MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • பிப்ரவரி மாத பலன்கள்: கோடி கோடியாக பணம் குவிக்கப் போகும் 5 ராசிகள்.! வாழ்க்கையில் ஜாக்பாட்.! உங்க ராசி இருக்கா?

பிப்ரவரி மாத பலன்கள்: கோடி கோடியாக பணம் குவிக்கப் போகும் 5 ராசிகள்.! வாழ்க்கையில் ஜாக்பாட்.! உங்க ராசி இருக்கா?

பிப்ரவரி மாதத்தில் பல கிரகங்கள் தங்கள் நிலையை மாற்ற உள்ளன. இதனால் 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசமாக இருக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அந்த 5 அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இங்கு காணலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Feb 02 2026, 11:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மேஷம்
Image Credit : Pinterest

மேஷம்

மேஷ ராசிக்கு பிப்ரவரி மாதம் சிறப்பாக இருக்கும். கிரக பெயர்ச்சிகள் 11-வது வீடான லாப ஸ்தானத்தில் நிகழ இருக்கிறது. இதன் காரணமாக பொருளாதார நிலையில் பெரும் புரட்சி ஏற்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த தொகைகள் வசூலாகும். புதிய முதலீடுகள் மூலம் லாபம் இரட்டிப்பாக கிடைக்கும். பொறுமை கூடும். திட்டமிட்டால் வேலைகள் சரியான நேரத்தில் முடியும். பிப்ரவரி 15-க்கு பிறகு மன அழுத்தம் குறையும். அவசர தேவைகள் வரும் என்பதால் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.

25
ரிஷபம்
Image Credit : stockPhoto

ரிஷபம்

ரிஷப ராசிக்கு இது நல்ல நேரமாகும். ரிஷப ராசியின் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் கிரகங்களின் சேர்க்கை நடைபெற இருப்பதால் உங்கள் கடின வேலை உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த இட மாற்றம் அல்லது பெரிய நிறுவனங்களில் இருந்து வேலைக்கான வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் நீங்கி அமைதி நிலவும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். பிப். 15 ஆம் தேதிக்குப் பின் நிலைமை சாதகமாகும். சொத்து, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. இருப்பினும் செலவில் கவனம் தேவை.

Related Articles

Related image1
Rasi Palan 2026: பிப்ரவரியில் 5 கிரக பெயர்ச்சிகள்.! இந்த 3 ராசிகள் மிகவும் கவனமா இருக்கணும்.! கஷ்ட காலம் ஆரம்பம்.!
Related image2
சனி பகவான் பிடியில் சிக்கப்போகும் 5 ராசிகள்.! சனியின் வக்ர ஆட்டத்தால் சோதனை காலம் ஆரம்பம்.! நிதி இழப்புகள் உறுதி.!
35
மிதுனம்
Image Credit : Pinterest

மிதுனம்

மிதுன ராசிக்கு இந்த மாதம் நல்ல மாதமாக இருக்கும். மிதுன ராசியின் ஒன்பதாம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் கிரகங்கள் சஞ்சரிப்பது மிதுன ராசிக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்க இருக்கிறது. தடைபட்ட காரியங்கள் அனைத்தும் தானாக முடிவுக்கு வரும். மாணவர்கள் உயர் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வெளிநாடு சென்று படிக்க அல்லது பணி புரிவதற்கு எடுக்கும் முயற்சிகள் கைகூடும். தந்தை வழியில் சொத்துக்கள் அல்லது ஆதாயம் கிடைக்கும். பெரியவர்களின் ஆசி உறுதுணையாக இருக்கும். மார்க்கெட்டிங், மேலாண்மை, கற்பித்தல் என அனைத்திலும் முன்னேறுவீர்கள். புதிய திறன்களைக் கற்றுக்கொள்வீர்கள். மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

45
கன்னி
Image Credit : Pinterest

கன்னி

கன்னி ராசிக்கு பிப்ரவரி மாதம் சிறப்பாக இருக்கும். கன்னி ராசியின் 6 ஆம் வீடான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அது உங்களுக்கு ராஜயோகத்தை கொடுக்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் தாமாக விலகிச் செல்வார்கள். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். நீண்ட நாட்களாக வாட்டி வதைத்து வந்த உடல் உபாதைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். வேலை அல்லது போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். நீண்ட நாள் நிலுவையில் இருந்த பணிகள் முடியும். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்காமல், சிந்தித்து செயல்படுங்கள்.

55
கும்பம்
Image Credit : Pinterest

கும்பம்

கும்ப ராசிக்கு பிப்ரவரி மாதம் முழுவதும் சிறப்பாக இருக்கும். கும்ப ராசியின் முதல் வீட்டில் கிரகங்களின் சேர்க்கை நடைபெறுவதால் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் உங்கள் எதிர்காலத்தை மாற்றி அமைக்கும். உங்கள் பேச்சாற்றல் மற்றும் புத்தி கூர்மையால் பலரை ஈர்ப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். திருமணத்தில் இருந்த தடைகள் நீங்கி, நல்ல வரன் அமையும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை நிகழும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உள்ளது. முதலீடுகள் லாபம் தரும். மாணவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today Rasi Palan : இன்று உங்களுக்கு லாபமா? நஷ்டமா? பிப்ரவரி 17-ம் தேதிக்கான 12 ராசி பலன்கள் இதோ!
Recommended image2
கும்பத்தில் செவ்வாய்-ராகு சங்கமம்: 40 நாட்கள் ஜொலிக்கப்போகும் 6 ராசிகள்! முன்னேற்றம் இனி உங்கள் கையில்!
Recommended image3
Birth Date : இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.! கஷ்டத்தையும் சாதனையாக மாற்றுவார்கள்.!
Related Stories
Recommended image1
Rasi Palan 2026: பிப்ரவரியில் 5 கிரக பெயர்ச்சிகள்.! இந்த 3 ராசிகள் மிகவும் கவனமா இருக்கணும்.! கஷ்ட காலம் ஆரம்பம்.!
Recommended image2
சனி பகவான் பிடியில் சிக்கப்போகும் 5 ராசிகள்.! சனியின் வக்ர ஆட்டத்தால் சோதனை காலம் ஆரம்பம்.! நிதி இழப்புகள் உறுதி.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved