மலப்புரம் இளைஞர் ஒருவர் போலி இன்ஸ்டாகிராம் ஐடி மூலம் இளம்பெண்ணுடன் பழகி, திருமண ஆசை காட்டி ஆபாச படங்களை பெற்றுள்ளார். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அந்த படங்களை இளம்பெண்ணின் தோழிக்கு அனுப்பியுள்ளார். 

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் எடப்பாள் பகுதியை சேர்ந்தவர் முகம்மது சஹத் (19). செல்போன் கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு வயநாடு மாவட்டம் மானந்தவாடியை சேர்ந்த இளம்பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவருக்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சஹத் அந்த இளம்பெண்ணின் ஆபாச புகைப்படங்களை வாங்கியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இளம்பெண் சஹத்துடன் இருந்த தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த சஹத் தன்னுடைய காதலியின் ஆபாச புகைப்படம், வீடியோக்களை இளம்பெண்ணின் தோழிக்கு அனுப்பி வைத்தார்.

இதனை கண்டு அவரது தோழி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் மானந்தவாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சஹத்தை கைது செய்தனர். இதனையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியதில் போலி இன்ஸ்டாகிராம் ஐடி மூலம் இளம்பெண்ணை தொடர்பு கொண்டது தெரியவந்தது. விசாரணைக்குப் பின் அவரை போலீசார் மலப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.