விலை உயர்வை பெரும்பாலானவர்கள் வரவேற்றுள்ளனர்.

2 Min read
Author : Rayar r
Published : Feb 01 2026, 08:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சிகரெட் விலை உயர்வு
Image Credit : Getty

சிகரெட் விலை உயர்வு

மத்திய அரசு சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீது இதுவரை இருந்த ஜிஎஸ்டி இழப்பீடு வரிக்கு பதிலாக புதிய கூடுதல் கலால் வரி மற்றும் சுகாதார வரியை கொண்டு வந்துள்ளது. புகையிலை பொருட்கள் மீதான இந்த புதிய வரி இன்று (பிப்ரவரி 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக சிகரெட் விலை ஒரு பாக்கெட்டுக்கு ரூ.22 முதல் ரூ.25 வரை உயர்ந்துள்ளது.

24
ஒரு பாக்கெட் சிகரெட் ரூ.25 வரை உயர்வு
Image Credit : Getty

ஒரு பாக்கெட் சிகரெட் ரூ.25 வரை உயர்வு

அதாவது 10 சிகரெட்டுகள் கொண்ட ஒரு பாக்கெட்டின் விலை குறைந்தபட்சம் ரூ.22 முதல் ரூ.25 வரை அதிகரித்துள்ளது. 76 மி.மீ நீளமுள்ள பிரீமியம் சிகரெட்டுகளின் விலை அதன் பிராண்டைப் பொறுத்து, 10 சிகரெட்டுகள் கொண்ட ஒரு பாக்கெட்டுக்கு ரூ.50 முதல் ரூ.55 வரை அதிகமாக இருக்கும். 

பிரபலமான நடுத்தர அளவிலான சிகரெட்டான வில்ஸ் நேவி கட் (76 மி.மீ நீளம்) ஒரு பாக்கெட் (10 சிகரெட்டுகள்) ரூ.95-க்கு விற்கப்பட்ட நிலையில், அதன் விலை ஒரு பாக்கெட்டுக்கு சுமார் ரூ.120 ஆக அதிகரிக்கிறது.

கோல்ட் ஃப்ளேக் லைட்ஸ், வில்ஸ் கிளாசிக் விலை எவ்வளவு?

கோல்ட் ஃப்ளேக் லைட்ஸ், வில்ஸ் கிளாசிக் மற்றும் வில்ஸ் கிளாசிக் மைல்ட்ஸ் போன்ற 84 மி.மீ நீளமுள்ள சிகரெட்டுகள் ஒரு பாக்கெட் (10 சிகரெட்டுகள்) ரூ.170-க்கு விற்கப்பட்ட நிலையில் இவற்றின் விலை ரூ.220 முதல் ரூ.225 வரை அதிகரிக்கிறது. 

கிளாசிக் கனெக்ட் (97 மி.மீ நீளம்) போன்ற மெல்லிய சிகரெட்டுகள் 20 சிகரெட்டுகள் கொண்ட ஒரு பாக்கெட் ரூ.300-க்கு விற்கப்பட்ட நிலையில், அதன் அதிகபட்ச விலை இனிமேல் ரூ.350 ஆக இருக்கும்.

Related Articles

Related image1
மத்திய பட்ஜெட் 2026.! எந்தெந்த விலை பொருட்கள் விலை குறையும்? மதுபானம், சிகரெட் உயரப்போகுது!
Related image2
ஃபாஸ்டேக் முதல் சிகரெட் விலை உயர்வு வரை.. பிப்ரவரியில் அதிரடி மாற்றங்கள்.. முழு விவரம்!
34
பிரீமியம் சிகரெட்டுகள்
Image Credit : Getty

பிரீமியம் சிகரெட்டுகள்

ஒரு சிகரெட் என்று எடுத்துக் கொண்டால் 65 மி.மீ வரை உயரம் கொண்ட சிகரெட் (பில்டர் இல்லாதது) விலை ரூ.2.5 உயரும். 65 மி.மீ வரையலான சிக்ரெட் (பில்டர் உள்ளது) ரூ.2.10 உயரும். 65 மி.மீ - 70 மி.மீ வரையிலான சிகரெட் ரூ.3.60 முதல் ரூ.4 வரை உயரும். 70 மி.மீ முதல் 75 மி.மீ வரையிலான சிகரெட் ரூ.5.40 உயரும். மற்ற சிகரெட்டுகள், பிரீமியம் சிகரெட்டுகள் ரூ.8.50 வரை உயரும்.

44
சிகரெட் விலை உயர்வுக்கு வரவேற்பு
Image Credit : Getty

சிகரெட் விலை உயர்வுக்கு வரவேற்பு

சிகரெட் பிடிப்பது என்பது அதனை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமின்றி அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கும் பெரும் கேடு விளைவிப்பதாகும். ஆகவே சிகரெட் விலை உயர்வை பெரும்பாலானவர்கள் வரவேற்றுள்ளனர். அதே வேளையில் இந்த விலை உயர்வு கடத்தல் மற்றும் போலியான தயாரிப்புகளை ஊக்குவிக்கக்கூடும் என்று விநியோகஸ்தர்கள் எச்சரிக்கின்றனர்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்தியா
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
எக்ஸ்பிரஸ்வே டோல் குறைப்பு.. இனி முழு கட்டணம் இல்லை.. மத்திய அரசு அறிவிப்பு
Recommended image2
SBI வாடிக்கையாளர்களாக நீங்கள்! அப்படினா! இந்த செய்தி உங்களுக்கு தான்! இன்று முதல் அமலாகிறது!
Recommended image3
ரூ.2 லட்சம் முதலீடு போதும்.! மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம்.! Small Business Ideas in Tamil
Related Stories
Recommended image1
மத்திய பட்ஜெட் 2026.! எந்தெந்த விலை பொருட்கள் விலை குறையும்? மதுபானம், சிகரெட் உயரப்போகுது!
Recommended image2
ஃபாஸ்டேக் முதல் சிகரெட் விலை உயர்வு வரை.. பிப்ரவரியில் அதிரடி மாற்றங்கள்.. முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved