MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • ஜனவரி 2026-ல் அதிகம் விற்பனையான பைக்குகள் லிஸ்ட்; யார் முதலிடம்?

ஜனவரி 2026-ல் அதிகம் விற்பனையான பைக்குகள் லிஸ்ட்; யார் முதலிடம்?

இந்திய இருசக்கர வாகன சந்தை ஜனவரி 2026-ல் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஹீரோ, ஹோண்டா, டிவிஎஸ், மற்றும் ராயல் என்ஃபீல்டு போன்ற முன்னணி நிறுவனங்கள் கடந்த ஆண்டை விட குறிப்பிடத்தக்க விற்பனை உயர்வை அடைந்துள்ளன.

1 Min read
Author : Raghupati R
Published : Feb 06 2026, 01:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஜனவரி மாத பைக் விற்பனை
Image Credit : Google

ஜனவரி மாத பைக் விற்பனை

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே இந்திய இருசக்கர சந்தை வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஜனவரி மாத முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் குறிப்பிடத்தக்க விற்பனை வளர்ச்சியைக் கண்டுள்ளன. கிராமப்புறம் முதல் நகர்ப்புறம் வரை இருசக்கர வாகனங்களுக்கு தொடர்ந்த கேள்வி இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது.

25
ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை
Image Credit : Google

ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை

இந்த பட்டியலில் முதன்மையாக இடம்பிடித்தது ஹீரோ மோட்டோகார்ப். ஜனவரி 2026-ல் மட்டும் இந்த நிறுவனம் சுமார் 5.58 லட்சம் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது, ​​இது சுமார் 26% வளர்ச்சியாகும். இதில் 5.20 லட்சத்துக்கும் மேற்பட்டவை உள்ளூர் சந்தை விற்பனையாகும். மோட்டார் சைக்கிள்கள் அதிக பங்கினை பெற்ற நிலையில், ஸ்கூட்டர் விற்பனையும் உயர்ந்துள்ளது.

Related Articles

Related image1
மைலேஜ் வாரி வழங்கும்.. மிடில் கிளாஸ் மக்கள் அதிகம் வாங்கும் பட்ஜெட் பைக்குகள்.. முழு லிஸ்ட்
Related image2
தினமும் 560 கார்கள் விற்பனை.. டாடா நிறுவனத்தையே அசைத்து பார்த்த எஸ்யூவி கார் எது?
35
அதிகம் விற்கும் பைக்குகள்
Image Credit : Google

அதிகம் விற்கும் பைக்குகள்

விற்பனை வளர்ச்சியில் வலுவான போட்டியை அளித்தது ஹோண்டா மோட்டார் சைக்கிள் இந்தியா. இந்த நிறுவனம் ஜனவரி மாதத்தில் 5.74 லட்சம் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இதில் 5.20 லட்சம் யூனிட்கள் உள்ளூர் சந்தையிலும், 54,832 யூனிட்கள் ஏற்றுமதியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, ​​ஹோண்டா 29% ஆண்டு வளர்ச்சியை அடைந்துள்ளது.

45
டிவிஎஸ் பைக்குகள் விற்பனை
Image Credit : Google

டிவிஎஸ் பைக்குகள் விற்பனை

மேலும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனியையும் நிலையான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஜனவரி 2026-ல் 3.84 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், இது கடந்த ஆண்டின் 2.94 லட்சம் யூனிட்களுடன் ஒப்பிடும்போது சுமார் 29% உயர்வாகும். ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் இரண்டிலும் டிவிஎஸ் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

55
ராயல் என்ஃபீல்டு விற்பனை
Image Credit : our own

ராயல் என்ஃபீல்டு விற்பனை

பிரீமியம் பைக் பிரிவில் ராயல் என்பீல்ட் தனது ஆதிக்கத்தை தொடர்ந்துள்ளது. ஜனவரி 2026-ல் 1.04 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் 93,781 யூனிட்கள் உள்ளூர் சந்தையில் விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 16% அதிகமாகும். இதன் தொடர்ச்சியாக, மொத்த விற்பனை 10 லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோல் சுசுகி இந்தியா 1.22 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்து, 26% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பைக்குகள்
ஹீரோ ஸ்பிளெண்டர்
ஹோண்டா பைக்
ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
டொயோட்டா கார் வாங்க இதுவே சரியான நேரம்: லட்சக்கணக்கில் சேமிக்க ஒரு அறிய வாய்ப்பு!
Recommended image2
ஆட்டோ ராஜா இஸ் பேக்! சிங்கிள் சார்ஜில் 296 கி.மீ ரேஞ்ச் - பஜாஜ் WEGO P9018 வெறும் ரூ.4.4 லட்சத்தில்
Recommended image3
புதிய டாடா சியரா வாங்க போறீங்களா.? உங்கள் கனவு SUV-யின் EMI எவ்வளவு?
Related Stories
Recommended image1
மைலேஜ் வாரி வழங்கும்.. மிடில் கிளாஸ் மக்கள் அதிகம் வாங்கும் பட்ஜெட் பைக்குகள்.. முழு லிஸ்ட்
Recommended image2
தினமும் 560 கார்கள் விற்பனை.. டாடா நிறுவனத்தையே அசைத்து பார்த்த எஸ்யூவி கார் எது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved