- Home
- Astrology
- சனி பகவானை நேருக்கு நேர் சந்திக்கும் சூரியன்.! டிச.17 முதல் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்.!
சனி பகவானை நேருக்கு நேர் சந்திக்கும் சூரியன்.! டிச.17 முதல் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்.!
Sun Saturn Conjunction 2025 Lucky Zodiac Signs: டிசம்பர் 17, 2025 அன்று சூரியன் மற்றும் சனியின் சிறப்பு சேர்க்கை உருவாகிறது. இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. அந்த ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம்.

சனி சூரியன் சேர்க்கை 2025
டிசம்பர் 16, 2025 அன்று சூரிய பகவான் விருச்சிக ராசியில் இருந்து வெளியேறி தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். மறுநாள் டிசம்பர் 17ஆம் தேதி காலை 10:01 மணியளவில் சூரியனும் சனி பகவானும் சிறப்பு யோகத்தை உருவாக்குகின்றனர். டிசம்பர் 17ஆம் தேதி சூரிய பகவான் மற்றும் சனி பகவான் இருவரும் 90 டிகிரி இடைவெளியில் அமைந்து லாப யோகத்தை உருவாக்குகின்றனர். இந்த யோகம் ஜோதிடத்தில் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இந்த யோகத்தால் மூன்று ராசிக்காரர்கள் நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இங்கு பார்க்கலாம்.
மேஷம்
சனி மற்றும் சூரிய பகவானின் சேர்க்கை மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வரும். வாழ்க்கையில் புதிய உயரங்களை அடைவதற்கான வாய்ப்புகள் திறக்கும். உங்கள் தலைமைத்துவ பண்புகள் வெளிப்படும். வேலை அல்லது வணிகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். திடீர் நிதி ஆதாயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். ஏற்கனவே செய்திருந்த முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கப்படும். உங்கள் நிதி நிலைமை வலுப்படும். வாழ்க்கையில் வெற்றி மற்றும் ஸ்திரத்தன்மை கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் சனி இணைந்து உருவாக்கும் லாப யோகம் மிகவும் நன்மை பயக்கும். சமூகத்தில் உங்கள் மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கும். உங்கள் ஆளுமைத் திறன் மேம்படும். வேலையில் சக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு ஒரு குழுவை தாங்கும் அளவிற்கு பொறுப்புகள் வழங்கப்படலாம். பழைய கடன் பிரச்சனைகள் தீரும். குடும்பத்தினருடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். எதிர்காலம் குறித்து நீங்கள் மேற்கொள்ளும் திட்டங்கள் பலனளிக்கும். உங்கள் முயற்சிகளுக்கு நேர்மறையான பலன்கள் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சூரியன் சனி இணைந்து உருவாக்கும் லாப யோகம் மிகவும் நன்மை பயக்கும். நிதி ரீதியாக ஆதாயங்களை அனுபவிப்பீர்கள். திடீர் பணவரவு ஏற்படும். நிலுவையில் இருக்கும் பிரச்சனைகள் தீர்க்கப்படும். உங்கள் தன்னம்பிக்கை உயரும். வேலையில் உங்களுக்கான தனி அடையாளம் கிடைக்கும். தொழிலில் புதிய வெற்றிகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இருக்கும் தகராறுகள் தீர்க்கப்படும். நிதி ஆதாயத்திற்கு மட்டுமல்ல, சமூக கௌரவம் மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கும் சாதகமான காலமாக அமையும். புதிய திட்டங்களை தொடங்கி வெற்றி பெறுவதற்கு சிறந்த நேரமாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

