மாதம் ரூ.357 செலவுதான்.. பெட்ரோல் செலவை மிச்சப்படுத்த ஏத்தர் ஸ்கூட்டரை வாங்குங்க
ஏத்தர் எனர்ஜியின் ரிஸ்டா எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், மாதம் ரூ.2,531 என்ற குறைந்த EMI-யில் கிடைக்கிறது. 123 கி.மீ ரேஞ்ச், நவீன பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பெட்ரோல் ஸ்கூட்டரை விட ஆண்டுக்கு ரூ.33,216 வரை சேமிப்பு போன்ற பலன்களை இது வழங்குகிறது.

ஏத்தர் ரிஸ்டா ஸ்கூட்டர்
மின்சார ஸ்கூட்டர் வாங்க திட்டமிடுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வந்துள்ளது. வேகமாக வளர்ந்து வரும் இந்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில், ஏத்தர் எனர்ஜியின் ரிஸ்டா எஸ் மாடல் குறைந்த மாத தவணை வசதியுடன் கவனம் செலுத்துகிறது. தினசரி பயணங்களுக்கு ஏற்ற வகையில் இந்த ஸ்கூட்டர், குறைந்த செலவு, நவீன மற்றும் மிதமான பராமரிப்பு செலவுகளால் பயனர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுகிறது.
ரிஸ்டா எஸ் ஸ்கூட்டர்
ஏத்தர் ரிஸ்டா எஸ் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,14,842 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன், மத்திய அரசின் PM E-Drive ஊக்கத்தொகை, மாநில மானியம் மற்றும் விலை தள்ளுபடி சேர்த்து ரூ.8,999 வரையிலான நன்மைகள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகளின் அடிப்படையில், வாகனத்தின் விலை ரூ.1,28,843 ஆக உள்ளது. நிறுவனம் வழங்கும் நிதி வசதியின் மூலம், இந்த ஸ்கூட்டரை மாதம் ரூ.2,531 குறைந்த EMI-யில் வாங்க முடியும். மேலும், ரூ.10,000 ரொக்க தள்ளுபடி மற்றும் கிரெடிட் கார்டு EMI சலுகை உட்பட ரூ.20,000 வரையிலான கூடுதல் நன்மைகளும் கிடைக்கின்றன.
8 ஆண்டு வாரண்டி
செயல்திறன் மற்றும் பயண தூரத்தில், ரிஸ்டா S 123 கி.மீ (IDC) வரை செல்லக்கூடிய திறன் கொண்டது. இதில் 3.7 kWh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது; இதற்கு 8 ஆண்டு வாரண்டியும் உண்டு. 34 லிட்டர் அளவிலான அண்டர்-சீட் ஸ்டோரேஜ், வசதியான ஃப்ளோர் போர்டு, 7 அங்குல DeepView டிஸ்ப்ளே மூலம் வழிநடத்தல் வசதி போன்றவை இதில் இடம் பெற்றுள்ளன. ஸ்கிட் கண்ட்ரோல், திருட்டு எச்சரிக்கை, அவசர நிறுத்த அமைப்பு மற்றும் லைவ் லொக்கேஷன் ஷெரிங் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்படுகின்றன.
ரூ.33,000 வரை சேமிப்பு
செலவு சேமிப்பு அம்சமும் இந்த ஸ்கூட்டரின் முக்கிய பலமாகும். தினமும் 50 கி.மீ பயணம் செய்யும் ஒருவர், பெட்ரோல் ஸ்கூட்டரில் மாதத்திற்கு சுமார் ரூ.3,125 செலவிட வேண்டியிருக்கும். அதே பயணத்தை ரிஸ்டா எஸ் மூலம் செய்தால், மாத செலவு ரூ.357 மட்டுமே. இதனால் மாதத்திற்கு ரூ.2,768, ஆண்டுக்கு ரூ.33,216 வரை சேமிக்க முடியும். இது சுற்றுச்சூழலுக்கும் நல்லது. குடும்ப செலவுக்கும் பெரிய உதவியாகும்.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆஃபர்
நிறங்களின் தேர்விலும் ரிஸ்டா எஸ் பல விருப்பங்களை வழங்குகிறது. டெக்கன் கிரே மற்றும் சியாசென் வைட் நிறங்கள் ஸ்டாண்டர்டாக கிடைக்கின்றன. டெரகோட்டா ரெட் மற்றும் பாங்காங் ப்ளூ நிறங்களுக்கு ரூ.2,000 கூடுதல் செலவாகும். கூடுதல் அம்சங்கள் மற்றும் டூயல்-டோன் வடிவமைப்பு விரும்புவோர் ரிஸ்டா Z மாடலை தேர்வு செய்யலாம். மேலும், நாடு முழுவதும் 3,900க்கும் மேற்பட்ட ஏத்தர் கிரிட் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்கள் உள்ளன, சார்ஜிங் பற்றிய கவலை இல்லாமல் பயணம் செய்ய முடியும்.

