MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Birth Date : இவங்க கிட்ட உஷாரா இருங்க; இந்த தேதியில் பிறந்தவங்க ரொம்ப சுயநலவாதிங்க!!

Birth Date : இவங்க கிட்ட உஷாரா இருங்க; இந்த தேதியில் பிறந்தவங்க ரொம்ப சுயநலவாதிங்க!!

எண் கணிதத்தின் படி, எந்த தேதியில் பிறந்தவர்கள் ரொம்பவே சுயநலவாதிகள் என்று இந்த பதிவில் காணலாம்.

1 Min read
Author : Kalai Selvi
Published : Jun 30 2025, 07:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
எந்த தேதிகளில் பிறந்தவர்கள் சுயநலவாதிகள்?
Image Credit : Twitter

எந்த தேதிகளில் பிறந்தவர்கள் சுயநலவாதிகள்?

எண் கணிதத்தின் படி, ஒருவரது பிறந்த தேதியை வைத்து அவரது குணாதிசயங்களை கணித்து விட முடியும். அந்த வகையில், ஒரு சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் ரொம்பவே சுயநலவாதிகள் பிடிவாதம் ஆனவர்கள் மற்றும் திமிர் பிடித்தவர்கள் என்று சொல்லப்படுகிறது அவர்கள் தங்களது சொந்த நலனுக்காக பிறரிடம் நட்பாக பழகுவார்கள். எனவே எந்த தேதியில் பிறந்தவர்கள் மிகவும் சுயநலவாதிகள் என்று இந்த பதிவில் காணலாம்.

24
8, 17 மற்றும் 26 தேதிகள்
Image Credit : Twitter

8, 17 மற்றும் 26 தேதிகள்

எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்கள் ரொம்பவே சுயநலவாதிகளாக இருப்பார்கள். இவர்களை ஆளும் கிரகம் சனி. இவர்கள் பிறரின் கருத்துக்களை மதிக்காமல் மிகவும் கடினமான முடிவுகளை எடுப்பார்கள். இவர்கள் தர்க்கத்திற்கு அதிக முன்னுரிமை கொடுப்பார்கள். நிதி விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பார்கள். நீண்டகால நிலத்தன்மையை நாடுவார்கள். இது போன்ற காரணத்திற்காக இவர்கள் சில நேரங்களில் சுயநலமாக சிந்திப்பார்கள்.

Related Articles

Related image1
Numerology : 1-ம் தேதியில் பிறந்தவரா நீங்கள்? உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?
Related image2
Numerology : இந்த தேதியில் பிறந்தவரா நீங்க? பணக்காரரா மாறும் யோகம் இருக்கு
34
7, 16 மற்றும் 25 தேதிகள்
Image Credit : Twitter

7, 16 மற்றும் 25 தேதிகள்

எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்கள் சுயநலவாதிகள். இவர்கள் மீது கேதுவின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். இவர்கள் உள்முக சிந்தனை கொண்டவர்கள் மற்றும் எதையும் மிக விரைவாக வெளிப்படுத்தவே மாட்டார்கள். இவர்கள் தங்களை நம்பும் பாதையை மட்டுமே பின்பற்றுவார்கள். மற்றவரின் உணர்வுகள் குறித்து சிறிது கூட கவலைப்பட மாட்டார்கள். ஏதாவது காரியம் செய்தால் அதனால் தங்களுக்கு பலம் கிடைக்குமா? இல்லையா? என்பதை ஆராய்ந்து செய்வார்கள். தாங்கள் செய்யும் காரியம் பிறரை காயப்படுத்தினால் கூட கவலைப்பட மாட்டார்கள்.

44
1, 10 மற்றும் 28 தேதிகள்
Image Credit : Twitter

1, 10 மற்றும் 28 தேதிகள்

எண் கணிதத்தின் படி, எந்த மாதத்தின் இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்கள் ரொம்பவே சுயநலவாதிகளாக இருப்பார்கள். இவர்களுக்கு சூரியனின் தாக்கம் அதிகமாக இருக்கும். இவர்கள் தலைமைத்துவ குணங்களை கொண்டுள்ளதால் தங்கள் சொந்த கருத்துகளுக்கு மட்டுமே அதிக முன்னுரிமை கொடுப்பார்கள். தங்களது சொந்த நலன்களை கவனித்த பிறகு தான் பிறரை குறித்து சிந்திப்பார்கள்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஜோதிடம்
ஆன்மீகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Birth Date : இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.! கஷ்டத்தையும் சாதனையாக மாற்றுவார்கள்.!
Recommended image2
மீன ராசியில் நடக்கும் இணைவு.! மார்ச் மாதம் முழுவதும் தூக்கத்தை தொலைக்கப் போகும் 4 ராசிகள்.!
Recommended image3
மகா சிவராத்திரி இரவில் நடக்கும் அதிசயம்.! 4 ராசிகள் வாழ்வில் நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள்.!
Related Stories
Recommended image1
Numerology : 1-ம் தேதியில் பிறந்தவரா நீங்கள்? உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?
Recommended image2
Numerology : இந்த தேதியில் பிறந்தவரா நீங்க? பணக்காரரா மாறும் யோகம் இருக்கு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved