தினசரி வேலைகள் சில சமயங்களில் எளிதாகவும், சில சமயங்களில் கடினமாகவும் இருப்பதற்கு, அந்த வேலை தொடங்கிய நேரம் ஒரு முக்கிய காரணம். சுக்கிர ஓரையில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி இந்த கட்டுரை விளக்குகிறது.
நாம் ஒரு நாள் முழுவதும் பல வேலைகளை செய்வோம். சில வேலைகள் மிகச் சரளமாகவும், சில வேலைகள் எதையுமே சாதிக்க முடியாமல் முடிந்துவிடும். ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று பலர் யோசிப்பீர்கள். அதற்கான முக்கியமான ஒரு காரணம் – அந்த வேலை தொடங்கிய நேரம் தான். இந்த நேரங்களில் ஒவ்வொரு மணி நேரத்தையும் ஒரு கிரகம் ஆட்சி செய்கிறது. அதில் மிகவும் சுபமானதும், வெற்றியளிக்கக்கூடியதும் சுக்கிர ஓரை.
சுக்கிர ஓரை என்றால் என்ன?
நம் ஜோதிட கணிப்புகளில் ஒவ்வொரு நாளும் 24 மணிநேரம் 8 ஓரைகளாக பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஓரைக்கும் ஒரு கிரகம் அதிபதியாக அமைகிறது. சுக்கிரன் (வெள்ளி கிரகம்) ஆட்சி செய்கிற ஓரைதான் “சுக்கிர ஓரை” எனப்படுகிறது.சுக்கிரன், இன்பம், கலை, இசை, பொழுதுபோக்கு, பணம், மகிழ்ச்சி, திருமணம், அழகு, அன்பு போன்ற அம்சங்களை பிரதிநிதித்துவம் செய்கிறார். எனவே, இவரது ஓரையில் இந்தத் துறைகளுடன் தொடர்புடைய வேலைகளை செய்ய மிகச் சிறந்த நேரமாகும்.
சுக்கிர ஓரையில் என்ன செய்யலாம்?
- திருமண பேச்சுவார்த்தைகள்
கல்யாணம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை சுக்கிர ஓரையில் நடத்தலாம். கூடக்கூடிய சிறு இடையூறுகள் கூட விலகி, பேச்சுக்கள் வெற்றிகரமாக முடியும்.சுக்கிர ஓரை காரிய தடைகளை எல்லாம் அப்படியே விரட்டி அடித்து உங்களின் திருமண பேச்சு வார்த்தையை அழகாக முடித்துக்கொடுக்கும்.
- கலை தொடர்பான தொடக்கங்கள்
இசை, நடனம், ஓவியம் போன்ற கலைத் துறைகளில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், புதிய இசை உருவாக்கம், அரங்கேற்றம் தொடக்கம் போன்றவற்றை சுக்கிர ஓரையில் தொடங்குவது நல்லது. மகிழ்ச்சியையும், புகழையும் பெறுவீர்கள். குருவின் ஆசியுடன் உங்களின் வளர்ச்சி மேன்மை அடையும். அதேபோல் கலைத்துறையில் புகழ் கிடைக்கும். சுக்கிரன் அகம் மகிழ்ந்து செல்வத்தை அள்ளி அள்ளி தருவான்.
- ஷாப்பிங்
போரடிக்கிறதே என்று ஷாப்பிங் போக வேண்டாம். ஷாப்பிங் செல்லும் போது சுக்கிர ஓரையில் சென்றால் நினைத்த பொருட்களை நினைத்தப்படி உங்காளால் குறைந்த நேரத்தில் தேர்வு செய்ய முடியும். துணிகள், நகைகள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்கும் சுக்கிர ஓரை சிறந்தது. இந்த நேரத்தில் சென்றால் விருப்பமான பொருட்கள் கிடைக்கும். மனநிறைவு அதிகம் இருக்கும்.
- வாகனம் வாங்கும் நேரம்
வாகனங்ள் விருத்தியாக வேண்டுமென்றால் புதிய வாகனம் வாங்குவதற்கு செல்வதற்கு சுக்கிர ஓரையில் செல்லுங்கள்.புதிய டூவீலர், கார், வணிக வாகனம், லோடு வண்டி, மாடு, கன்று போன்றவற்றை வாங்க வேண்டுமானாலும் சுக்கிர ஓரையை தேர்ந்தெடுக்கலாம். இது வளர்ச்சிக்கான அடியாக அமையும்.
- விருந்துகள் மற்றும் சுப நிகழ்ச்சிகள்
நீங்கள் விருந்துக்கு செல்லவோ, யாருக்காவது விருந்தளிக்கவோ இருந்தால், சுக்கிர ஓரையில் செயல் படுங்கள். நிகழ்வு மகிழ்ச்சியாகவும், அழகாகவும் அமையும். மனக்கசப்பு இல்லாமல் விருந்துகளும் சுப நிகழ்ச்சிகளும் சந்தோஷமாக முடியும்.
- சமைத்தல்
உங்கள் கைமணத்திற்கு எல்லோரும் மயங்க வேண்டுமா? அப்படியானால் நீங்கள் சுக்கிர ஓரையில் சமைக்க வேண்டும்.மீட்டிங், விருந்துக்கான சாப்பாடுகள், இனிப்புகள் செய்யும் திட்டம் இருந்தால், சுக்கிர ஓரை மிகச் சிறந்த நேரம். வீட்டில் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள். மிச்சம் இல்லாமல் சாப்பாடு காலியாகும்.
- பரிசுகள் அனுப்புதல்
யாருக்காவது பரிசு கொடுக்க வேண்டுமா?, அப்படியானால் நீங்கள் சுக்கிர ஓரையில் செய்து பாருங்கள். நீங்கள் அனுப்பும் பொருளின் மதிப்பு பல மடங்கு அதிகமாகும். உங்கள் பரிசுகளை பெறுபவர்கள் அதனை கொண்டாடி மகிழ்வர். சகோதரர்கள், நண்பர்கள், உறவினர்களுக்கு பரிசுகள், இனிப்புகள் அனுப்பும்போதும் இந்த ஓரையை பயன்படுத்துங்கள். உறவு உறுதி பெறும்.
- தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள்
சுய தொழில் செய்பவர்கள் சுக்கிர ஓரை எப்போது வருகிறது என மனதில் பதிய வைத்துக்கொண்டால், அவர்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள். அலங்கார பந்தல், ஓர்க்கெஸ்ட்ரா, மேடை அலங்காரம், வாகன ஏற்பாடு போன்ற பக்கவிவரங்களை செய்யும் தொழிலில் இருந்தால், சுக்கிர ஓரையில் ஆரம்பியுங்கள். நிச்சயம் தொழில் வளர்ச்சி பெறும்.
- பணம் சம்பந்தமான விவகாரங்கள்
சுக்கிரன் பணத்தின் அதிபதி என்பதால் சுக்கிர ஓரைக்கும், பணத்திற்கும் நிறைய தொடர்புகள் உண்டு. நீங்கள் யாரிடமாவது கடன் கொடுத்து வசூலிக்க முடியாமல் இருந்தால், அந்த நபரை சுக்கிர ஓரையில் சந்தியுங்கள். பணம் திரும்ப வரும் வாய்ப்பு அதிகம்.
- குழுவாக செய்யும் வேலைகள்
நண்பர்கள், குடும்பத்துடன் சேர்ந்து செய்யும் யோகா வகுப்பு, கூட்டமைப்புகள், இனிப்புகள் தயாரிப்பு, மற்றும் வெளியூர் பயணம் போன்றவற்றை இந்த ஓரையில் ஆரம்பித்தால் நல்ல பயனளிக்கும்.
- எதை தவிர்க்க வேண்டும்?
சுக்கிர ஓரை ஒரு பூரணமான நல்ல நேரம் என்றாலும், ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் – மருத்துவ சிகிச்சைக்காக, குறிப்பாக கண் சிகிச்சைக்கு புறப்பட வேண்டாம். மற்றபடி, எல்லா வேலைகளுக்கும் இந்த ஓரை ஏற்றதுதான்.
செய்யவேண்டியவை தவிர்க்கவேண்டியவை
- திருமண பேச்சுக்கள் கண் சிகிச்சை
- ஷாப்பிங், பரிசுகள் அவசர மருத்துவ விசிட்கள்
- கலை நிகழ்வுகள் ஆரம்பம்
- விருந்துக்கு செல்லல்/அளித்தல்
- வாகனம்/மாடுகள் வாங்கல்
- தொழில் தொடக்கம்
- கடன் வசூலிப்பு முயற்சி
வாழ்க்கையில் ஒவ்வொரு முடிவும் சரியான நேரத்தில் எடுத்தால் தான் அதன் வெற்றி நிரூபிக்க முடியும். அந்த நேரங்களில் சுக்கிர ஓரை மிகவும் முக்கியம் வாய்ந்தது. உங்கள் வாழ்வில் சந்தோஷம், வெற்றி, அமைதி மற்றும் வளர்ச்சியை வேண்டுமா? அப்படியானால் அடுத்த முறை முக்கியமான ஒரு வேலை தொடங்கும் முன், சுக்கிர ஓரை எப்போது என்பதை பார்த்துவிட்டு துவங்குங்கள்!


