2025 டிசம்பர் மாதத்தை முன்னிட்டு ரெனால்ட் இந்தியா தனது கைகர், டிரைபர், மற்றும் க்விட் கார்கள் மீது வருட இறுதி சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகளை விரிவாக இங்கு பார்க்கலாம்.
2025 டிசம்பர் மாதத்தை முன்னிட்டு ரெனால்ட் இந்தியா தனது மூன்று கார்கள் மீது வருட இறுதி சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளன. குறிப்பாக கைகர் சில வகைகளில் அதிகபட்சமாக ரூ.1.05 லட்சம் வரை நன்மைகள் வழங்கப்படுகின்றன. இந்த வருட முடிவில் கார் வாங்குபவர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
ரெனால்ட் இந்த ஆண்டு இறுதிக் காலத்தில் பழைய ஸ்டாக்கள், பிரிஃபேஸ்லிப்ட் மாடல்கள் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட புதிய பதிப்புகள் விற்பனை செய்யும் நோக்கில் பல்வேறு சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் நேரடி காசோலை தள்ளுபடி, எக்சேஞ்ச் போனஸ், லாயல்டி ரிவார்டுகள் மற்றும் ரீலைவ் ஸ்கிரப்பேஜ் திட்டம் உள்ளிட்டவை அடங்கும்.
மாடல் மற்றும் வகைக்கு ஏற்ப விலை குறைப்பு மாறுபடும். இந்த மாதத்தில் அதிகபட்ச நன்மைகள் கிடைக்கப் பெறும் மாடலாக கைகர் நீடிக்கிறது. குறிப்பாக MY2025 பிரி-ஃபேஸ்லிப்ட் கைகர் மீதான சலுகை ரூ.1.05 லட்சம் வரை சென்றுள்ளது. ஃபேஸ்லிப்ட் செய்யப்பட்ட புதிய கைகர் மீதும் நன்மைகள் உள்ளன. ஆனால் அது ரூ.85,000 வரை மட்டுமே.
கைகருடன் சேர்த்து டிரைபர் ரேஞ்சும் கனிசமான சலுகைகளுடன் வருகிறது. சில டீலர்ஷிப்களில் இன்று MY2025 பிரி-ஃபேஸ்லிப்ட் டிரைபர் ஸ்டாக்கள் இருப்பதால், அவற்றின் மொத்த நன்மைகள் ரூ.95,000 வரை பதிவாகின்றன. புதிய அப்டேட் செய்யப்பட்ட டிரைபர் மாடல்களுக்கு கிடைக்கும் நன்மைகள் நகரம் மற்றும் வகைக்கு ஏற்ப அதிகபட்சம் ரூ.80,000 வரை வழங்கப்படுகின்றன.
ரெனால்டின் மாடலான க்விட் மீதும் இந்த டிசம்பரில் அதிகபட்சமாக ரூ.70,000 வரை தள்ளுபடிகள் கிடைக்கின்றன. இதில் பணத்தள்ளுபடி, எக்சேஞ்ச் மற்றும் ஸ்கிரப்பேஜ் நன்மைகள் சேர்க்கப்பட்டுள்ளன. பழைய ஸ்டாக்களுக்கு அதிகபட்ச சலுகை கிடைக்கும்; புதிதாக அப்டேட் ஆன மாடல்களுக்கு போட்டியில் நிலைநிறுத்தப்படும் வகையில் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.
புதிய கார் வாங்கத் திட்டமிடுபவர்கள் அருகிலுள்ள ரெனால்ட் டீலர்ஷிப்களைச் சென்று எந்த மாடல்களில் மிக அதிக நன்மைகள் உள்ளன என்பதற்காக நேரடியாக சரிபார்த்துக் கொள்ளலாம். நகரத்துக்கு நகரம் தள்ளுபடிகள் மாறுபடுவதால் விருப்பத்துக்கு ஏற்ற மாடலைத் தேர்வு செய்வதில் இது உதவும். இத்துடன், ரெனால்ட் நிறுவனம் 2026 ஜனவரியில் இந்திய சந்தையில் புதிய மிட்-சைஸ் SUV ஒன்றை அறிமுகப்படுத்தத் தயாராகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


