MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: விருச்சிகத்தில் இணையும் சூரியன்-சுக்கிரன்.! மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளப் போகும் ராசிகள்.!

Astrology: விருச்சிகத்தில் இணையும் சூரியன்-சுக்கிரன்.! மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளப் போகும் ராசிகள்.!

Sun Shukra Conjunction in Scorpio: விருச்சிக ராசியில் சூரியன் மற்றும் சுக்கிரன் இருவரும் விரைவில் இணைய இருக்கின்றனர். இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் செல்வந்தர்களாக மாற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Oct 27 2025, 02:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சூரியன் சுக்கிரன் சேர்க்கை
Image Credit : Asianet News

சூரியன் சுக்கிரன் சேர்க்கை

ஜோதிடத்தில் கிரகங்களின் நிலைகளும், அவற்றின் இயக்கங்களும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கிரகங்கள் இணையும் பொழுது ராஜயோகங்களும் உருவாகி மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை தருகின்றன. அந்த வகையில் நவம்பர் 16 ஆம் தேதி துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். சுக்கிரன் நவம்பர் 26 ஆம் தேதி துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார்.

ஆற்றல், தலைமைப் பண்பு, கௌரவம், தன்னம்பிக்கை ஆகியவற்றின் காரகராக விளங்கும் சூரியனும், செல்வம், செழிப்பு, இன்பம், பொருள் ஆடம்பரம் ஆகியவற்றின் காரகராக விளங்கும் சுக்கிரனும் இணைவது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரவுள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
விருச்சிகம்
Image Credit : Asianet News

விருச்சிகம்

  • விருச்சிக ராசியின் முதல் வீடான லாப ஸ்தானத்தில் இந்த சேர்க்கை நடைபெற உள்ளது. 
  • இந்தச் சேர்க்கை உங்களது சொந்த ராசியில் நிகழ்வதால், இது உங்களுக்கு மிகவும் அனுகூலமான காலமாகும். 
  • உங்களின் தன்னம்பிக்கை மற்றும் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். மற்றவர்களை எளிதில் ஈர்க்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். 
  • திடீர் பண வரவுகள், முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. 
  • உங்கள் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரமும், உயர்வும் கிடைக்கலாம். 
  • திருமணம் மற்றும் தொழில் கூட்டாண்மை உறவுகளில் முக்கியத்துவம் இருக்கும். 
  • திருமண வாழ்வில் மகிழ்ச்சி, புரிதல் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள், கூட்டாளிகள் சேரலாம்.

Related Articles

Related image1
Astrology: 2026 முதல் சனி பகவான் இந்த 4 ராசிக்காரர்களுக்கு செல்வத்தை வாரி வழங்குவாராம்.! உங்க ராசி இருக்கா?
Related image2
Astrology: முருகப் பெருமானுக்கு பிடித்த 4 ராசிகள்.! இவர்களுக்கு வாழ்க்கையில துளி கஷ்டம் கூட வராதாம்.!
35
மகரம்
Image Credit : Asianet News

மகரம்

  • சூரியன் மற்றும் சுக்கிரன் இணைவது மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். 
  • இந்த சேர்க்கை உங்கள் ஜாதகத்தின் வருமானம் மற்றும் லாப ஸ்தானத்தில் உருவாக இருக்கிறது. 
  • இதன் காரணமாக உங்கள் வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பை காண்பீர்கள். 
  • புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கப்படும். 
  • அதிர்ஷ்டத்தின் காற்று உங்கள் பக்கம் வீசும். இதன் காரணமாக நிதி நிலைமை மேம்படும். 
  • முதலீடுகள் அல்லது சொத்து தொடர்பான விஷயங்களில் ஆதாயங்கள் ஏற்படும். 
  • பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் சரியாகி, சொத்துக்கள் கைக்கு வந்து சேரலாம். 
  • குழந்தைகள் தொடர்பான சுப செய்திகளும் கிடைக்கும்.
45
துலாம்
Image Credit : Asianet News

துலாம்

  • துலாம் ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை சாதகமாக அமையும். 
  • இந்த இணைப்பு உங்கள் ஜாதகத்தின் பணம் மற்றும் பேச்சு வீட்டில் உருவாகிறது. எனவே இந்த காலக் கட்டத்தில் நீங்கள் திடீர் பண வரவை எதிர்பார்க்கலாம். 
  • நிதி ஆதாயங்கள் உருவாகும். வேலை மற்றும் வணிகத்தில் மகத்தான வெற்றியைப் பெறுவீர்கள். வருமானம் கணிசமாக அதிகரிக்கும். 
  • நம்பிக்கை மற்றும் தைரியம் உயரும். சவாலான வேலையை எடுத்து வெற்றிகரமாக முடித்துக் காட்டுவீர்கள். 
  • பெரிய வேலைகள், திட்டங்கள், ஆர்டர்கள் உங்கள் கைக்கு வரலாம். 
  • புதிய வாகனம் அல்லது சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உருவாகும். 
  • உங்கள் ஆளுமை பிரகாசிக்கும். செல்வாக்கு அதிகரிக்கும்.
55
கும்பம்
Image Credit : Asianet News

கும்பம்

  • கும்ப ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் சுக்கிரன் இணைவது நன்மை பயக்கும். 
  • இந்த இணைவு உங்கள் ராசியின் கர்ம ஸ்தானத்தில் நடைபெற இருக்கிறது. 
  • எனவே இந்த காலகட்டத்தில் நீங்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். 
  • சிறிய அளவில் தொழில் செய்து வருபவர்கள் தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள். உங்கள் தொழிலை பிற இடங்களுக்கும் விரிவுபடுத்துவீர்கள். 
  • உங்கள் மனதில் புதிய நம்பிக்கைகளும், வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையும் அதிகரிக்கும். 
  • சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். 
  • வேலை மாற்றம் விரும்புவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். 
  • வருமானம் அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.


(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
30 வருடங்களுக்குப் பின் மீன ராசியில் சந்திக்கும் சனி-புதன்.! இந்த 3 ராசிகளுக்கு அடிக்கும் யோகம்.!
Recommended image2
சூரிய கிரகணத்தின் தாக்கம் இன்னும் முடியவில்லை.! அடுத்த 15 நாட்கள் தூக்கத்தை தொலைக்கப் போகும் 4 ராசிகள்.!
Recommended image3
ராகு கேதுவால் உருவாகும் கால சர்ப்ப யோகம்.! 6 ராசிகள் வாழ்வில் இனி சரவெடி தான்.!
Related Stories
Recommended image1
Astrology: 2026 முதல் சனி பகவான் இந்த 4 ராசிக்காரர்களுக்கு செல்வத்தை வாரி வழங்குவாராம்.! உங்க ராசி இருக்கா?
Recommended image2
Astrology: முருகப் பெருமானுக்கு பிடித்த 4 ராசிகள்.! இவர்களுக்கு வாழ்க்கையில துளி கஷ்டம் கூட வராதாம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved