MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • வைபவ லட்சுமி ராஜயோகம் என்றால் என்ன? இந்த 4 ராசிகளுக்கு பண மழை கொட்டப்போகுது! உங்க ராசி இருக்கா?

வைபவ லட்சுமி ராஜயோகம் என்றால் என்ன? இந்த 4 ராசிகளுக்கு பண மழை கொட்டப்போகுது! உங்க ராசி இருக்கா?

Vaibhav Lakshmi Rajyog 2026: வைபவம்' என்றால் ஆடம்பரம் மற்றும் மேன்மை என்று பொருள். இந்த யோகம் ஒருவரது ஜாதகத்தில் அமையும் போது, அவர்கள் வாழ்நாள் முழுவதும் மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 16 2026, 02:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வைபவ லட்சுமி ராஜயோகம்
Image Credit : Asianet News

வைபவ லட்சுமி ராஜயோகம்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, வைபவ லட்சுமி ராஜயோகம் என்பது ஒரு நபருக்கு அளவற்ற செல்வம், செல்வாக்கு மற்றும் வசதியான வாழ்க்கையைத் தரும் ஒரு சிறப்பான அமைப்பாகும். 'வைபவம்' என்றால் ஆடம்பரம் மற்றும் மேன்மை என்று பொருள். இந்த யோகம் ஒருவரது ஜாதகத்தில் அமையும் போது, அவர்கள் வாழ்நாள் முழுவதும் மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை. சுக்கிரன் மார்ச் 26 முதல் ஏப்ரல் 19 வரை மேஷ ராசியில் இருப்பார். சந்திரன் ஏப்ரல் 17 அன்று மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகி ஏப்ரல் 19 மதியம் வரை அங்கேயே இருப்பார். இப்படி சுக்கிரனும் சந்திரனும் ஒரே ராசியில் இணைந்தால், வைபவ லட்சுமி ராஜயோகம் உருவாகும்.

25
மேஷ ராசி
Image Credit : Asianet News

மேஷ ராசி

மேஷ ராசியின் முதல் வீட்டில் சந்திர சுக்கிர சேர்க்கையால் வைபவ லெட்சுமி ராஜயோகம் உருவாக இருக்கிறது. குடும்பத்தில் இருந்த சண்டைகள் முடிவுக்கு வரும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். மேலும், தொழில் விரிவாக்கத்திற்காக நீங்கள் போடும் திட்டங்கள் நல்ல பலனைத் கொடுக்கும்.

Related Articles

Related image1
சனி பகவான் அருளும் எண் 8: 35 வயதுக்கு மேல் காத்திருக்கும் ராஜயோகம்!
Related image2
கோடை விடுமுறை.. மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
35
கடக ராசி
Image Credit : Asianet News

கடக ராசி

சந்திர சுக்கிரச் சேர்க்கையால் உருவாகும் வைபவ லட்சுமி ராஜயோகம் கடக ராசியின் பத்தாம் வீட்டில் உருவாக இருக்கிறது. பத்தாம் வீடு தொழில் ஸ்தானம் என அழைக்கப்படுகிறது. எனவே கடக ராசிக்காரர்கள் தொழில் ரீதியான நன்மைகளைப் பெறுவீர்கள். குடும்பத்தை விட்டு தூரத்தில் வசிப்பவர்களுக்கு துணைவரின் ஆதரவு கிடைக்கும். உங்கள் தொழில் வெளிநாட்டில் விரிவடைந்தால், நல்ல லாபம் பார்ப்பீர்கள். நாளின் தொடக்கத்திலேயே சில நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரும். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கை நடைபெறும். ஆடம்பர வாழ்க்கை வாழ்வீர்கள்.

45
தனுசு ராசி
Image Credit : Asianet News

தனுசு ராசி

வீட்டிற்கு விருந்தினர்கள் வருவதால் மகிழ்ச்சி உண்டாகும். எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள், இது உங்களுக்கு நிம்மதியைத் தரும். நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கு நன்மை தரும்.

55
கும்ப ராசி
Image Credit : Asianet News

கும்ப ராசி

உங்கள் வேலையில் நீங்கள் தீவிர கவனம் செலுத்தி, சரியான முடிவுகளை எடுப்பீர்கள். இந்த நேரத்தில், உங்கள் தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு நிம்மதி அடைவீர்கள். நிலம் மற்றும் கட்டிடம் தொடர்பான தொழில்களில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் குடும்பத்துக்கு ஆகாதா? உடைத்து பேசிய தேசமங்கையர்கரசி
Recommended image2
சனி பகவான் அருளும் எண் 8: 35 வயதுக்கு மேல் காத்திருக்கும் ராஜயோகம்!
Recommended image3
Astrology: 40 வயதிற்கு மேல் தங்க புதையலை எடுக்கும் 3 ராசிகள்! பல கோடிக்கு அதிபதியாவார்களாம்!
Related Stories
Recommended image1
சனி பகவான் அருளும் எண் 8: 35 வயதுக்கு மேல் காத்திருக்கும் ராஜயோகம்!
Recommended image2
கோடை விடுமுறை.. மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved