- Home
- Astrology
- Astrology: இந்த 4 ராசிக்காரங்களுக்கு மன்னிக்கும் குணமே கிடையாது.! யாராவது தப்பு செஞ்சா உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க.!
Astrology: இந்த 4 ராசிக்காரங்களுக்கு மன்னிக்கும் குணமே கிடையாது.! யாராவது தப்பு செஞ்சா உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க.!
Astrology : ஜோதிடத்தின் படி சில ராசிக்காரர்களுக்கு மன்னிக்கும் குணம் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. பிறர் செய்யும் தவறுகளை அவர்கள் பொறுப்பது கிடையாது. அத்தகைய குணம் கொண்ட ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மன்னிக்கும் குணம் இல்லாத ராசிகள்
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் தனித்துவமான குணங்கள் உண்டு. சில ராசிக்காரர்கள் மற்றவர்கள் செய்யும் தவறுகளை எளிதில் மன்னித்து விடுவார்கள். ஆனால் சிலர் பிறர் செய்யும் தவறுகளை பொறுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு கண்டிப்பானவர்களாகவும், பிறரை புரிந்து கொள்ள முடியாதவர்களாகவும் இருப்பார்கள். இந்த கட்டுரையில் மற்றவர்களின் தவறுகளை பொறுத்துக் கொள்ள முடியாத சில ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் மிகவும் பகுத்தறிவு மற்றும் முழுமையை விரும்புபவர்கள். இவர்கள் எந்த ஒரு விஷயமும் தவறு இல்லாமல் நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இவர்களுக்கு விவரங்களை உன்னிப்பாக பார்க்கும் திறன் இருப்பதால், மற்றவர்கள் செய்யும் தவறுகளை எளிதில் கவனித்து விடுவார்கள். ஒருவர் தவறு செய்தால் அதை விமர்சன ரீதியாக அணுகுவார்கள். தவறு என்பது அலட்சியத்தின் அடையாளம் என்று இவர்கள் நினைக்கிறார்கள். எனவே இதை இவர்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். தங்கள் உறவுகளிலும், வேலை செய்யும் இடங்களிலும் உயர்ந்த தரத்தை எதிர்பார்ப்பார்கள். ஒருவர் தவறு செய்து விட்டால் அவர்களை நம்புவது இவர்களுக்கு கடினமாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் ஆழமான உணர்வுகளையும், தீவிரமான எதிர்பார்ப்புகளையும் கொண்டவர்கள். இவர்கள் மற்றவர்களிடம் நேர்மையையும், விசுவாசத்தையும் எதிர்பார்ப்பார்கள். ஒருவர் இவர்களின் நம்பிக்கையை மீறி தவறு செய்தால் அது அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கும் விருச்சிக ராசிக்காரர்கள் தவறுகளை மன்னிக்க முடியாதவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் மன்னிப்பதற்கு முன்னர் தவறு செய்தவர்கள் முழு மனதுடன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இவர்களின் கண்டிப்பான இயல்பு உறவுகளில் தவறுகளை சகித்துக் கொள்ள முடியாதவையாக மாறலாம். நம்பிக்கை மீறல், பொய் அல்லது துரோகம் போன்ற தவறுகளை இவர்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்வது கிடையாது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் ஒழுக்கமும், பொறுப்பும், கடின உழைப்பும் மிக்கவர்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் குறிப்பிட்ட இலக்கை அடைக்க முயற்சிப்பவர்கள். இதனால் மற்றவர்களின் தவறுகளால் தங்கள் முன்னேற்றம் தடைபடுவதை விரும்புவதில்லை. ஒருவர் செய்யும் தவறு மகர ராசிக்காரர்களின் திட்டங்களை பாதித்தால் அதை அவர்கள் மிகவும் கண்டிப்பாக எடுத்துக் கொள்வார்கள். இவர்கள் தவறுகளை பொறுத்துக் கொள்வது கடினம். குறிப்பாக அலட்சியம் அல்லது பொறுப்பின்மையால் தவறுகள் நிகழ்ந்திருந்தால் அதை இவர்கள் ஒருபோதும் மன்னிப்பது கிடையாது. தனிப்பட்ட உறவானாலும், தொழில் வாழ்க்கையானாலும் ஒழுக்கத்தை பின்பற்றும் இவர்கள் மற்றவர்களிடமும் இதே ஒழுக்கத்தை எதிர்பார்ப்பார்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் உற்சாகமும், தைரியமும் கொண்டவர்கள். தங்கள் இலக்குகளை அடைய மிக வேகத்துடன் செயல்படுவார்கள். மற்றவர்கள் செய்யும் தவறுகள் இவர்கள் முன்னேற்றத்தை தடுத்தால் பொறுமையை இழந்து விடுவார்கள். இவர்கள் தவறுகளை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் அல்ல. ஆனால் தவறு செய்பவரிடம் நேரடியாகவும் சில சமயங்களில் கோபமாகவும் எதிர்ப்புகளை வெளிப்படுத்துவார்கள். இவர்களுக்கு தவறு என்பது பலவீனத்தின் அடையாளமாக தோன்றுகிறது. தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றுவதற்கு பிறர் செய்யும் தவறுகள் தடையாக இருந்தால் அது மீண்டும் மீண்டும் நடக்க இவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். இந்த கண்டிப்பான அணுகுமுறை சில சமயங்களில் உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தலாம்.
இந்த இயல்பு சிக்கல்களை ஏற்படுத்தும்
மேற்குறிப்பிட்ட ராசிக்காரர்களின் தவறுகளை பொறுத்துக் கொள்ள முடியாத இயல்பு காரணமாக, அவர்களின் உறவுகளில் சவால்களை உருவாக்கலாம். இவர்களின் கண்டிப்பான அணுகுமுறை மற்றவர்களை மேம்படுத்த உதவலாம் என்றாலும், சில சமயங்களில் இது மற்றவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இவர்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை சற்று தளர்த்தி மற்றவர்களின் தவறுகளை புரிந்து கொள்ள முயற்சித்தால் உறவுகள் மேலும் வலுவடையும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

