- Home
- Astrology
- இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம்.! மார்ச் மாதம் அதிக பாதிக்கப்புள்ளாகும் 3 ராசிகள் இவர்கள் தான்.!
இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம்.! மார்ச் மாதம் அதிக பாதிக்கப்புள்ளாகும் 3 ராசிகள் இவர்கள் தான்.!
2026 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 3 ஆம் தேதி நிகழ உள்ளது. ஜோதிடத்தின்படி, இந்த கிரகணத்தால் 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என ஜோதிடர்கள் எச்சரிக்கின்றனர்.

சந்திர கிரகணம் 2026
2026-ன் முதல் சந்திர கிரகணம் மார்ச் 3 அன்று நிகழும். இது இந்தியாவில் தெரியும் பகுதி சந்திர கிரகணமாகும். அப்போது, சிம்ம ராசியில் கேதுவுடன் சந்திரன் இணைவதால் சில ராசிகளுக்கு பாதிப்பு ஏற்படும். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்
ஜோதிடத்தின்படி, கடக ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணத்தின் போது மன அழுத்தம் அதிகரிக்கலாம். சிறிய விஷயங்களைப் பற்றி அதிகம் கவலைப்படலாம். வாகனம் வாங்கும் எண்ணத்தை தள்ளிப்போடுவது நல்லது. நிதி பரிவர்த்தனைகளை தவிர்க்கவும். புதிய முயற்சிகளை அடுத்த சில தினங்களுக்கு ஒத்தி வைக்கவும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில் அல்லது வேலையில் யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். ஆவணங்கள் மற்றும் நிதி விஷயங்களில் கவனம் தேவை. மன அழுத்தம் இருக்கும். சிறிய கவனக்குறைவு கூட பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கவும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். உங்கள் உணவில் சிறப்பு கவனம் தேவை. மன அமைதியைப் பேணுவது முக்கியம். புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது மற்றும் ஆலோசனையுடன் செயல்படுவது நல்லது. நிதி இழப்புகளை தவிர்ப்பதற்கு ஆன்லைன் பரிவர்த்தனைகளில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

