MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • பிப்ரவரி 23 முதல் இந்த 6 ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது.! செல்வம் பெருகும்.! வங்கி இருப்பு இரட்டிப்பாகும்.!

பிப்ரவரி 23 முதல் இந்த 6 ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது.! செல்வம் பெருகும்.! வங்கி இருப்பு இரட்டிப்பாகும்.!

Sevvai Peyarchi 2026 : விரைவில் செவ்வாய் பகவான் கும்ப ராசியில் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக சில ராசிகள் நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர். அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Feb 17 2026, 11:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
செவ்வாய் பெயர்ச்சி 2026
Image Credit : AI

செவ்வாய் பெயர்ச்சி 2026

இந்த மாதம் 23 ஆம் தேதி முதல் ஏப்ரல் 2 ஆம் தேதி வரை கும்ப ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால், சில ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். அவர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும் வாய்ப்பு உள்ளது. அந்த ராசிகள் பற்றி காணலாம்.

27
மேஷம்
Image Credit : Pinterest

மேஷம்

மேஷ ராசியின் அதிபதியாக விளங்கி வரும் செவ்வாய் பகவான், மேஷ ராசியின் 11 ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இது லாப ஸ்தானமாக இருப்பதால், வருமானம் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வேலைகளில் எதிர்பார்ப்புகளை மீறிய நிதி ஆதாயங்கள் காணப்படும்.

Related Articles

Related image1
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்.! இன்று இந்த 4 ராசிகள் ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்.!
Related image2
37 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய மகா கிரகண யோகம்.! 3 ராசிகளுக்கு கடும் எச்சரிக்கை.! ரொம்ப கஷ்டப்படப்போறீங்க.!
37
ரிஷபம்
Image Credit : stockPhoto

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு 10ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிக்கிறார். இது தொழில் அல்லது கர்ம ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. தொழில், உத்தியோகத்தில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படலாம். எதிர்பாராத பண வரவு உண்டாகும். லாபகரமான தொடர்புகள் ஏற்படும்.

47
கன்னி
Image Credit : Pinterest

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு 6ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் வருமானம் பெருகி, தனிப்பட்ட மற்றும் நிதிப் பிரச்சனைகளில் இருந்து முழுமையாக விடுபடுவார்கள். கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சொத்து தகராறுகள் மற்றும் நீதிமன்ற வழக்குகளிலும் வெற்றி பெறுவார்கள்.

57
துலாம்
Image Credit : Pinterest

துலாம்

துலாம் ராசிக்கு, 7ம் அதிபதி செவ்வாய் 5ம் வீட்டில் நுழைகிறார். 5 ஆம் வீடு என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. எனவே குழந்தைகள் மூலமாக நல்ல செய்திகள் வரும். பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் திருமணம் குறித்த சுப செய்திகள் கிடைக்கும். பணியிடத்தில் அதிகாரமிக்க பதவிகள் தேடி வரும்.

67
தனுசு
Image Credit : stockPhoto

தனுசு

தனுசு ராசிக்கு 3ம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் பல வழிகளில் வருமானம் வரும். சொத்து தகராறுகள் சாதகமாக தீரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. தொழில், வேலை நிமித்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

77
மகரம்
Image Credit : Pinterest

மகரம்

மகர ராசிக்கு, இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் வருமானம் பெருகும். பங்குகள் மற்றும் ஊக வணிகம் நன்றாக நடக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். வருமான ஆதாரங்கள் விரிவடையும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்.! இன்று இந்த 4 ராசிகள் ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்.!
Recommended image2
Today Rasi Palan : இன்று உங்களுக்கு லாபமா? நஷ்டமா? பிப்ரவரி 17-ம் தேதிக்கான 12 ராசி பலன்கள் இதோ!
Recommended image3
கும்பத்தில் செவ்வாய்-ராகு சங்கமம்: 40 நாட்கள் ஜொலிக்கப்போகும் 6 ராசிகள்! முன்னேற்றம் இனி உங்கள் கையில்!
Related Stories
Recommended image1
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்.! இன்று இந்த 4 ராசிகள் ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்.!
Recommended image2
37 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய மகா கிரகண யோகம்.! 3 ராசிகளுக்கு கடும் எச்சரிக்கை.! ரொம்ப கஷ்டப்படப்போறீங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved