போடு.! அதிரடி விலை குறைப்பு.. ராயல் என்பீல்டு பைக்குகள் இவ்வளவு மலிவு ஆயிடுச்சே
ராயல் என்பீல்டு நிறுவனம் தனது 350 சிசி மோட்டார் சைக்கிள்களின் விலையைக் குறைத்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு முழுமையாக வழங்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ராயல் என்பீல்டு விலை குறைப்பு
மோட்டார் சைக்கிள்கள், சர்வீஸ், உடைகள் மற்றும் ஆக்சசெரீஸ்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு முழுமையாக வழங்குவதாக ராயல் என்பீல்டு தெரிவித்துள்ளது. இதன் மூலம், குறிப்பாக 350 சிசி பிரிவில், ராயல் என்பீல்டின் பிரபலமான மாடல்கள் இந்தியா முழுவதும் உள்ள பைக் பிரியர்களுக்கு மிகவும் மலிவு விலையில் கிடைக்கும்.
ஜிஎஸ்டி தாக்கம்
இந்திய மோட்டார் சைக்கிள் சந்தையில், குறிப்பாக நடுத்தர அளவிலான மோட்டார் சைக்கிள் பிரிவில், ராயல் என்பீல்டின் 350 சிசி வரிசை மிகவும் வலுவானது இருப்பைக் கொண்டுள்ளது. இந்த புதிய விலை மாற்றம் வாகன ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்றே கூறலாம். செப்டம்பர் 22, 2025 முதல், திருத்தப்பட்ட விலைகள் அனைத்து டீலர்ஷிப்களிலும் அமலுக்கு வரும்.
350cc பைக் விலை குறைவு
அதே நேரத்தில், 350 சிசிக்கு மேற்பட்ட மாடல்களின் விலைகள் புதிய ஜிஎஸ்டி விகிதங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும். சில மாடல்களில் ரூ.22,000 வரை விலை குறையும் என்று நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 22, 2025 முதல் இது அமலுக்கு வரும்.
ஐஷர் மோட்டார்ஸ் அறிவிப்பு
ஜிஎஸ்டி மாற்றத்தால் முதல் முறையாக பைக் வாங்குபவர்கள் குறிப்பாக பயனடைவார்கள் என்று ராயல் என்பீல்டின் தாய் நிறுவனமான ஐஷர் மோட்டார்ஸ் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநரும் ராயல் என்பீல்டின் தலைமை நிர்வாக அதிகாரியுமான பி. கோவிந்தராஜன் தெரிவித்தார். இந்திய அரசின் புதிய ஜிஎஸ்டி மாற்றம் 350 சிசிக்குக் கீழே உள்ள மோட்டார் சைக்கிள்கள் மிகவும் மலிவு விலையில் கிடைக்கச் செய்கிறது.
ராயல் என்பீல்டு புதிய விலை
அதுமட்டுமின்றி முதல் முறையாக பைக் வாங்குபவர்களை ஊக்குவிக்கும் என்றும், விலை மாற்றத்தின் முழு ஜிஎஸ்டி பலனையும் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாகவும் கூறினார். ராயல் என்பீல்டின் 350 சிசி மோட்டார் சைக்கிள்களின் விலை குறையும் அதே நேரத்தில், அதற்கு மேற்பட்ட பிரிவில் ஜிஎஸ்டி காரணமாக விலை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

