MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ரேஷன் கார்டு மாற்றம் செய்ய சூப்பர் சான்ஸ்.! ஒரு மணி நேரத்தில் தீர்வு! பொதுமக்களுக்கு அசத்தலான அறிவிப்பு!

ரேஷன் கார்டு மாற்றம் செய்ய சூப்பர் சான்ஸ்.! ஒரு மணி நேரத்தில் தீர்வு! பொதுமக்களுக்கு அசத்தலான அறிவிப்பு!

 ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை ரேஷன் அட்டை திருத்த முகாமை நடத்தி வருகிறது. அதன்படி, டிசம்பர் 13 அன்று நடைபெறவுள்ள முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் மாற்றம் போன்ற சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். 

2 Min read
Author : vinoth kumar
Published : Dec 11 2025, 11:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பள்ளி மாணவர்களுக்கு இரண்டு நாள் விடுமுறை! போக்குவரத்து துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Image Credit : our own

பள்ளி மாணவர்களுக்கு இரண்டு நாள் விடுமுறை! போக்குவரத்து துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் நியாய விலைக்கடைகளில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பல கோடி குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் 33,222 நியாய விலைக் கடைகளில் ஒவ்வொரு மாதமும் அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் 2.2 கோடி குடும்ப அட்டைகள் மூலம் சுமார் 7 கோடி மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

24
ரேஷன் கார்டிற்காக காத்திருக்கும் மக்கள்
Image Credit : Google

ரேஷன் கார்டிற்காக காத்திருக்கும் மக்கள்

இது மட்டுமில்லாமல் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, இயற்கை பேரிடர் காலங்களில் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை போன்ற பல சலுகைகள் கிடைக்க ரேஷன் கார்டு முக்கிய தேவையாக உள்ளது. எனவே ரேஷன் அட்டைக்கு பல லட்சம் பேர் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். இந்த சூழலில் ரேஷன் அட்டையில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய உணவு பொருள் வழங்கல் அலுவலகத்திற்கு தினந்தோறும் அலைய வேண்டிய சூழல் நிலவுகிறது. இந்நிலையில் தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு மாதமும் வாரத்தின் இரண்டாவது சனிக்கிழமை ரேஷன் அட்டை திருத்த முகாமை நடத்தி வருகிறது. அந்த வகையில் வருகிற சனிக்கிழமை (டிசம்பர் 13) நடைபெறவுள்ளது.

Related Articles

Related image1
மக்களே ரெடியா! தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் நாளை 6 முதல் 8 மணி நேரம் மின்தடை!
Related image2
பள்ளி மாணவர்களுக்கு இரண்டு நாள் விடுமுறை! போக்குவரத்து துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
34
ரேஷன் கார்டு திருத்தம்
Image Credit : our own

ரேஷன் கார்டு திருத்தம்

அதாவது பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் வரும் 13ம் தேதியன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

44
டிசம்பர் 13ம் தேதி - சிறப்பு முகாம்
Image Credit : our own

டிசம்பர் 13ம் தேதி - சிறப்பு முகாம்

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குடும்ப அட்டை
தமிழ்நாடு அரசு
சென்னை

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
மக்களே ரெடியா! தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் நாளை 6 முதல் 8 மணி நேரம் மின்தடை!
Recommended image2
பள்ளி மாணவர்களுக்கு இரண்டு நாள் விடுமுறை! போக்குவரத்து துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved