ரூ.5.61 லட்சம் கார் வாங்க பெரிய போட்டியே இருக்கு.. நிசான் மேக்னைட் செய்த மேஜிக்
இந்தியாவில் நிசான் நிறுவனத்தின் விற்பனை, நிசான் மேக்னைட் என்ற ஒற்றை காரை மட்டுமே சார்ந்துள்ளது. இதன் குறைந்த ஆரம்ப விலை, எஸ்யூவி தோற்றம்,1.0 லிட்டர் நேச்சுரல், டர்போ பெட்ரோல் இதை முதல் முறை கார் வாங்குபவர்களிடம் பிரபலமாக்கியுள்ளது.

குறைந்த விலை எஸ்யூவி
ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனமான நிசான், இந்திய சந்தையில் தனது இடத்தை வலுப்படுத்த பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. ஒருகாலத்தில் பல மாடல்கள் கொண்டிருந்த நிசான், தற்போது ஒரே ஒரு காருடன் தான் இந்தியாவில் இயங்கி வருகிறது. நவம்பர் 2025 விற்பனை விவரங்கள் இதை தெளிவாகக் காட்டுகின்றன. அந்த மாதத்தில் நிசான் இந்தியாவில் விற்ற மொத்த பயணியர் வாகனங்கள் 1,908 யூனிட்கள். இந்த முழு விற்பனையும் ஒரே காரான நிசான் மேக்னைட் மூலம் தான் கிடைத்துள்ளது.
சப் 4 மீட்டர் எஸ்யூவி
அதாவது, இன்று இந்தியாவில் நிசான் என்ற பெயர் தொடர்வதற்கான முக்கிய காரணமே மேக்னைட். குறைந்த ஆரம்ப விலை, எஸ்யூவி போன்ற ஸ்டைல், இந்த காரை மக்கள் மத்தியில் மிக வேகமாக பிரபலமாக்கியுள்ளது. குறிப்பாக முதல் முறையாக கார் வாங்குபவர்கள் மற்றும் குறைந்த பட்ஜெட்டில் எஸ்யூவி தேடுபவர்களுக்கு மேக்னைட் ஒரு சிறந்த தேர்வாக மாறியுள்ளது. தோற்றம், அம்சங்கள் மற்றும் நம்பகமான செயல்திறன் ஆகியவை இதன் பெரிய பலமாக உள்ளன.
நிசான் மேக்னைட்
எஞ்சின் ஆப்ஷன்களிலும் மேக்னைட் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துகிறது. 1.0 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சின் 72 bhp பவர், 96 Nm டார்க் வழங்குகிறது. தினசரி நகரப் பயணத்திற்கு ஏற்ற இந்த எஞ்சின், குறைந்த பராமரிப்பு செலவுடன் மென்மையான டிரைவிங் அனுபவம் தருகிறது. இது 5-ஸ்பீட் மேனுவல் அல்லது AMT கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.
பட்ஜெட் கார்
அதிக பவரை விரும்புவோருக்காக 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இது 100 bhp பவர் மற்றும் 160 Nm டார்க் உற்பத்தி செய்கிறது. இந்த டர்போ வேரியண்ட் மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் கிடைப்பதால், ஓட்டும் அனுபவம் மேலும் மேம்படுகிறது. மைலேஜ் விஷயத்திலும் மேக்னைட் நம்பிக்கை அளிக்கிறது. பெட்ரோல் மாடல்கள் சுமார் 19.5 கிமீ/லிட்டர் மைலேஜ் தருகின்றன.
நிசான் இந்தியா விற்பனை
அடிப்படை வேரியண்ட் ரூ.5.61 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற மிக குறைந்த விலையில் கிடைக்கிறது. அதே நேரத்தில், முழு வசதிகளுடன் வரும் டாப் வேரியண்ட் ரூ.9.93 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், GST 2.0 அமலுக்கு வந்த பிறகு CNG ரெட்ரோஃபிட் கிட் விலை குறைந்துள்ளது. இதனால் குறைந்த செலவில் அதிக பயணம் செய்ய நினைப்பவர்களுக்கு நிசான் மேக்னைட் இன்று நல்ல தேர்வாக மாறியுள்ளது.

