MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • ஒரு கிமீக்கு 47 பைசா மட்டுமே செலவு.. ஹ்யூண்டாய் Prime Taxi கார்கள் அறிமுகம்

ஒரு கிமீக்கு 47 பைசா மட்டுமே செலவு.. ஹ்யூண்டாய் Prime Taxi கார்கள் அறிமுகம்

இந்தியாவில் டாக்சி ஓட்டுநர்களுக்காக ஹூண்டாய் நிறுவனம் தனது பிரைம் டாக்சி வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த பராமரிப்பு செலவு, அதிக மைலேஜ் மற்றும் நவீன அம்சங்களுடன் வருகிறது. இதன் விலை, அம்சங்களை பார்க்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Dec 31 2025, 12:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
ஹ்யூண்டாய் டாக்சி கார்
Image Credit : Google

ஹ்யூண்டாய் டாக்சி கார்

இந்தியாவில் டாக்சி ஓட்டுநர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக, Hyundai Motor India நிறுவனம் தனது Prime Taxi வரிசையின் கீழ் இரண்டு புதிய கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஹூண்டாய் அதிகாரப்பூர்வமாக கமர்ஷியல் மொபிலிட்டி பிரிவில் காலடி எடுத்து வைத்துள்ளது. இந்த புதிய வரிசையில், Prime HB (Grand i10 Nios அடிப்படையிலான ஹேட்ச்பேக்) மற்றும் Prime SD (Aura அடிப்படை செடான்) ஆகிய இரண்டு மாடல்கள் இடம் பெற்றுள்ளன. குறைந்த பராமரிப்பு செலவு, அதிக பயன் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இவை இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலை விவரங்களைப் பார்க்கும்போது, ​​Prime HB மாடல் ரூ.5,99,900 என்றும், Prime SD மாடல் ரூ.6,89,900 என்றும் (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Prime Taxi வரிசைக்கான புக்கிங் நாடு முழுவதும் ரூ.5,000 முன்பணம் செலுத்த தொடங்கப்பட்டுள்ளது. மேலும், 72 மாதங்கள் வரை எளிதான தவணை வசதிகளும் வழங்கப்படுகின்றன. டாக்சி ஓட்டுநர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, இந்த வாகனங்கள் குறைந்த செலவில் அதிக வருமானம் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக ஹ்யூண்டாய் கூறுகிறது.

22
குறைந்த செலவு டாக்சி
Image Credit : Google

குறைந்த செலவு டாக்சி

என்ஜின் மற்றும் மைலேஜ் பற்றி பார்க்கையில், இரண்டு மாடல்களும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன், தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட CNG அமைப்புடன் வருகின்றன. பிரைம் எஸ்டி மாடல் 28.40 கிமீ/கிலோ சிஎன்ஜி மைலேஜையும், பிரைம் எச்பி மாடல் 27.32 கிமீ/கிலோ மைலேஜையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டச் செலவு ஒரு கிலோமீட்டருக்கு 47 பைசா வரை குறையலாம் என ஹூண்டாய் தெரிவித்தார். கூடுதலாக, 4 மற்றும் 5வது ஆண்டுகளுக்கு அல்லது 1.8 லட்சம் கிமீ வரை விரிவான வாரண்டியும் வழங்கப்படுகிறது.

அம்சங்களைப் பார்க்கும்போது, ​​ஆறு ஏர்பேக்குகள், ரியர் ஈசி வென்ட்ஸ், ஸ்ரைரிங் வீல் கட்டுப்பாடுகள், டைப்-சி யுஎஸ்பி சார்ஜர், முன் மற்றும் பின் பவர் விண்டோக்கள், ரியர் பார்கிங் சென்சார்கள் போன்ற பாதுகாப்பு மற்றும் வசதிகள் வழங்கப்படுகின்றன. விருப்பமாக 9-இஞ்ச் டச் ஸ்கிரீன், வயர்லெஸ் Apple CarPlay, Android Auto, ரியர் கேமரா, வாகன கண்காணிப்பு சாதனம் போன்ற வசதிகள் கிடைக்கின்றன.

Related Articles

Related image1
பைக், ஸ்கூட்டரில் மூன்று பேர் பயணம் செய்தால் எவ்வளவு அபராதம் தெரியுமா?
Related image2
தினசரி ஓட்டத்துக்கு இது தான் பெஸ்ட்! மைலேஜை அள்ளித்தரும் பைக் லிஸ்ட்

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஹூண்டாய்
இந்தியா
ஆட்டோ

Latest Videos
Recommended Stories
Recommended image1
டொயோட்டா கார் வாங்க இதுவே சரியான நேரம்: லட்சக்கணக்கில் சேமிக்க ஒரு அறிய வாய்ப்பு!
Recommended image2
ஆட்டோ ராஜா இஸ் பேக்! சிங்கிள் சார்ஜில் 296 கி.மீ ரேஞ்ச் - பஜாஜ் WEGO P9018 வெறும் ரூ.4.4 லட்சத்தில்
Recommended image3
புதிய டாடா சியரா வாங்க போறீங்களா.? உங்கள் கனவு SUV-யின் EMI எவ்வளவு?
Related Stories
Recommended image1
பைக், ஸ்கூட்டரில் மூன்று பேர் பயணம் செய்தால் எவ்வளவு அபராதம் தெரியுமா?
Recommended image2
தினசரி ஓட்டத்துக்கு இது தான் பெஸ்ட்! மைலேஜை அள்ளித்தரும் பைக் லிஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved