MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: துலாம் ராசியில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்.! கோடீஸ்வர அம்சம் பெறப்போகும் 3 ராசிக்காரர்கள்.!

Astrology: துலாம் ராசியில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்.! கோடீஸ்வர அம்சம் பெறப்போகும் 3 ராசிக்காரர்கள்.!

Shukra Aditya rajyog lucky zodiac signs: நவம்பர் 2, 2025 துலாம் ராசியில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம் காரணமாக சில ராசிகள் பலன்களை பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Nov 02 2025, 02:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சுக்ராதித்ய ராஜயோகம் 2025
Image Credit : Asianet News

சுக்ராதித்ய ராஜயோகம் 2025

சுக்ராதித்ய ராஜயோகம் என்பது சூரியன் மற்றும் சுக்கிரன் 2 கிரகங்களும் ஒரே ராசியில் இணையும் பொழுது உருவாகும் சுபமான யோகமாகும். சூரியன் தன்னம்பிக்கை, கவுரவம், ஆற்றல், தலைமைப் பண்பு ஆகியவற்றை குறிக்கும் கிரகமாகும். சுக்கிரன் காதல், செல்வம், ஆடம்பரம், செழிப்பு, திருமண வாழ்க்கை மற்றும் கலைகளை குறிக்கும் கிரகமாகவும் அறியப்படுகின்றனர்.

துலாம் ராசி என்பது சூரிய பகவானுக்கு பலவீனமான ராசியாகும். இந்த ராசியில் சூரியன் குறைவான பலன்களையே வெளிப்படுத்துவார். இந்த நிலையில் நவம்பர் 2, 2025 சுக்கிரனும் துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். இந்த எதிரெதிர் கிரகங்களின் விளைவு அவ்வளவு சுபமானதாக கருதப்படவில்லை. 

இருப்பினும் இந்த இரு கிரகங்கள் இணையும் பொழுது உருவாகும் சுக்ராதித்ய யோகம் சில ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றங்களை தரவுள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

24
கன்னி
Image Credit : Pinterest

கன்னி

  • சுக்ராதித்ய ராஜயோகம் கன்னி ராசிக்காரர்களின் இரண்டாம் வீட்டில் நடக்க இருக்கிறது. இரண்டாம் வீடு செல்வம், தனம் மற்றும் பேச்சை குறிக்கும் வீடாகும். 
  • எனவே கன்னி ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் திடீர் பண ஆதாயங்களை அனுபவிப்பீர்கள். 
  • பல்வேறு வழிகளில் இருந்து வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். 
  • முதலீடுகள் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பழைய கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரலாம். 
  • திருமணமாகாதவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கைகூடிவரும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், வலுவான பிணைப்புடனும் இருக்கும்.
  • வேலையில் இருப்பவர்கள் அங்கீகாரத்தையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள்.

Related Articles

Related image1
Astrology: 500 வருடங்களுக்குப் பின் குரு-சனி நடத்தும் அற்புதம்.! 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை அடியோடு மாறப்போகுது.!
Related image2
Astrology: ஒரே ராசியில் இணைந்த எதிரி கிரகங்கள்.! 4 ராசிகளுக்கு பிரச்சனைகள் ரவுண்டு கட்டி அடிக்கப் போகுது.!
34
தனுசு
Image Credit : stockPhoto

தனுசு

  • சுக்ராதித்ய ராஜயோகம் தனுசு ராசிக்காரர்களின் 11-வது வீட்டில் உருவாக இருக்கிறது. 11-வது வீடு லாப ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. 
  • எனவே இந்த காலகட்டத்தில் நீங்கள் எதிர்பாரத லாபத்தைப் பெறுவீர்கள். தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி இருக்கும். 
  • வணிகத்தில் மகத்தான வெற்றியையும் நல்ல ஆதாயங்களையும் இந்த காலகட்டத்தில் பெறுவீர்கள். 
  • பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் திறமைகளை வெளிப்படுத்தி ஒரு குழுவை தாங்கும் அளவிற்கு உயர் பதவிகளைப் பெறுவீர்கள். 
  • ஊதியம் உயர்வதற்கான வாய்ப்பு உண்டு. சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். பணத்தை சேமிப்பீர்கள். 
  • தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள்.
44
துலாம்
Image Credit : Pinterest

துலாம்

  • சுக்ராதித்ய ராஜயோகம் துலாம் ராசியின் முதல் வீடான லக்னத்தில் நடக்க இருப்பதால், இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக அமையும். 
  • உங்களின் ஆளுமை பிரகாசிக்கும். மற்றவர்களை கவரும் திறன் அதிகரிக்கும். 
  • புதிய உறவுகள் மலரவும், இருக்கும் உறவுகள் பலப்படவும் வாய்ப்பு உள்ளது. சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். 
  • நிதி நிலைமை மேம்படலாம். குறிப்பாக கலை, அழகு சாதனப் பொருட்கள், பேஷன் துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான காலம் ஏற்படும். 
  • சூரியன் துலாம் ராசியில் பலவீனமாக இருப்பதால் சில பின்னடைவுகளையும் சந்திக்கலாம். மன அழுத்தம் நிறைந்து காணப்படலாம். 
  • நவம்பர் 16 சூரியன் துலாம் ராசியில் இருந்து வெளியேறும் வரை நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: உங்களை கோடீஸ்வரன் ஆக்கும் ராகு-கேது பரிகார பூஜை.! இனி பதவியும் அதிகாரமும் உங்கள் வசம்.!
Recommended image2
புனர்பூச நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சியாகும் குரு பகவான்.! இந்த ராசிகளுக்கு இனிமே பிளாஸ்ட்டு பிளாஸ்ட்டு தான்.!
Recommended image3
கனவு சாஸ்திரம்: இந்த விலங்குகள் கனவில் வந்தால் அதிர்ஷ்டமும் செல்வமும் நிச்சயம்.!
Related Stories
Recommended image1
Astrology: 500 வருடங்களுக்குப் பின் குரு-சனி நடத்தும் அற்புதம்.! 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை அடியோடு மாறப்போகுது.!
Recommended image2
Astrology: ஒரே ராசியில் இணைந்த எதிரி கிரகங்கள்.! 4 ராசிகளுக்கு பிரச்சனைகள் ரவுண்டு கட்டி அடிக்கப் போகுது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved