400 கிமீ மைலேஜ்.. டாடா நானோ EV விலை எவ்வளவு?
டாடா நானோ EV 400 கிமீ ரேஞ்ச் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. 6 ஏர்பேக்குகள், 360° கேமரா, டிஜிட்டல் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற அம்சங்களுடன் வருகிறது.

டாடா நானோ எலக்ட்ரிக் கார்
இந்தியாவில் மின்சார வாகனங்களின் பிரபல நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுற்றுச்சூழல் மாசுபாட்டால், பலரும் இப்போது EV வாகனங்களை விரும்பி வாங்குகிறார்கள். இதை மனதில் கொண்டு, டாடா மோட்டார்ஸ் தனது பிரபலமான நானோ காரை புதிய மின்சார வடிவத்தில், டாடா நானோ EV-யை விரைவில் அறிமுகப்படுத்தும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
டாடா நானோ EV
புதிய டாடா நானோ EV-யில் 25 kWh லித்தியம்-அயான் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என்றும், இது முழு சார்ஜில் சுமார் 400 கிமீ வரை பயணிக்க வைக்கும் என்றும் கூறப்படுகிறது. டாடா நானோ எலக்ட்ரிக் கார் பற்றி தற்போது வெளியாகியுள்ள தகவல்களை முழுமையாக பார்க்கலாம். அதிலும் முக்கியமாக, ‘ஃபாஸ்ட் சார்ஜிங்’ வசதி உள்ளதால், 0% முதல் 100% வரை பேட்டரியை வெறும் 2 மணி நேரத்தில் சார்ஜ் செய்ய முடியும்.
அம்சங்கள் மற்றும் வசதிகள்
120 கிமீ/மணி வேகத்தை அடையக்கூடிய சக்திவாய்ந்த மின்மோட்டார் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்தக் கார் நகர சாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் சிறந்த அனுபவத்தைத் தரும் வகையில் உள்ளது. 6 ஏர்பேக்குகள், 360° கேமரா, பார்கிங் சென்சார், ABS மற்றும் EBD போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் முழுமையாக டிஜிட்டல்; மொபைல் கனெக்டிவிட்டி, புளூடூத், மியூசிக் கட்டுப்பாடு, நேவிகேஷன் ஆகியவை ஆதரிக்கப்படுகின்றன.
இந்தியாவின் மலிவு மின்சார கார்
டாடா நானோ EV விலை ரூ.4 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மிகக் குறைந்த ரூ.499-க்கு முன்பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விலை வரம்பு, அதிக ரேஞ்ச், சிறந்த அம்சங்கள் ஆகியவை இணைந்தால், இது பட்ஜெட்டுக்குள் ஒரு லக்சுரி EV ஆகும்.
டாடா நானோ EV விவரங்கள்
நீண்ட தூர பயணம், தினசரி நகரப் பயணம் ஆகியவை பொருத்தமானது. இந்தியாவின் EV சந்தையில், மலிவு விலை, உயர் தர அம்சங்கள், குறைந்த பராமரிப்பு ஆகியவற்றால் இது பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

