சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Superstar Rajinikanth) 75வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால சினிமா பயணத்தை பாராட்டியுள்ளார் பிரதமர் மோடி.

75th Birthday: "Acting talent that has captivated generations!" - PM Modi's special wish to Rajinikanth! : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இன்று (டிசம்பர் 12) 75வது வயதில் காலடி எடுத்து வைக்கும் ரஜினிகாந்திற்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர் மோடி, அவரின் திரைப்படப் பயணமும் சிறப்புமிக்க பங்களிப்புகளையும் பாராட்டினார்.

ரஜினிகாந்தின் நடிப்புத் திறமை பல தலைமுறைகளாகப் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது என்றும், இந்திய சினிமாவில் அவர் ஏற்படுத்திய தாக்கம் குறிப்பிடத்தக்கது என்றும் மோடி பதிவு செய்தார். பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை புதுப்பித்து, தமிழ் சினிமாவில் தனிக்கட்டையை உருவாக்கி கலைஞராக ரஜினிகாந்த் திகழ்கிறார்.

இந்த ஆண்டு ரஜினிகாந்தின் திரைப்படப் பயணத்திற்கான முக்கியமான ஆண்டு என்றும் மோடி குறிப்பிட்டார். 1975-ல் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ரஜினிகாந்த், 50 ஆண்டுகள் நீண்ட தனது சினிமா பயணத்தில் ரசிகர்களின் அன்பைப் பெற்ற மிகப்பெரும் நாயகனாக வளர்ந்துள்ளார்.

Scroll to load tweet…

சூப்பர் ஸ்டாரின் உடல்நலமும் நீண்ட ஆயுளும் வேண்டி பிரார்த்திப்பதாகவும், அவர் தொடர்ந்து சிறப்பான படைப்புகளை வழங்க வேண்டும் என்ற வாழ்த்தையும் பிரதமர் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பெருமை மட்டுமல்ல, இந்திய கலையின் பன்முகத்தன்மையை பிரதிநிதித்துவப்படுத்தும் குறிப்பிடத்தக்க நபர் என்றும் மோடி பாராட்டினார்.

ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் இந்த பிரதமரின் வாழ்த்து பதிவு சமூக ஊடகங்களில் ரசிகர்களாலும் பொதுமக்களாலும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. ரசிகர்கள், தமிழ் சினிமா நட்சத்திரங்கள் முதல் உலக தலைவர்கள் வரை அனைவரும் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.