Air India Crash: விமானப் பயணக் காப்பீடு: அவசியமா? எப்படி செய்வது?
விமானப் பயணக் காப்பீடு செய்வது அவசியம் என தினமும் நிகழும் விபத்துக்கள் உணர்த்துகின்றன. டிக்கெட் புக்கிங் செய்யும்போதே காப்பீடு பெறலாம். இறப்பு, மருத்துவச் செலவுகள், விமானத் தாமதம் போன்றவற்றிற்கு காப்பீடு பாதுகாப்பு அளிக்கிறது.

பயணக்காப்பீடு எனும் பாதுகாப்பு
பேருந்து, ரயில் மற்றும் விமான பயணத்திற்கு டிக்கெட் புக்கிங் செய்வோர் பெரும்பாலும் காப்பீடு செய்வதில்லை. காப்பீடு செய்வதற்கு ஒரு சிறிய தொகையே செலவாகும் என்றாலும் அதனை 80 சதவீதம் பேர் செய்வதில்லை என தனியார் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆயுள் காப்பீடு எப்படி சிறந்ததோ அதேபோல் பயணக்காப்பீடும் அவசியம் என்பதை உணர்த்துகிறது தினமும் நிகழும் விபத்துக்கள். விமானத்தில் பயணிப்போர்கள் கூட ஆயிரக்கணக்கில் டிக்கெட்டிற்கு செலவு செய்தாலும் காப்பீட்டிற்கு சில நூறுகள் செயவிடுவதில்லை என்பதே நடைமுறையாக உள்ளது. விமான டிக்கெட் புங்கிங் செய்ய துவக்கும்போதே பயணக் காப்பீடு பெறுவது எளிதான செய்முறையாகும்.
விமான டிக்கெட் புக் செய்யும் போது காப்பீடு எடுக்கும் விதம்
ஆன்லைன் புக்கிங் தளங்களில் முன்பதிவு செய்யும் போது நேரடியாக காப்பீடு தேர்வு செய்யலாம். உதாரணமாக MakeMyTrip, Yatra, IRCTC Air, Cleartrip, Goibibo, இணையதங்களில் டிக்கெட் புக்கிங் செய்யும் போதே காப்பீடு செய்யலாம்.
* முதலில் உங்கள் பயணத் தகவல்களை (விமானம், தேதி, பயணிகள் விவரங்கள்) உள்ளிடுங்கள்
* "Travel Insurance" அல்லது "Add Insurance" என்ற விருப்பம் இருக்கும்
* அதை செயல்படுத்தவும் (tick/check mark)
* சில தளங்கள் காப்பீட்டை "பை டிஃபால்ட்" சேர்த்திருப்பார்கள் – வேண்டாமென்றால் நீக்கலாம்
* அடுத்த கட்டத்தில் காப்பீடு செலவு (₹40 – ₹200 வரை) கூட சேர்க்கப்படும்
விமான நிறுவனம் வாயிலாக நேரடியாக காப்பீடு
* உதாரணம்: Air India, IndiGo, Vistara, SpiceJet
* புக்கிங் பக்கத்தில் "Travel Protection" அல்லது "Insurance" என்ற சுட்டியை பாருங்கள்
* அங்கே சில நிறுவனங்கள் TATA AIG, ICICI Lombard, Go Digit போன்ற நிறுவனங்களுடன் இணைந்து காப்பீடு வழங்குகிறார்கள்
* காப்பீடு வழங்குபவர் மற்றும் அதன் வரம்புகள் பற்றிய விவரங்களை படிக்கவும்
தனியாக காப்பீடு வாங்குவது
* விமான டிக்கெட் புக் செய்த பிறகும் தனியாக காப்பீடு பெறலாம்
* நீங்கள் விரும்பும் காப்பீட்டு நிறுவனத்தின் இணையதளத்தில் செல்லவும்
Ex: ICICI Lombard, HDFC ERGO, Digit, Tata AIG
*"Travel Insurance" அல்லது "Flight Insurance" என்பதை தேர்வு செய்யவும்
*உங்கள் பயண விவரங்களை உள்ளிடவும்
* ஆன்லைனில் Premium செலுத்தி Policy Document PDF ஆக பெறலாம்
இதெல்லாம் அவசியம்
இறப்பு மற்றும் மருத்துவ செலவுகளுக்கான காப்பீடு வழங்கும் திட்டமாக தேர்வு செய்வது சிறந்தது. நாமினி விவரங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும். பாலிசி ஆவணங்களை டிஜிட்டலாக நம் குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.மேலும் பயண விவரங்கள் மற்றும் பயண செலவுகள் குறித்து குடும்பத்தினரிடம் முழுமையாக தெரிவிக்க வேண்டியது அவசியம்.
பயணக் காப்பீடு உங்களுக்கு என்ன பாதுகாப்பு தரும்?
விமான விபத்துகள் உயிரிழப்பையும் , மிக தீவிரமான உடல் காயங்களையும் ஏற்படுத்தக் கூடியவை.எனவே விமான விபத்துகளின் போது காப்பீட்டு திட்டங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்கிறது. விமானம் தாமதம் அல்லது ரத்து செய்யப்படும் போது சில காப்பீடுகள் பணத்தை திரும்பெற உதவும். வெளிநாட்டுப் பயணத்தின் போது உடல்நல பிரச்சினைகள் எழும்போது காப்பீடு கைகொடுக்கும். மேலும் எதிர்பாராத வகையில் விமான விபத்து ஏற்பட்டால் பயணியின் குடும்பத்தின் காப்பீட்டு தொகை கிடைக்கும்.விமானக் காப்பீடு கட்டாயமல்ல, ஆனால் ஆபத்துக்களில் நஷ்டங்களை குறைக்க இது உதவும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

