கூலி ரஜினி முதல் தவெக விஜய் வரை.. விஐபிக்கள் பயன்படுத்தும் நம்பர் 1 கார் இதுதான்
சூப்பர் ஸ்டார் ரஜினி, ஆமீர் கான் மற்றும் நடிகர் விஜய் வரை, பிரபலங்கள் பயன்படுத்தும் நம்பர் 1 விஐபி கார் இதுதான். அது எந்த கார்? அவற்றின் விலை, மைலேஜ் போன்றவற்றை பற்றி இங்கு காண்போம்.

பிரபலங்கள் பயன்படுத்தும் நம்பர் 1 கார்
இந்தியாவின் ரோடுகளில் 20 வருடங்களாக ராஜாதிராஜாவாக மின்னிக்கொண்டிருக்கும் எம்பிவி (MPV) என்றால் அது டொயோட்டா இன்னோவா (Toyota Innova) தான். 2005-ல் அறிமுகமான இந்த இன்னோவா காரை இன்று வரை 12 லட்சம் பேர் வாங்கியிருக்கிறார்கள் என்பது ஒரு சாதனை தான். அரசியல்வாதிகள் முதல் நடிகர்கள் வரை, அனைவருக்கும் இன்னோவா என்றால் ஒரு தனி பவர் தான்.
12 லட்சம் யூனிட்கள் விற்பனை சாதனை
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (Toyota Kirloskar Motor) நிறுவனம் தற்போது வரை 12 லட்சம் இன்னோவா கார்கள் விற்றுவிட்டதாக அறிவித்துள்ளது. விற்பனை மற்றும் சேவை பிரிவின் துணைத் தலைவர் வரீந்தர் வாத்வா சொல்வதாவது, “இனோவா என்றால் வெறும் ஒரு வாகனம் இல்லை; ஒரு உணர்ச்சி நெருக்கம்,” என்கிறார்.
மூன்று முறை மேம்படுத்தப்பட்ட இன்னோவா
கடந்த 20 ஆண்டுகளில் மூன்று முக்கியமான அப்டேட் அடைந்துள்ளது. முதன்முதல் ஜெனரேஷன் கார் Toyota Qualis-ஐ மாற்றி வந்தது. 2016-ல் Innova Crysta எனும் புதிய வடிவம், புதிய என்ஜின், வசதிகளுடன் வந்தது. அதன்பின் 2022-ல் Innova HyCross அறிமுகமானது. இது monocoque platform, front-wheel drive, self-charging hybrid என பல நவீன அம்சங்களுடன் வந்தது. 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின், எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் e-CVT கியர்பாக்ஸுடன் வருகிறது. இதுவரை 1 லட்சம் Hycross கார்கள் விற்பனையாகியுள்ளன.
இன்னோவாவுக்கான முக்கிய பங்கு
இன்னோவா என்பது Toyota நிறுவனத்துக்கே ஒரு பெரிய வலிமையான மாடல் என்று அடித்துக் கூறலாம். தனியார் வாடிக்கையாளர்களிடம் மட்டுமல்ல டாக்ஸி, கமர்ஷியல் மற்றும் இண்டர்சிட்டி சேவைகளிலும் இது பிரபலமானது. பாதுகாப்பு, கம்ஃபர்ட், மாசுபாடு கட்டுப்பாடு போன்ற அம்சங்களில் காலத்துக்கேற்ப மேம்படுத்துவது முக்கிய விஷயம். Crysta என்பது மார்க்கெட் டிமாண்டுக்கு ஏற்ற பாரம்பரிய MPV, ஆனால் Hycross என்பது நவீன Hybrid டெக்னாலஜியோடு வருகிறது.
டொயோட்டா இன்னோவா விலை
அரசியல்வாதிகள், நடிகர்கள் என அனைவரின் பேவரைட்டாக இன்றளவும் இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி, ஆமீர் கான், தளபதி விஜய் என பல பிரபலங்கள் இந்த காரை பயன்படுத்தி வருகிறார்கள். விலைகளை பொறுத்தவரை Innova Crysta விலை ரூ.19.99 லட்சம் முதல் ரூ.27.18 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), Innova Hycross விலை ரூ.19.14 லட்சம் முதல் ரூ.32.58 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

