ரூ.18,024 வரை விலை குறைப்பு.. அப்படி போடு! சுசூகி பைக், ஸ்கூட்டர் வாங்க சரியான நேரம்
புதிய ஜிஎஸ்டி விதிகள் காரணமாக, சுசூகி நிறுவனம் தனது பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களின் விலையை ரூ.18,024 வரை குறைத்துள்ளது. பண்டிகை காலத்தில் வாங்குவோருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

சுசூகி பைக் விலை குறைப்பு
இந்திய இருசக்கர வாகன சந்தையில் விலை குறைப்பு மகிழ்ச்சியான செய்தியாக மாறியுள்ளது. ஜிஎஸ்டி 2.0 நடைமுறைக்கு வந்ததையடுத்து, சுசூகி நிறுவனம் தனது பிரபலமான பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களில் ரூ.18,024 வரை விலை குறைப்பு கூறியது. இந்த மாற்றம் நேரடியாக வாடிக்கையாளர்களின் செலவினத்தில் நிம்மதியை உருவாக்கும்.
சுசூகி நிறுவனம் அறிவிப்பு
புதிய ஜிஎஸ்டி விதிகள் படி, 350cc-க்கு குறைவான வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட 28% வரி 18% குறைக்கப்பட்டது. இந்த சலுகையை சுசூகி நிறுவனம் தாமதமின்றி தனது விலையில் பிரதிபலித்துள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு இத்தகைய விலை குறைப்பு, வாங்க நினைப்பவர்களுக்கு சிறந்த சந்தர்ப்பமாக மாறியுள்ளது.
இருசக்கர வாகன சலுகை
ஸ்கூட்டர் பிரிவில் Access, Avenis, Burgman Street, Burgman Street EX போன்ற மாடல்கள் ரூ.7,823 முதல் ரூ.9,798 வரை விலை குறைந்துள்ளன. இது குடும்பங்களுக்கும், அலுவலகப் பயணிகளுக்கும் பொருத்தமான வகையில் உள்ளது.
வி-ஸ்ட்ரோம் குறைப்பு
மோட்டார்சைக்கிள் பிரிவில் ஜிக்சர் தொடர் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக Gixxer 250 மற்றும் SF 250 மாடல்கள் ரூ.16,000க்கும் மேல் குறைக்கப்பட்டுள்ளன. அதோடு V-Strom SX என்ற சுற்றுலா பைக் ரூ.17,982 குறைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் புதிய தலைமுறை இளைஞர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது.
ஸ்கூட்டர் விலை குறைவு
இந்த விலை குறைப்பு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல், சுசூகி நிறுவனத்துக்கும் விற்பனை முன்னேற்றத்தை வழங்குகிறது. பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வாகனங்களை முன்பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

